Monday, January 9, 2012

ஆட்டோ எக்ஸ்போ டெல்லி 2012 !

டெல்லியில் பிரகதி மைதானத்தில்  இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ எனும் மோட்டார் வாகன கண்காட்சி 
மிகப் பிரபல்யம்!

வாகனத் தயாரிப்பாளர்கள் எதிர்காலத்தில் தாங்கள் உருவாக்கப் போகும் 
வாகனங்களை அறிமுகப்படுத்தும் காட்சி இது!

இந்த வருடம் சுமார் 32 வாகனங்கள் இங்கு அறிமுகப்படுத்த இருக்கின்றன!
அதிலும் 8 வாகனங்கள் உலக அளவிலான முதல் அறிமுகம்!

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான கண்காட்சித் திடல் இது! சதுர மீ 
ரு 11000  முதல் 14500 வரை,இட வாடகை!


மாருதி எர்டிகா 

இனிவரும் காலம் மினி SUV க்களின் காலம்! கிட்டத்தட்ட எல்லா தயாரிப்பு 
நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு 7 ,8 பயணிகள் அமரக் கூடிய 
அளவிற்கு மினி இன்னோவா மாதிரியான வாகனங்களை சுமார் ரூ 8 - 9 
லட்ச விலை அளவில் வெளியிட இருக்கின்றன!

அனைவரையும் கவர்ந்தது மாருதி நிறுவனத்தின் எர்டிகா! 1 .3 லிட்டர் டர்போ
எஞ்சின்/ 89 BHp சக்தி/ 18 கிமி லிட்டர் /டீசல் /ஏப்ரல் விற்பனை வெளியீடு!

Maruti Ertiga Review and Images


மாருதிக்கு நல்ல போட்டி என்றால் அது போர்ட் கம்பெனியின் எகோ ஸ்போர்ட்!
5 பயணிகள் மட்டுமே அமரக்கூடிய SUV இது! பெட்ரோல் ,டீசல் இரண்டு மாடல்களிலும் வரப்போக்கிறது! அதிலும் பெட்ரோல் எஞ்சின் மிகவும் சிறியது!
ஆனால் மிக்ஸ் சக்தி வாய்ந்தது !

போர்ட் எகோ ஸ்போர்ட்



Ford EcoSport Review and Images


அசோக் லேலேண்டின் ஸ்டைல்! 


Ashok Leyland Stile Review and Images

இதைப் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை!

சிரிய கார்களில் ரெனால்ட் பல்ஸ் ஓரளவு கவர்கிறது!
மாருதி ஸ்விப்ட் காருக்குப் போட்டி! 1460 சிசி /டீசல் /18
கிமி லிட்டருக்கு !

Renault Pulse Review and Images

வெஸ்பா LX125 



உலக அளவில் மிகப் பிரபல்யமான இத்தாலியின் வெஸ்பா நிறுவனம் 
13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்தியாவில் ஸ்குட்டர்களை விற்பனை செய்யவிருக்கிறது! 125 சிசி திறன் வாய்ந்தவை இவை!

மற்றவை அடுத்த பதிவில்!

வணக்கம் !

ரமேஷ் வெங்கடபதி!

13 comments:

  1. பதிவை விடுங்க.. பிளாக் லே அவுட் டிசைன் , அந்த கடல் கலக்கல்

    ReplyDelete
  2. பயனுள்ள தொகுப்பு. நல்ல முயற்சி!வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. சி.பி.செந்தில்குமார்ji!

    அலங்காரம் மட்டும் நல்லா இருக்கு..விஷயம் இல்லேங்கிறீங்க!..ஓகே..ஓகே..சரி பண்ணிடலாம்!

    ReplyDelete
  4. சு. திருநாவுக்கரசு Sir!

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. mohandivya sir!

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  8. படங்களுடன் விளக்கம் மிக மிக அருமை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. நீங்க என்ன கார் வைச்சிருக்கீங்க சார் ... ?

    ReplyDelete
  10. Advocate P.R.Jayarajan sir!

    swift dezire, chevvy beat!

    ReplyDelete
  11. Ramani sir!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. @ ரமேஷ் வெங்கடபதி
    Advocate P.R.Jayarajan sir!
    //swift dezire, chevvy beat!//

    Very Nice...

    ReplyDelete