தற்கொலை பூமியாம் தஞ்சையில்..ஆறுகளில் சில இடங்களில் தடுப்பணைகளில் சிறிது நீர் தேங்கி உள்ளது..இனி இரண்டு வாரங்கள் சென்றால்..அவையும் ஆவியாகிவிடும்!அதுவும் மேல் ஆயக்கட்டுகளில் தான் இந்த நிலை!..நாகை..திருவாரூர் போன்ற வடிகால் பகுதிகளில் வயல்வெளிகளில் நிஜமாகவே மாடுகள் மேய்ந்து வருகின்றன!
அந்த சோகத்தைப் படம் எடுக்க மனம் சிறிதும் ஒத்துழைக்கவில்லை..!
தஞ்சை விவசாய மக்கள் ஏற்கெனவே சிறுகடன் வலையில் சிக்கித் தவிப்பவர்கள்! பயிர் செத்ததால்..கடன் பயங்கரம் வட்டியுடன் வந்து கண்முன்னே கூத்தாடுவதால்..வழி தெரியாமல் உயிர்கள்செத்துக் கொண்டிருக்கின்றன..தவணை முறையில் !
மக்கள் சந்திப்பு..அவசியம் தேவை..இக்கணம்!
அரசு மறுக்க, மண்ணின் மைந்தன் பேனாவில் மட்டுமே கண்ணீர் வடிக்க, எதிர்க்கட்சி இயங்காமல் இருக்க.அம்மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லுவது யார்?
எப்போதும் " மிஸ்ஸிங் டைமிங்" போராட்டப் புயல் தலைவர்!
தஞ்சை தரணி தண்ணீர் இன்றி காய்கிறது. அங்கு சென்று மக்களை சந்திக்கலாமே!
தானைத் தலைவர் தன் படைப்பரிவாரங்களைக் கொண்டு..தில்லியிடம் பேசி..நிவாரணங்களைப் பெற்றுத் தரலாமே !
ஆள்வோர் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு..பயிர்கடன், டீசல் மானியம், போன்ற மற்ற உதவிகளை செய்யலாமே..முழுவீச்சில் !
சுனாமி, வெள்ளம் போல மழைஇன்மையும் அதனால் வரும் பஞ்சமும் ..ஒரு பேரிடர் தான்!
தஞ்சை விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர்....!
நாங்கள் இருக்கிறோம்..நம்பிக்கை இழக்காதீர் என தஞ்சைவிவசாயிகளை மட்டுமல்ல..தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஆறுதல் கூற வேண்டிய கடமை..மத்திய, மாநில ஆள்வோருக்கு உண்டு!

விவசாயத் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்..அது நம் முதல்வர் கையில் தான் இருக்கிறது..! விதைத்த செலவையாவது மானியமாகக் கொடுத்தேயாக வேண்டும்!
இந்த தடவை நாம் விவசாயியைக் கைவிட்டோமானால் ..விவசாயமே செத்துவிடும்..!
நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழக விவசாயிகள்!