Tuesday, December 25, 2012

தற்கொலை பூமியாகும் தஞ்சையில்...!

தற்கொலை பூமியாம் தஞ்சையில்..ஆறுகளில் சில இடங்களில் தடுப்பணைகளில் சிறிது நீர் தேங்கி உள்ளது..இனி இரண்டு வாரங்கள்  சென்றால்..அவையும் ஆவியாகிவிடும்!அதுவும் மேல் ஆயக்கட்டுகளில் தான் இந்த நிலை!..நாகை..திருவாரூர் போன்ற வடிகால் பகுதிகளில் வயல்வெளிகளில் நிஜமாகவே மாடுகள் மேய்ந்து வருகின்றன!

அந்த சோகத்தைப் படம் எடுக்க மனம் சிறிதும் ஒத்துழைக்கவில்லை..!

தஞ்சை விவசாய மக்கள் ஏற்கெனவே சிறுகடன் வலையில் சிக்கித் தவிப்பவர்கள்! பயிர் செத்ததால்..கடன் பயங்கரம் வட்டியுடன் வந்து கண்முன்னே கூத்தாடுவதால்..வழி தெரியாமல் உயிர்கள்செத்துக் கொண்டிருக்கின்றன..தவணை முறையில் !

மக்கள் சந்திப்பு..அவசியம் தேவை..இக்கணம்!
 அரசு மறுக்க, மண்ணின் மைந்தன் பேனாவில் மட்டுமே கண்ணீர் வடிக்க, எதிர்க்கட்சி இயங்காமல் இருக்க.அம்மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லுவது யார்?

 எப்போதும் " மிஸ்ஸிங் டைமிங்" போராட்டப் புயல் தலைவர்!
தஞ்சை தரணி தண்ணீர் இன்றி காய்கிறது.     அங்கு சென்று மக்களை   சந்திக்கலாமே!


தானைத் தலைவர் தன் படைப்பரிவாரங்களைக் கொண்டு..தில்லியிடம் பேசி..நிவாரணங்களைப் பெற்றுத் தரலாமே !

 ஆள்வோர் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு..பயிர்கடன், டீசல் மானியம், போன்ற மற்ற உதவிகளை செய்யலாமே..முழுவீச்சில் ! சுனாமி, வெள்ளம் போல மழைஇன்மையும் அதனால் வரும் பஞ்சமும் ..ஒரு பேரிடர் தான்!
தஞ்சை விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர்....!

நாங்கள் இருக்கிறோம்..நம்பிக்கை இழக்காதீர் என தஞ்சைவிவசாயிகளை மட்டுமல்ல..தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஆறுதல் கூற வேண்டிய கடமை..மத்திய, மாநில ஆள்வோருக்கு உண்டு!

 


விவசாயத் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்..அது நம் முதல்வர் கையில் தான் இருக்கிறது..! விதைத்த செலவையாவது மானியமாகக் கொடுத்தேயாக வேண்டும்!

இந்த தடவை நாம் விவசாயியைக்  கைவிட்டோமானால்   ..விவசாயமே செத்துவிடும்..!

நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழக விவசாயிகள்!


14 comments:

 1. உண்மையில் ஒவ்வொரு கவளம் உண்ணும்போதும்
  நமக்கெல்லாம் மனம் அறுக்கவேண்டும்
  எனக்குத் தெரிந்த தஞ்சையில் விவசாயத்தால் செல்வாக்காய் இருந்த
  இரண்டு குடும்பங்களின் வாரீசுகள் மில்லில்
  லேபராக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
  அவர்கள் வருடாவருடம் தேய்ந்த கதை
  ஒரு அவல நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் கொண்டது
  தங்கள் பதிவு அந்த நினைவுகளைக் கீறிப்போனது
  அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி


  ReplyDelete
  Replies
  1. விளக்கணைத்து தொழில் எங்கும் முடங்கியதுஇ ! அணைஅடைத்து கழனியும் காய்ந்தது !
   இனி ஒரு வருடம் பொறுத்திருக்கத் தான் வேண்டும்!
   கருத்துக்கு மிக்க நன்றி சார்!

   Delete
 2. //விதைத்த செலவையாவது மானியமாகக் கொடுத்தேயாக வேண்டும்!//

  இப்படிப்பட்ட கோரிக்கை,-

  மனதை கலங்க வைக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. அரசு கஜானாவைத் திறந்து,,கருணை காட்டினால்..விவசாயத்திற்கு உயிர்மூச்சு கொடுக்கலாம்!

   கருத்துக்கு மிக்க நன்றி சார்!

   Delete
 3. மனம் கலங்குகிறது அய்யா

  ReplyDelete
  Replies
  1. விரைவில் இதுவும் பழகிவிடும் என்றே எண்ணுகிறேன்..!

   கருத்திட்டமைக்கு நன்றி..வணக்கம்!

   Delete
 4. வேதனையான விசயம்! இதில் அரசியல் பேசாமல் விவசாயிகள் நிவாரணத்தையே முக்கியமாக கருத வேண்டும் நமது தலைவர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தம் ஆதாயம் பெறவே அரசியல் செய்கின்றனர்..சிலசமயம் செய்யாமலிருக்கின்றனர் !
   கருத்திட்டமைக்கு நன்றி..வணக்கம்!

   Delete
 5. அரசு இலவசங்களை நிறுத்தி அந்தப் பணத்தில் விவசாயிகள் துயரம் துடைக்கலாம்;இதை அனைவரும் வலியுறுத்த வேண்டும்.

  ReplyDelete
 6. இலவசங்களை நிறுத்தி இந்தப்பனத்தில் விவசாயிக்கு மானியம் தரலாம்,இதை அனைவரும் வற்புறுத்த வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாகச் சொன்னீர்கள்..! இனி..இங்கு இலவசங்களை அகற்றுவது எளியக் காரியம் அல்ல!

   கருத்துக்கு மிக்க நன்றி சார்!

   Delete
 7. மூன்றாம் உலக மகா யுத்த்ஹமும் நீருக்காகத்தான் என்று பேசிக் கொள்கிறார்கள்...
  விவசாயிகள் சுமை போக்க அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்

  ReplyDelete
  Replies
  1. ஆம். மற்ற நீராதாரங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும்..! பெய்யும் மழையில் எந்தத் துளியும் மீண்டும் கடலுக்குச் செல்லக் கூடாது!

   கருத்துக்கு மிக்க நன்றி சார்!

   Delete
 8. மிகவும் வேதனைக்குரிய விஷயம்......

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete