Sunday, September 9, 2012

அஷ்வினுக்கு ஆபத்தா..இலங்கையில்?

 அடுத்த ஒரு வாரத்தில்..இலங்கையில் துவங்க இருக்கும்..ஐசிசி 20ஓவர்  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலைத் தூண்டியுள்ளது!

ஆனால் காலாண்டு தேர்வு சமயத்தில் இப்போட்டிகள் தொலைக் காட்சியில் ..அதுவும் படிக்கும் நேரத்தில் காட்சிக்கு வருவது.. பெற்றோருக்கு மிகுந்த எரிச்சலைத் தரக்கூடிய ஒன்றாகும்!

 20 ஓவர் போட்டிகளைப் பொறுத்த வரை,யார் ஜெயிப்பார்கள் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்! குறைவான நேரத்தில்..விரைவாக ஆட வேண்டும் எனும் நிபந்தனை..வீரர்களின் இயல்பான ஆட்டத்தை பாதித்து விடுவதால் ..ஆட்டத்தின் போக்கை முன்னரே கணிக்க முடிவதில்லை..பெரும்பாலும்! சிறுசிறு தவறுகள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்து விடுகிறது!

இந்திய அணி சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு சற்று துடிப்புடன் இருப்பதைப் போல் காணப்படுகிறது!
ஆனால்..இந்திய அணியில் ரசிகர்களின், "பார்வைக் குவியம்" மூன்று முக்கிய வீரர்களின் மீது படிந்து இருக்கிறது!

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையை அயல்நாட்டில் பெற்று மீண்டு வந்திருக்கும்..பஞ்சாப் சிங்கம்..இந்திய அணியின் காதல் நாயகன்..யுவராஜ்சிங்! மக்கள் தன் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி சொல்லி அனுதாபப் பார்வையை உடைத்தெறியக் காத்திருக்கிறார்..அவருக்கு நம் வாழ்த்துகள்!

ஃபார்ம் இழந்து கேவலப்பட்டுப் போன..தோனியின் கார் நண்பன் ஹர்பஜன்சிங்..சமீபத்தில் தான் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து விட்டு வந்துள்ளார்! வாய்ஜாலக் கில்லாடி மட்டுமல்ல..என்னுடைய கையும்  ஜாலம் புரியும் என சுழற்றிய படியே காத்திருக்கிறார்..பந்தை!

 அஷ்வினுக்கு ஆபத்தா..இலங்கையில்?

ராஜீவ்காந்திக்கே சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்துவிட்டு, அணிவகுப்பு மரியாதையின் போது..சிப்பாயை விட்டு துப்பாக்கிக் கட்டையை, தலை மீது தாக்கத் துணிந்த..ராஜதந்திர மிக்க இலங்கை அரசிடம்..நாம் எதையுமே எதிர்பார்க்கலாம்!

சமீபகால சிங்கள பயணிகள் எதிர்ப்பு நிலையை எடுத்துவரும் தமிழக அரசு மற்றும் இன உணர்வு சக்திகளின் நடவடிக்கைகள்..இனவாத சிங்கள அரசுக்கு கடுப்பைக் கொடுத்திருக்கும் என்பது வெளிப்படை!
பழிக்குப்பழி நடவடிக்கைக்காகவும்..அடையாள எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவும்..இந்திய அணியின் தமிழக வீரர் அஷ்வினை..யாரையாவது விட்டு, தாக்க திட்டமிடக்கூடும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்! மேலும் இப்போட்டியைக் காணச் செல்லும்..தமிழக ரசிகர்கள் மேலும்..ஏதேனும் தாக்குதல் நடக்கலாம்!


 சிங்கள அரசின் அயோக்கியத்தன்மையைக் கொண்டே..இவற்றையெல்லாம் யூகிக்க வேண்டியுள்ளது..!

எதுவும் நடக்காமல் இருந்தால் மகிழ்ச்சி...நடக்காமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்!

புத்தம் அங்கு இல்லையாததால்...சரணம்..கந்தசாமி!
9 comments:

 1. தங்களது பிளாக்கை 08.98.2012 ல்தான் எனது பார்வைக்குக் கிடைத்தது.அதில் எல்ஐசி படித்தேன்
  வாழ்க வளமுடன்.
  கொச்சின் தேவதாஸ்.

  ReplyDelete
 2. புத்தம் அங்கு இல்லையாததால்...சரணம்..கந்தசாமி!
  ....சரியாகச் சொன்னீர்கள்

  ReplyDelete
 3. இன்றைய நிகழ்வுகள் என்கிற பாணியில்
  உடன் நிகழ்வுகளை அலசிச் செல்வது
  பத்திரிக்கைகளில் தலையங்க்கள் படிப்பதைப்போல
  பயனுள்ளதாக்வும் தேவையானதாக்வும் உள்ளது
  சொல்லிச் செல்லும் விதம் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. devadass snr Sir!

  தங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது! நன்றி!

  ReplyDelete
 5. கரந்தை ஜெயக்குமார் Sir!

  தங்களைப் போன்ற சான்றோரின் கருத்துகள் மிகவும் ஊக்கத்தைத் தருகிறது..நன்றி!

  ReplyDelete
 6. Ramani Sir!

  சுணங்கி இருக்கும் பல பகுதி நேர பதிவர்களை..வாழ்த்தி உரமேற்றும் தங்கள் பணி போற்றத்தக்கது.நன்றி!

  ReplyDelete
 7. அட புது தகவலா இருக்கே! செய்தாலும் செய்வார்கள்! நல்ல பதிவு!

  இன்று என் தளத்தில்!
  பாதைகள் மாறாது! சிறுகதை
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html  ReplyDelete
 8. ------------- ---------------------------------- ---------------
  உங்கள் பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் சகோ...
  -------------------------------------------------- ---------- --

  ReplyDelete