Wednesday, December 28, 2011

வெஸ்டர்ன் இசைக்குயில்கள் 2011 !

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இசை !
ஆனந்தப்படுத்தவும் 
அமைதிப்படுத்தவும் !
ரசிப்பவன் 
மனிதன் ..ஏன் மாடுகளைப் போன்ற 
மிருகங்களும் ரசிக்கும் !
சில மனிதமிருக பிறவிகளுக்கு இசை ரசிப்பதில்லை!

நல்ல ரசிகனின் அடையாளம் 
வகை, பால்,இன,மத,மொழி,நாடு ..மற்றும் 
எந்தவித பேதமின்றி 
மனதிற்கு பிடித்ததை விரும்புவது!

வல்லிசை மெல்லிசை குத்து என சகலத்தையும் 
சிறப்பு அல்லது குப்பை என பதம்பிரித்து ரசிக்கவேண்டும்!

70 , 80 களில் எல்விஸ் ,அபா,போனி எம் ,
ரோலிங்க்ச்டோன்ஸ் போன்ற மிகச்சிறந்த மேற்கத்திய 
இசைத் தொகுப்புகள் வெளிவந்து உலகெங்கும் மக்களைக் 
கிறங்கடித்தது! டேப் ரிகார்டர் அறிமுகத்திற்குப்பின் 
இந்தியாவையும் மேற்கத்திய இசை மோகம் பிடித்தாட்டியது!
இளையராஜா வந்துதான் மேற்கத்திய,ஹிந்தி இசைமோகத்தை
தமிழகத்தில் இருந்து விரட்டினார்! 

முடிஸூடா மன்னன் மைக்கில் ஜாக்சன் ஆதிக்கம், பாதிப்பு சுமார் 20 
ஆண்டுகாலம் மேற்கத்திய இசையில் பரவி கிடந்தது! மடோனா,ஜானெட் 
போன்றவர்களும் ஜொலித்தனர்!டிஸ்கோ சென்று ராப் வந்தது !

ஆனால் அனைத்து ஆல்பத்திலும் ஓரிரு பாடல்களே கேட்கும்படி 
இருந்தது! இசையைக் கேட்க  ஏங்க்கும் காலம் சென்று கைநுனியில்
உலகிசை அடங்கியபின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து அதற்கேற்ப 
புது இசை படைக்க உலகெங்கும் திணறி வருகின்றனர்!

குறிப்பாக மேற்கத்திய இசை உலகில் மெத்தனமே நிலவுகிறது!
உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இசைத்தொகுப்புகள் 
அறிமுகமாவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்!


பிட்புல் 

ஓரளவு ரசிக்கத்தகுந்த இசையை இவர் கொடுத்துக் கொண்டுள்ளார்!
30 வயதான் அமெரிக்காவின் மியாமியை சேர்ந்த இவர் ராப் இசை நிபுணர்!
பிட்புல் என்பது ஒருவகை நாயின் பெயர்! ஒரிஜினல் அர்மேண்டோ கிறிஸ்டியன் பெராஸ்!


இவருடைய சமிபத்திய ஸுப்பர்ஹிட் பாடல் ஒன்றை இங்கு கண்டு 
கேட்டு மகிழுங்கள்!ரிஹான்னா 

மேற்கிந்திய தீவு பார்படாசை சார்ந்த கறுப்பின கட்டழகி !
23 வயது கறுப்புக் குயில் பாப் வகை இசையைத் தருகிறது !

 

இவருடைய மிகவும் பிரபலமான பாடல் கீழே!


மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளுடன்

அன்பன் ,

ரமேஷ் வேங்கடபதி 


Monday, December 26, 2011

நட்புக்கும் உண்டு ....!

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும்  வந்தனம்!

சனி பெயர்ந்து, கிறிஸ்து பிறந்து புது வருடத்தை 
எதிர் நோக்கிமகிழ்வுடன் காத்திருக்கும் 
அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்! 

நட்பு ..பு..பூ !

ஆம் ..இது ஒரு பூ தான்!

ஆனால் தானாகப் பூக்கும் பூ ! திணிப்பூ அல்ல!


நட்பை எப்படி பூ என்கிறோமோ ,
அதன்படி அதைக் காணும்போது மலர்ச்சியும்,
இருக்கும்போது வீசி, 
சென்றபின்னும் நாசியில் 
உறைந்து நிற்கும் நறுமணமும் !

பூவின் இலக்கணம்  கவர்ச்சியே! 
அதுவே நம்மை அதன்பால் இழுக்கிறது!
ஆனால் பூக்களின் ஈர்ப்பு மனதின் கட்டுபாட்டில்!

மரமோ செடியோ அது நாமே!
சூழ்நிலைகள் எனும் உரத்தால்
அபிமானம் எனும் மகரந்த சேர்க்கையால் 
மலரும் பூவே நட்பு...பூ !


நட்பின் வாழ்நாள் மலர்களின் வாழ்நாளைப் போலவே!
மலருக்கு மலர் நாட்கள் வேறுபடும்!
மலரும் மலர்கள் அனைத்தும் 
காயாவதில்லை ..
பழமாவதில்லை ..
விதையாவதில்லை ..மறுவிருட்சம் ஆவதில்லை!

நெடுநாள் தொடரும் நட்பே மறுவிருட்சம்!
பெரும்பாலானவை பூக்களே!

அகத்தில் புறத்தில் 
சாலையில் கல்விச்சாலையில் 
பணிக் கூடத்தில்
போக்கில் பொழுதுபோக்கில் 
சுகத்தில் துக்கத்தில் 
அருகில் தொலைவில் 
மலரும் பூ .. நட்பு !

அபிமானத்தில் நட்பு பூக்கத் தேவையான 
சூரிய ஒளியைத் தருவது
அலைவரிசை !

நட்பு என்பது யாதெனில் 
ஒருமுக விருப்பத்தையும் பிரேமையையும் 
அபிமானத்தையும்
கொண்ட இதயங்களில் 
சூழ்நிலைகளால் ஏற்படுவது !
அவைகள் மாறுபடும்போது வாடுவது ..வாடினாலும் 
மணம் வீசுவது !

நட்புக்கும் உண்டு 
சட்டங்கள் விதிகள் 
இலக்கணங்கள் !

பூ ..மறுவிட்சமாக கண்டிப்பாகத் தேவை 
தன்னலமில்லா பராமரிப்பு !


 
Wednesday, December 14, 2011

புதுசு கண்ணா புதுசு !

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு!

புதுசு ..யாருக்குப் பிடிக்காது? அதுக்காக
பழசு யாருக்குமே புடிக்காதுன்னு அர்த்தமாகாது!
என்ன பழசும் ஒரு காலத்துல, புதுசாத்தான் இருந்திருக்கும்!
ஆனா நாம அதுகூட பழகி பழகி பழசாயிருக்கும்!

புதுசுன்னு எப்படித் தெரியும்னா ..
மனசுக்குள்ள மலர்ச்சியைக்
கொண்டு வர்றதெல்லாமே புதுசுத்தான்!
உறவு , குழந்தை , துணிமணி, வாகனங்கள், வசதிகள்,
மழை, ஊர் ,வசிப்பிடம் இப்படி எவ்வளவோ...
சொல்லிட்டே போகலாம்!

புதுசுகள மனசுக்கு ஏன் புடிக்குதுன்னா..
வட்டத்துலையே வளைய வரதுன்னால,
நம்மகூட இருக்குற பழசு மேல ஒரு சின்ன சலிப்பு!
நான் சொல்ல வந்தது நம்ம உடம்பப் பத்தி !எப்பவுமே மனசு மட்டும் பழசு ஆகறது இல்ல ..!
ஆகவும் கூடாது !
மனசும் உடம்பும் பழகரதுல உடம்பு மட்டும் பழசாயிடுது!

உடம்பு பழசாகுரத தடுக்க முடியாது !
ஆனா தள்ளிப் போடலாம்!
எப்படின்னா.... மனச புதுசாவே வெச்சுக்கணும்!

மனசு புதுசாவே இருக்கணும்னா ..அதுக்கு
இதமா சேதி சொல்லிட்டே இருக்கணும் !இன்னிக்கு நம்ம மனசு இதமா இருக்குற மாதிரி ஒரு சேதி கிடைச்சது !

சொல்லப்போனா..குடும்பத்துல, நட்புல,ஊர்ல உறவுல ..எங்கேயாவது
நம்மள பாதிக்கிற மாதிரி ஒன்னு நடந்த்ததுன்னு யோசிச்சோம்னா ..
அங்க "கேன்சர் /புத்து நோயோட "பங்கு கண்டிப்பா இருக்கும்!

உடம்புல வர்ற 70 சத கேன்சர் நோய் வகைகள, வராம தடுக்குற மாதிரி,
ஒரு "ஸுப்பர் வேக்சினை " அமெரிககா ஜியார்ஜியா பலகலையில கண்டு பிடிச்சிருக்காங்க! 2020 ம் வருஷத்துல நடைமுறைக்கி வந்துடும்னு சொல்லியிருக்காங்க!

ஏதோ காரணத்தால உடம்புல ஒரு பகுதி செல்லுங்க கன்னாபின்னான்னு முறையற்ற வளர்ச்சி அடைஞ்சி, அந்த பகுதிய செயலிழக்க செய்யறது : பிறகு குளுக்கோஸ் முகமுடி போட்டுக்கிட்டு ,நோய் எதிர்ப்பு அரணுக்கு டிமிக்கி கொடுத்துட்டு மத்த பக்கமும் பரவ ஆரம்பிச்சுடுது !

இந்த வேக்சின், இந்த மாதிரி "ரோக் செல்கள " கண்டு பிடிக்க, நோய் எதிர்ப்பு அரணுக்கு சொல்லி கொடுத்து, பெரும்பாலானவற்றை அழிச்சு உடம்ப காப்பாத்திவிடுது!

இந்த புது சேதி சொன்னது ஹிந்து பிசினஸ் லைன்!
மனசுக்கும் உடம்புக்கும் இதமான சேதி!

மனசுக்கு இதமா ஒரு பாட்டு பாருங்க!
Sunday, December 4, 2011

பேரின்ப விலாசம்!

 இரவில் நிலவொளி இனிதென்பர் !
கோடையில் நிழலும்
வாடையில் குளிரும்
கருத்த மேகமும் அதையொத்த
கூந்தலில் பூக்களும்
மழையால் மணக்கும் மண்
நடுங்கும் பனியும்
பனியில் நனைந்த காலையும்
இனிதென்பர்!

நட்பின் நேசம் இனிதென்பர்!
தாயின் மடி பாசம்
தந்தையின் மன பாசம்
சேலையில் தெரியும் வண்ணங்கள்
வேட்டியின் வெண்மைகள்
மகளின் முத்தங்கள்
மகனின் தோள்கள்
பெயரர்களின் பாதங்கள்
சுகமென்பர்!

பரதமும் நாதமும் இனிதென்பர்!
கீசிடும் பறவைகள்
மானும் மயிலும் செல்ல பைரவரும்
கன்றுக்குட்டியின் கண்
பச்சை வயல்களும்
சோலைகள்
காண இனிதென்பர் !

வானொலியும் காண் ஒளிகளும் இனிதென்பர்!
இளமையும்
இளமையின் வாளிப்புகளும்
வண்ணங்களும்
வர்ணிப்புகளும்
வடிகால்களும்
பரமானந்தமே என்பர்!

அள்ளக்குறையா வளம் இனிதென்பர் !
கைக்கெட்டும் தூரத்தில்
அலங்காரங்கள்
அழகுகள்
பயணங்கள்
மயக்கங்கள்
அருமைஎன்பர்!

பரம்பொருளின் உறைவிடங்கள் இனிதென்பர்!
அதற்கு போட்டியிடும்
தத்தமது குருவிக் கூடுகள்
கிராம தேவதைகள்
திருவிழாக்கள்
வேடிக்கைகள்
சீண்டல்கள்
சண்டைகள்
வாழ்வென்பர்!

நாம் அழ ஆரம்பித்து
நமக்காக
அழுது முடிக்கும்வரை
இயற்கையோடு  கலந்தவை
இரண்டு சுகங்கள்!

பேதமில்லா ஆருயிர்க்கும்
வேண்டும்
கிடைக்கும்  சுகங்கள்!மறுமை உலகை யாரும் கண்டிலோம்!
பிறந்த உலகே
நமக்கு பேரின்ப லோகம் !
அதற்கு விலாசங்கள்
நாளின்  முப்பெரும்   பொழுதில்
விருப்ப உணவும்
தற்காலிக மரணமான உறக்கமும் !

இயற்கையின் சுகமொன்று உண்டெனினும்
அது சுகமானந்தம்!

எந்நாளும் நித்திரை ராணியின் அரவணைப்பும்
முப்பொழுது அன்ன மாதாவின் அருளுமே
பரமானந்தம்!