Monday, December 6, 2010

சாமியும் சடங்குகளும் !

பரமாத்மாவை அடைய உண்மையான பக்தி மார்க்கமே, சிறந்த வழி! சடங்குகள் அல்ல!

இந்து தர்மத்தில் ஒரு கூற்று உள்ளது! இஷ்ட தெய்வம் என்பதுதான் அது!

பரமாத்மாவை உன் விருப்பப்படி வணங்கிக் கொள் என்பதே அதன் விளக்கம்!
அதுவே இந்து தர்மத்தின் சிறப்பு!

சரணாகதி தத்துவம் போதிப்பதும் அதுவே!

மீண்டும் ஒருமுறை -

சடங்குகள் முக்கியமல்ல! பரமாத்மாவை அவரவர் விருப்பப்படி உணர்ந்து, ஆனந்தம் அடையலாம்!

Wednesday, July 28, 2010

சாமி யார்?

உண்டு என்பது ஆன்மீகம்!
இல்லை என்பது நாத்திகம்!
உண்டா, இல்லையா? என்பதே பகுத்துவம்!

பக்தர் சொல்லுவது - இந்த பிரபஞ்சத்தை படைத்து, பஞ்சபூதங்களைப் படைத்து, ஜீவராசிகளைப் படைத்து விளையாடுபவன் கடவுளே! கடவுள் சக்தி ரூபம்! சக்தியை உணர முடியுமே தவிர, நேரில் காண முடியாது!கடவுள் பரமாத்மா! நாம் ஜீவாத்மா! மரணத்திற்கு பிறகு ஜீவன், பரமனுடன் கலக்கிறது!

நாத்திகர் கூற்று - கடவுள் இல்லவே இல்லை! அனைத்தும் கட்டுக்கதை! காலம் காலமாகத் தொடரும் மூடநம்பிக்கைகளின் கதை! அனைத்தையும் படைத்தவன், கடவுள் எனில், கடவுளின் மூலாதாரம்?

பகுத்தாய்வு!
அறிவியல் நிருபிக்காதவரை, கடவுளை ஏற்பது சிரமம்!
கடவுள் ஒருவரா,பலரா? ஒவ்வொரு மதமும் ஏன் கடவுளை விதம் விதமாக சித்தரிக்கிறது? ஒரு மதத்தின் கடவுள், மற்ற மதக் கடவுளுக்குப் பகையா/நட்பா?

இந்த பிரபஞ்சத்தில், ஒவ்வொரு அணுவும்/உயிரும், பிறவி/வாழ்நிலை/அழிவு எனும் சக்கரத்தில், சுழலுகிறது! இதற்கு யார் காரணம்! ஆன்மீக விதியா? அறிவியல் விதியா?

Sunday, July 4, 2010

இலங்கைக்கு ஆப்பு வைக்க!

அமெரிக்காவுக்கு க்யூபா, சீனாவிற்கு தைவான் வரிசையில் இந்தியாவிற்கு இலங்கை மாறிவிடும் சூழல் இப்போது! க்யூபாவிற்கு ரஷ்யா உதவி, தைவானுக்கு அமெரிக்கா வரிசையில், இப்போது இலங்கைக்கு சீனா உதவி!

ஐ.நா சபை பாதுகாப்பு கௌன்சிலில், நிரந்தர உறுப்பினர் பதவியை அடையும் வரை,இந்தியா நல்லவன் வேஷம் போட்டேயாக வேண்டிய சூழ்நிலை!

இலங்கயைக் கட்டுப்படுத்த,நாம் செய்ய வேண்டியவை!
1. பொருளாதாரரீதியில் பயனில்லையெனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, சேது திட்டத்தை செயல்படுத்தி,கப்பற்படையை உலவ விட வேண்டும்!
2.குளச்சல் துறைமுகத்தை பெரியதாக அமைத்து,வியாபாரக் கப்பல்களை வரவழைத்து, கொழும்பு துறைமுகத்தை,வலுவிழக்கச் செய்ய வேண்டும்!
3. இலங்கை அரசை நிர்பந்தித்து, அந்நாட்டின் கட்டமைப்பு சேவைகளான தொலைதொடர்பு, எண்ணை போன்றவைகளை இந்திய கம்பெனிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!
4.இலங்கை விவகாரங்களுக்காக, காரியக்குழு அமைத்து, தமிழக முதல்வர் தலைமை ஏற்கச் செய்ய வேண்டும்!(அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு - தமிழர் நலன் காண)
5.இலங்கைத் தமிழர் துயர் தீர்க்க, அரசியல்ரீதியாக நிர்பந்திக்க வேண்டும்!

Wednesday, June 30, 2010

மகிழும், நெகிழும் கோவை!

அரசியலாரால் திட்டமிடப்பட்டு , அதிகாரிகள்/அலுவலர்களால் செயல்படுத்தப்பட்டு ,விருந்தினர் வருகையால் சிறப்பிக்கப்பட்டு, கோவை மாநகரம் அழகுட்டப்பட்டு, வெள்ளமென திரண்ட மக்களால் வெற்றி கரமாக நடந்தேறியது செம்மொழி மாநாடு!

பல காலமாக ஒதுக்கப்பட்ட போதிலும், குண்டு வெடிப்பில் காயப்பட்ட போதிலும், உழைப்பால் உயர்ந்த கொங்குத் தலைநகர் கோவை, தனக்களிக்கப்பட்ட பரிசால், பெருமிதப்பட்டு,உவகையுடனும்,அழகுடனும் தெரிகிறது!

கோவையில், மக்கள் திரளாக ஒன்று கூடி, மகிழ்ந்ததும், நெகிழ்ந்ததும் இதுவே, முதன்முறை! திரள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுவது, கண் கொள்ளாக் காட்சி!

எம் மக்களின் நீங்கா நினைவில், செம்மொழி வெற்றி மாநாடு!

Tuesday, May 4, 2010

முதல் முயற்சி

வணக்கம் நண்பர்களே ! உங்களோடு என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி !