Tuesday, October 8, 2013

100.அகண்ட திராவிடம் ! சீமாந்திராவை தமிழகத்துடன் இணைத்து விட்டால்..!

சுப்ரமணியம் சுவாமியை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாது! யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர் பேச்சும்,வேலையும் ஏதாவது ஒரு மாற்றத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருக்கும் !

அடுத்து நம்ம "சோ" ராமசாமி சார் ! பல முகங்களைக் கொண்ட அவர், மறைமுகமாக எடுக்கும் அவதாரம்.."பவர் பாலிடிக்ஸ்" ! இவர் என்ன செய்யப் போறேன்னு பேச மாட்டார்..! என்ன செஞ்சார்னு தான், பேசப்படும் !

புதுசா தமிழருவி மணியன்..கிளம்பி இருக்கார் ! தமிழகத்தில்
மூன்றாவது அணி அமைச்சே தீருவேன்னு, ஒத்தைக்காலில் சுழல்கிறார்...விமரிசனங்களைக் கண்டு கொள்ளாமல்!

எப்பவாச்சும் வாய்ஸ் கொடுக்கிற டீம்லே...ரஜினி சார்,
வீரமணி அய்யா, தோழர் தாபா, மருத்துவர் அய்யா ...
இப்படி நெறைய தலை'ங்க,பெரிய தலைக்கட்டுக, இருக்காங்க!

இவங்க எல்லோரும் நமக்கு வாத்தியாருக மாதிரி!
எல்லோரையும் கும்புட்டுகிட்டு, சிலபல கருத்துகளை,
தமிழ் அரசியல் உலகத்துக்குக் கொடுக்கலாமுனு இருக்கேன்!

பக்கத்து ஸ்டேட் ஆந்திராவே.., பத்திட்டு எரியுது, பதறுது..
மாநிலப்பிரிவினை பிரச்சனையாலே !


நாம ஓரத்துல குந்திக்குனு, பல்லு குத்திக்குட்டு இருக்காம...
நோம்பி கும்பிட நேரம் வந்தாச்சு !
ஏன்னா...இது ஒரு திராவிடப் பிரச்சன'ங்கிறது ..
ஞியாபகத்துலே வரணும்!
திராவிடத்துலே நாம தானே
அப்பா...அண்ணன்...அய்யா எல்லாமே !



நாமளே சும்மா இருக்காலாகுமா?
அப்புறம் எப்படி திராவிடத் தலைமைன்னு
சொல்றது?


இது ஏதோ கட்சிக்காராளை சுதி ஏத்துறதுன்னு நீங்க நெனைச்சா..
கம்பெனி அதுக்கு பொறுப்பாகாது!
ஒவ்வொரு தமிழனும் திராவிடத் தலைவன் தான்!
மறுக்கமுடியாத உண்மை!
ஏன்னா...திராவிடம் என்கிற வார்த்தையை தமிழரைத் தவிர,
வேறு எந்த ஸ்டேட் மக்களும் 'யூஸ்" செய்யறதில்லை!
ஸோ...எல்லோரும் இந்நாட்டு மன்னருகங்கிறது மாதிரி...இப்படி!

100.அகண்ட திராவிடம் ! சீமாந்திராவை தமிழகத்துடன் இணைத்து விட்டால்..!

இந்த ஆந்திராக் காரனுக கிட்டே, நமக்கு தீர்க்க வேண்டிய 
கணக்கு ஒண்ணு, 1950களில்லே இருந்து இருக்கு !  
மொழிவாரி மாநிலம் பிரிச்சப்போ, ஒவ்வொரு ஏரியாவா 
மதராஸ் ஸ்டேட்லே இருந்து, 
ஆல் ப்ளடி அதர் லேங்குவேஜ் திராவிடியன்ஸ், 
கவர்ந்து கிட்டுப் போயிட்டாங்க !

அப்போ..திஸ் பேட் ஆந்திரியன்ஸ் செஞ்ச 
கழிச்சடைத் தனம், கொஞ்சநஞ்சமில்லை ! 
மதராஸ் மனதே'ன்னு, பொட்டி ஸ்ரீராமுலுன்னு ஒருத்தர்...
ரியலா உண்ணாவிரதம் எல்லாம் இருந்து, செத்துப் போனார்! 
அப்பவும் இப்படித்தான் ஆந்திரேயன்ஸ் 
ரொம்ப கந்திரித் தனமா ஆடுனாங்க!

நம்ம ராஜாஜி அய்யா தான்,...
"குறை இன்றும் இல்லை...மறை மூர்த்திக் கண்ணா'னு, 
பெருமாள் கிட்டே சொல்லிட்டு, திருப்பதியைக் கொடுத்திட்டு, 
மதராஸை நேரு கிட்டே பேசி, வாங்கிட்டு வந்தார்னு 
பெரிசுக சொல்லிட்டு இருப்பாங்க!

அவங்க அடிச்சுகிட்டு, இருக்கும்போது தான் நமக்கு சான்ஸ்! 
திராவிடப் பெருசுக யாராச்சும்..வாயத் தொறந்து பேசியே ஆகணும்!

அகண்ட திராவிடம் அமைக்கறதுக்கு, இதுவே நல்ல வாய்ப்பு!
எனவே, "  
தெலுங்கானா பிரிவினையைப் பற்றி, 
கவலை வேண்டாம் ..
சீமாந்திரக் கூடப் பொறப்பே ! 
அண்ணனோடு இணைந்து கொள்ளுங்கள்" 
என 32 சானலிலும்..அறைகூவல் விடுக்க நேரம் வந்துடுச்சு!

கைவிட்டுப் போன திருப்பதியும் நமக்கு கிடைச்சிடும் !
மெட்ராஸ்க்கு முதலீடுகள் மேலும் அதிகரிக்கும்!
ரியல் எஸ்டேட் பெருகும்!
தென் பெண்ணை, கிருஷ்ணா..ஏன் கோதாவரித் 
தண்ணீரெல்லாம், நமக்குக் கிடைக்கும்!
மதராஸ் மனதே எனும் அவர்களின், கனவும் நிறைவேறும் !



கீழ்பாக்கத்துல வீடு பார்த்துட்டான் போலன்னு, 
நீங்க நெனைக்கிறது எனக்கு கேட்குது! 
என்ன செய்ய...100 வது பதிவு போடணும்னு, 
நானும் நம்ம வாசகர்கிட்ட ரொம்ப நாளா, 
கருத்து கேட்டுகிட்டே இருந்தேன்! யாரும் கண்டுக்கலை..
இப்போ படிச்சுட்டு அனுபவியுங்க !



100 தடவை டைப் அடிச்சதுக்கே ..இந்த ஆட்டமான்னு
கேக்காதீங்க ..பாஸ்! நம்மகிட்டெ அறிவுசரக்கு
அவ்வளவுதான் என்று செருக்கோடு கூவிக் கொல்கிறேன்!

ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும்,
கோவை ப்ளாக்கர்ஸ் அணியினருக்கும்,
படித்தும் படிக்காமலும் செல்லும் பார்வைநட்புகளுக்கும்...கும்புட்டுக்கிறனுங்கோவ்!