Tuesday, October 9, 2012

திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்!

 கொங்கிலிருந்து சென்று வேலை நிமித்தமாக சென்னையில் வசிக்கும் நண்பர் வீட்டில் விஷேமாம்..ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.ஆனாலோ அவருக்கு கொங்கு செல்ல விருப்பமில்லை.காரணம் கேட்டால்..அந்த மின்வெட்டில் சென்று சிரமப்பட அவரால் முடியாதாம்!

என்ன செய்வது? உறைக்கும்படி  நன்கு வைதேன்....சிரித்துவிட்டு" கோபமா இருக்கிறாய் போல..அப்புறம் பேசறேன்'னு சொல்லிவிட்டு தொலை பேசியை வைத்துவிட்டார்!

பத்து நாளா அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பார்க்கிறேன், யாராவது சென்னைவாசிகளின் மின் திருட்டை எழுதிகிறார்களா என்று..ஊஹூம்.. மின்வெட்டை  சிறிய அளவில் எதிர்க்கும் மக்களின் போராட்டங்களை மட்டும் 13ம் பக்கத்தில்..மரணசெய்திகளுக்கு நடுவில் போட்டுவிட்டு ஒளிந்து கொள்கிறார்கள்!

திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்!
என்னய்யா..சென்னைவாசிகளைத் மின்சாரத்தைத் திருடுபவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்..மீட்டர் பணத்தை சரியாகத்தானே கட்டுகிறார்கள்? என்று வாதிகள் கேட்கலாம்.
ஏனைய தமிழ்வாசிகளின் மின்சாரத்தையும் சொற்ப வெட்டைத் தவிர்த்து, அலங்காரமாக அட்டகாசமாக லஜ்ஜை ஏதுமின்றி அனுபவிக்கும் தன்மையை வேறு எவ்வாறு அழைப்பது? கொள்ளை என்று அழைக்கலாமோ?

ஏனைய தமிழகம் மின்வெட்டினால் வாடி வதங்கி வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுத் தவிப்பதை ஆட்சியாளருக்குக் கொண்டு செல்ல அரசியல்வர்க்கமும் , அதிகாரவர்க்கம் தவிர்க்க முயல்வதை வேணுமானாலும் சகித்துக் கொள்ளலாம்...ஊடகவியலாரும் சேர்ந்து மறைப்பதை சாடியே ஆக வேண்டும்!


சனநாயகத்தின் இந்த நாலாவது தூண்களின் செங்கற்கள்..அதாங்க செய்தியாளர்கள் .பெரும்பாலானோர் வசிப்பது சிங்காரச் சென்னையிலே..இதில் பார்ப்பன..பகுத்தறிவு..புரட்சிகளும் அடக்கம்! இவங்கதான் தமிழகத்தின் தலை எழுத்தை தங்கள் பேனாவில்,மைக்கில் நிர்ணயிப்பவர்கள்!தங்களின் விருப்பங்கள்,எண்ணங்களை ஊடக வாயிலாக மக்களின்  மண்டைக்குள் திணித்து,பொதுக்கருத்தாக மாற்ற முயன்று..அதில் பலசமயம் வெற்றியை ருசிப்பவர்கள்!

இதுல ஒருத்தராவது அடடா..நாம மட்டும் 24 மணிநேரமும் வெட்டில்லாமல் சுகப்படுறோமே..மற்ற தமிழ்பகுதிகாரர்கள் வாடுகிறார்களே..எனவே தமிழக அரசே..சென்னைக்கும் மின் தடை அறிமுகப் படுத்து..மீதமாகும் மின்சாரத்தை..ஏனைய தமிழகத்துக்கு பகிர்ந்தளி 'னு யாராவது சொல்றாங்களான்னு பாருங்க!

எங்கே மற்றபகுதிகளைப் போல் சென்னைக்கும் மின்வெட்டைக் கோரினால், தங்களுக்கும் " சுகக்கேடு" வந்துவிடும் என்று தோணும்படி நடந்து கொள்கிறார்கள்!

சென்னைவாசிகளுக்கு எதற்கு "ஏ'' வகுப்பு சிறைவாசிகளுக்குப் போல் மின்சலுகை? ஏனைய தமிழ்பகுதியினர் என்ன கொடுங்குற்றம் செய்தார்கள்?

அதிகவிலைக்கு கரண்டை வாங்கி தரகுமுதலாளிக்கு கொடுக்காதே என்று அரசுக்கு ஆலோசனை கூறும் வர்க்கப்புரட்சிகள் கூட, சென்னைவாசிகளுக்கும் மின்வெட்டை அமல்படுத்து என்று  கூவ எண்ண்வில்லை என்று நினைக்கும் போது" அவாஅவா பாடு அவாளுக்கு" என்பதே நியாபகம் வருது!


பிய்த்து பிய்த்து வழங்கப்படும் மின்சாரம்.." பிச்சையை'' நினைவூட்டுகிறது. இதனால் ஏதும் பிரயோசனமில்லை..விவசாய சனியன்களுக்கும்..தரகு தொழில் முனைவோருக்கும்!


ஆகவே..சென்னைவாசிகளே..எல்லாத்தையும் நீங்களே அனுபவிச்சுக் கோங்கோ..ஒரே கோரிக்கை சென்னைவாசிகளுக்கு..ஏனையத் தமிழகத்துக்கு தடைபட்ட மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு பதிலா தடையில்லா ஒருமுனை மின்சாரம் வழங்கினால் போதும்...டிவி பார்த்துட்டு..கஞ்சிகுடிச்சிக்கிட்டு உங்களை மாதியே சொகமா இருந்துக்குவோம்..வெட்டிவேலை செய்யாம!
 விவசாயியும் ..தொழிலதிபன்களும் முடிஞ்சா ஜெனெரேட்டர் போட்டுக்கட்டும்..இல்லேன்னா திவாலாகட்டும்! அது அவனுங்க தலை எழுத்து!

இதை மட்டும் எழுதுங்க..பேசுங்க..  பரிசா  கொடுக்க எங்ககிட்ட ஈமுக் கோழிங்க நெறைய இருக்கு..ஈமு பிரியாணி வேணும்னா செஞ்சு பார்சல்ல அனுப்பறோம்!

உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போவட்டும்!


19 comments:

 1. பாரபட்சமின்றி கடிக்கும் கொசுவிடமிருந்து எப்படி பாரபட்சமின்றி மின்சாரம் வழங்கவேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும், கொசுவுக்கு தெரிந்த ஜனநாயகம் கூட அரசுக்கு தெரியவில்லை..மின்வெட்டைப்பற்றிய என் (ட்வீட்) கருத்து.

  ReplyDelete
 2. தமிழ் Sir !

  தங்கள் கருத்தை நகைச்சுவையோடு வழங்கியமை அழகு..! நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. சாரே,

  சென்னைவாசின்னா அது சென்னை நகர எல்லைக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் தான்...தாம்பரத்தில் 2 மணி நேரம் போல கட்டிங்காம், நீங்க கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு வந்து பாருங்க , 12 மணி நேர மின் தடை...ஹி...ஹி இதனால எனக்கு வீட்டுக்கு போகவே கடுப்பாக இருக்கும் , முடிந்தவரையில் தாமதமாக போகிறேன் :-))

  எனவே இதனை அன்னுபவிப்பவர்கள் பக்க நகரவாசிகள் தான், ஊருக்கு ஒதுக்கு புறமாக எல்லாம் ,கண்டப்படி திட்டிக்கிட்டு இருக்காங்க, நேற்று வாஷிங் மெஷினில் போட்ட துணியை இன்று தான் எடுத்தேன் :-((

  கரண்ட் இல்லாத ஊரில் வாஷிங் மெஷின் வாங்கியது என் முட்டாள் தனம் தான்னு நொந்துக்கொள்வதை தவிர என்ன செய்ய ?
  ---------------

  மின் வெட்டின் பின்னால் மத்திய ,மாநில அரசின் ஈகோ இருக்கிறது.

  மேலும் எதற்கெல்லாமோ சீறும் அம்மையார் ஏன் மத்திய அரசின் இப்போக்கினை கண்டிக்கவில்லை என்பதன் பின்னால் இன்னொரு அரசியல் இருக்கு, இந்த அரசியல் எல்லாம் நன்கு தெரிந்துக்கொண்டு சுநல அரசியல் செய்யும் மஞ்சத்துண்டு ,என அனைவருமே மின்வெட்டுக்கு காரணம்.

  தமிழ் நாட்டில் ஏதேனும் புதிய மின் திட்டம் செயலுக்கு வராத வரையில் மின் வெட்டு இருக்கவே செய்யும்.

  ReplyDelete
 4. வவ்வால் Sir!

  மின்சுகத்தின் மிதப்பில் மிதக்கும் சென்னைவாசிகளுக்கு முன்பின் அறிந்திரா, மின்வெட்டை அமல்செய்தால், அந்த மின்மிகுதியை, அவர்களின் உற்சாக வாழ்விற்கு பாடுபடும், மக்கள் வசிக்கும் அண்டை மாவட்டங்களிலாவது, மின் தடை சற்று விலக்கப்பட்டால்..அது நமக்கு மகிழ்ச்சியே!

  கருத்துக்கும்..வருகைக்கும் மிக்க நன்றி..அன்பரே!

  ReplyDelete
 5. தமிழ்நாட்டு மக்களுக்கு மின்வெட்டு தேவைதான். மூன்றாவது எந்த நபரையும் பற்றி சிந்திக்காமல், ஆத்தாவையும் தாத்தாவையும் மாற்றி மாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் தமிழக மக்களுக்கு 24 மணி நேரமும் மின்வெட்டு தேவைதான்.
  இனி மின்வெட்டு மட்டுமல்ல, தண்ணீர்வெட்டு முதற்கொண்டு உங்களுக்கு எல்லா வெட்டுகளும் வரப் போகிறது.

  ReplyDelete
 6. இங்கே 16 மணி நேரம் Power Cut...

  ...ம்... அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும்...

  ReplyDelete
 7. Do you know why most of the VIP's lives in Chennai, Politicians, Actors, Business Heads, Sportsmen, etc. Etc but I feel even without electricity you could live in Kongu but in Chennai, it is impossible,because with pollution, population sucks in my City. Damn !

  ReplyDelete

 8. சனநாயகத்தின் இந்த நாலாவது தூண்களின் செங்கற்கள்..அதாங்க செய்தியாளர்கள் .பெரும்பாலானோர் வசிப்பது சிங்காரச் சென்னையிலே..இதில் பார்ப்பன..பகுத்தறிவு..புரட்சிகளும் அடக்கம்! இவங்கதான் தமிழகத்தின் தலை எழுத்தை தங்கள் பேனாவில்,மைக்கில் நிர்ணயிப்பவர்கள்  மிகச் சரியான கருத்து
  புதிய தலைமுறை மட்டும் நம் கஷ்டத்தை
  கொஞ்சம் பதிவு செய்திருந்தது
  சென்னை நீங்களாக தமிழக மக்களின்
  வயிற்றெரிச்சலை மிகச் சரியாக பதிவு செய்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 9. சூப்பர் சகோ
  இருளும் இருள் சார்ந்த இடமும்
  மின் தடை அவலங்களை படிக்க கிளிக்
  http://newstbm.blogspot.com/2012/09/blog-post_29.html

  ReplyDelete
 10. பெயரில்லா நண்பரே!!

  தேசியக் கட்சிகளுக்கு ஒருமுறையேனும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி பார்த்தால் தான் தெரியும் போல!

  கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 11. திண்டுக்கல் தனபாலன் Sir!

  தங்கள் பெருந்தன்மை வரவேற்புக்குரியது..நன்றி..நண்பரே!

  ReplyDelete
 12. இக்பால் செல்வன் Sir!

  High profile's of the capital are attracting more power? Just ask them to share some power with rest of TN, please! We are unable to charge our inverters too!

  May some part of western region has the climatic edge over Chennai..it's full of pity that even it's surrounding areas in a condemning state!

  Thanks for your views!

  ReplyDelete
 13. Ramani Sir!

  நாலுவருடங்களாக இக்கொடுமை அரங்கேறி வருகிறது!
  என்ன செய்வது?

  கருத்துக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 14. திருபுவனம் வலை தளம்


  கருத்துக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 15. கரந்தை ஜெயக்குமார் Sir!


  தங்களின் கருத்தும் வருகையும் உவகை அளித்தது.நன்றி!

  ReplyDelete
 16. kasukku ottu pottal idhu than nadakkum

  ReplyDelete
 17. சென்னையில் வெயிலடிச்சாலும் மழை பெய்தாலும் அதான் தலைப்பு செய்தி. மற்ற பகுதிகளை பற்றி நடுவு நிலைமையுடன் எழுதும் பத்திரிக்கைகள் குறைவே...

  ReplyDelete
 18. கலாகுமரன் Sir!

  அதுவே நம் உள்ளக் குமுறல்..செயலற்ற நிலையில் நாம்!

  கருத்துக்கு மிக்க நன்றி!

  ReplyDelete