Wednesday, February 11, 2015

அண்டைநாட்டு மீனவனின் அழுகுரல் கேக்கலையோ ?


அண்டைநாட்டு மீனவனின் அழுகுரல் கேக்கலையோ?

கடலில் வழி தெரியவில்லை என்று பதில் வருகிறது ...தொப்புள் கொடிகளின் வலைகளைக் கிழித்தாயே என்ற கூக்குரலுக்கு ! அனுதாப வார்த்தைகளில் குற்ற உணர்வு இல்லை !திருத்திக் கொள்கிறோம் என்று வரவில்லை ...பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் !

அடுத்தவன் சோற்றில் கை வைப்பது அழகல்ல ! நமக்கான எல்லைகளை நாமே வகுத்துக் கொள்ளவேண்டும் ! தவறு நடந்திருந்தால் காரணமானவர்களை எச்சரித்து சரியான வழியில் பாடு பார்க்கச் செய்தல் வேண்டும் !

மறுபடியும் இலங்கை ராணுவம் தொல்லை தர, நாமே காரனமாகிவிடக்கூடாது !

ஆமாம் ....பொங்கும் ஈழ வியாபாரிகள் ஏன் வாய்மூடி இருக்கின்றனர் ?
நேர்மை உறங்கக் கூடாது ! யாரிடம் தவறு இருந்தாலும் கண்டிக்கனும் !

அண்டைநாட்டு மீனவனின் அழுகுரல் கேக்கலையோ ?


தில்லி வாலா

பங்காளிகள் குலசாமி கும்பிடுவதைப் போல், கட்சிப் பொதுக்குழு மீட்டிங் நடத்துவதைப் போல் ...இருக்கப் போகுது தில்லி அசெம்பிளி !

பொழுது போகறதுக்கு பைவ் ஸ்டார் சாப்பிடும் ரமேஷ் சுரேஷ் உடன் மகேஷ் என மூன்று தாமரைக்கட்சி உறவு முறைகள் வேறு !

தொப்பித் தலையர்கள் இனி சாலையில் தர்ணா கிரானா  என  சுற்றாமல் , கூரைக்குக் கீழே இருந்து வேலை செய்யட்டும் ! நாடகம் போட்டது போதும் ..ஆக்ஷன் நடக்கட்டும் !

பெருமாள்சாமியின் பேயாட்டம் !

கருத்துச் சொல்லி கந்தலாகிப் போனார் ...நம்ம நடைப் பயிற்சி வீரர் பெருமாள்சாமி !
தேர்தலில் அடுத்தவன் மட்டையாகிப் போனதைப் பார்த்து  ஆனந்தம் இருந்தால் அதை அடக்கமாக ரசிப்பது தான் முத்துன அரசியல்வாதிக்கு அழகு !

அதை விட்டுட்டு "சீரியல் மாமியார்" கணக்காக...வாய்க்கு வந்தபடி பேசியதை தமிழக் மக்கள் ரசிக்கவில்லை , என்பதை இணையத்தில் கழுவி ஊற்றியதை வைத்து அறிந்து கொள்வாராக ! நாம் எத்தனை முறை சாணிக் குளியல் போட்டோம் என்பதை மறக்க முடியுமா ?

உலகக் கோப்பை கிரிக்கெட்த் திருவிழா !

ஆஸி அணியின் 9வது பேட்ஸ்மேன் கூட அதிரடி ஆட்டம் ஆடும்போது , இந்திய அணியினரின் முன்னணி மட்டைவீரர்களும் திணறுவதைப் பார்க்கும்போது ..
எதையும் எதிர்பார்க்காத இந்திய  ரசிகர்கள் , ஜாலியாக பொழுதை கழிக்க விருக்கிறார்கள் !

நம்ம ஆட்டக்காரங்க கவனம் எல்லாம் ஐபிஎல் 8 ன் மீதே !
நமது கவனமெல்லாம் டிவியில் காட்டப்படவிருக்கும் ஆஸி நியுசி அழகுப் பெண்கள் மீதே !

ஸ்ரீ ரங்கா யாருக்கு பொங்கல் தருவார் ?

கேட்டவருக்கு தருவார் ! மற்றவருக்கு பேதி மருந்து தருவார் ! இந்தத் தேர்தலால் புதிதாகக் கட்டப்பட்ட "யாத்ரி நிவாசம் " பிரபலமாகி விட்டது ! கோவிலுக்கு போகவர 60ரூ ஆட்டோ வாடகை ..இப்போது செயல்படும் மெஸ் இன்னும் எத்தனை நாட்களுக்கோ ?

வெயில் அதிகரிக்கத் துவங்கி விட்டது !
ஏசிகள் உறுமத் துவங்கி விட்டன!
கரண்டுத் தொல்லை பயமுறுத்துகிறது !

அதோ ..வருகிறதே வசந்தகாலம் ..இள வேனிற் காலம் !