பொறந்த குழந்தை...அஞ்சு வருசமானதும்
ஒண்ணாம் வகுப்பில் சேர்க்கணும்!
சமைஞ்சபையனை .. .அஞ்சு வருஷமாச்சும்
பொத்திபொத்தி வளக்கணும்!
மாஸ்டர் டிகிரிக்கு...அஞ்சுவருஷமாச்சும்
காலேஜுல சேர்ந்து படிக்கணும்!
சுதந்திர தேசம்னா..அஞ்சுவருஷமானதும்
தேர்தல் நடத்திப் பார்க்கணும்!
நாலு மாசத்துல தேர்தல் வரப்போது ங்கறதை
நாலு மாசத்துக்கு முன்னாடி இருந்தே..
மீடியாக் காரன் கதறிட்டு நாட்டுக்கு
உடுக்கை அடிச்சு உலுப்பி சொல்லிட்டிருக்கான்!
மார்ச் மாசத்துல முடியுற நிதிஆண்டு வருமானவரிக்கு. ..
செப்டம்பர்லே அட்வான்ஸ்டேக்ஸ் கட்டுற கதையா,
2014 எலக்ஷனுக்கு, 2013லேயே
கூட்டணி கும்மாளங்களுக்கு, கும்மாங்குத்துக ஆரம்பிச்சிட்டாங்க!
தேர்தலுக்கு நாலு மாசம்..அதுக்கப்புறம் ரெண்டு மாசம்..நமக்கெல்லாம் நல்ல செய்தித் தீனி, கருத்து திணிப்பு எல்லாம் கிடைக்கும்! அதென்ன தேர்தலுக்கு அப்புறம்..ஆமாங்கண்ணோவ்! யாருகிட்ட மெசாரிட்டி இருக்கப் போவுது?
யாரோ..ஜெயிக்கட்டும்..ராசாவாகட்டும், நமக்கு அது கவலை இல்லை, இன்ட்ரஸ்டும் இல்லே! எப்படியும் "பெவிகால் ஜாயிண்ட்"கள் தான் ஆளப் போவுது...இதுல நமக்கு எதுக்கு சைடு பேக்கிங்?(அணி ஆதரவு)
கண்ணை மூடிட்டு...நம்ம சனநாயகக் கடமைக்கு, சாவடிக்குள்ளே புகுந்து, பட்டனை ஒரே ஒரு தடவ,தடவிட்டு வந்துடணும்! அதுக்கு சாட்சியா..ஆபீசருங்க பொட்டு வெச்சு, மரியாதை செஞ்சு அனுப்புவாங்க!
என்ன உளறிட்டு இருக்குறே...சொல்ல வந்ததை சுருக்கால சொல்லிட்டு போய்யானு, நீங்க கடுப்பாகிறது எனக்கு கேக்குது!
இன்னும் ஆறு மாசத்துக்கு, நடக்குற அரசியல் கூத்துக்கதைக்களுக்கு எல்லாம் "ஜெர்க்" ஆகி..யாருகிட்டயும் விவாதம்,சச்சரவு எல்லாம் செஞ்சுக்காம...ஜாலியா எடுத்துக்கிட்டு எஞ்சாய்" செஞ்சுக்கிடுங்க...என்ன நாஞ்சொல்றது?
ஒவ்வொரு தேர்தல்லேயும், ஏமாளியாக்கப்படற நம்ம கோபுசாமி அண்ணன்...இந்த தடவ, வெளியூர் ஆட்டக் காரங்களோட வேகமா போயி, காண்ட்ராக்ட் போட்டுட்டார்! முதல்ல எல்லோரும், சந்தோசப்பட்டாங்க..பெருசா விமர்சிக்கல!
அப்புறம் மெதுவா..ஆரம்பிக்கறாங்க மீடியாக்காரங்க! என்னான்னு?
கோபுசாமி அண்ணே...அந்த வெளியூரு ஆட்டக்காரங்க, மடியிலே சுப்புசாமின்னு" ஒரு பூனைய செல்லமா உட்கார்ந்துட்டு இருக்கே...பாக்கலையா?
அதை கிட்ட வெச்சுக்கிட்டு, எப்படி "தேர்தல் சகுனம்" பாத்துக்கிடுவீங்கனு, கேள்வியா கேக்கறாங்க..சீண்டிப் பாக்குறாங்க!
எப்படி சமாளிக்கப் போறாரோ..நம்ம கோபுசாமி அண்ணன்! இதுக்கு இடையிலே, நம்ம அரேபியசாமி கட்சிக்காரங்க வேற..கோபு அண்ணனை நெருக்குறாங்க! கோபுஅண்ணன் புதுசா கண்டிராக்ட் செஞ்ச ஆளுக, ஆட்டக்காரங்க மட்டுமில்லையாம்! பில்டிங் டெமாலிஷும் சைடு பிஸினஸாசெஞ்சிட்டு இருக்காங்களாம்...அதனால அவங்களோட நீங்க சேரக்கூடாதுனு சொல்றாங்க!
ஆனாப் பாருங்க..நீங்க அவங்களோட சேரலைனா, எங்களோட 13 சத வாக்குகளும், உங்களுக்கே, அப்படின்னு மட்டும் சொல்ல மாட்டாங்களாம்!
கோபு அண்ணே..சிறந்த பார்லிமெண்டேரியன், சிறந்த பேச்சாளரான நீங்க...கண்டிப்பா தேர்தல்லே நிக்கணும்! கூட்டணி இல்லைன்னா யாராலும் ஜெயிக்க முடியாது, அரசாளமுடியாதுனு வந்துட்டப்புறம்...நீங்க ஒண்ணும் பயந்துக்கிடாதீங்க!
கண்ணாலம்னு..போயாச்சுனா, அங்கே எல்லா "கவிச்சிக்"காரங்களும் வரத்தான் செய்வாங்க! குறுக்கநெடுக்கா திரிவாங்க! காதுல படறமாதிரி குசலம் பேசுவாங்க! வேடிக்கையிலும்,மோளசத்தத்திலேயும் கவனத்தை வெச்சு, சபையில மருவாதி வாங்கிக்கணும்!
சுப்புசாமி அண்ணே! உங்களுக்கு கவர்னர் போஸ்ட் கிடைக்குமுங்க...வாலை கவனமா சுருட்டி வையுங்க! வாய் பதனம் கட்டாயம்!
இப்போ போயிட்டு நாளான்னிக்கு வர்றனுங்கோ! கொசுக்கடி தாங்க முடிலை..!