Wednesday, April 4, 2012

ஐபிஎல் 2012 - துளிகள்..1 / ஏப்ரல் 4 !

எங்கள் கொங்குச்சீமையில் ஒரு சொலவடை உண்டு!
"முண்டச்சி பெத்த புள்ளையானாலும் சாங்கியம் செஞ்சுத்தான் ஆகணும்"!

உலகமெங்கும் போய் உதை வாங்கிட்டு வந்து மானமருவாத எல்லாம் கெட்டு,
திண்ணைல படுத்துக் கிடந்த வீரனுங்க, திருவிழாவுக்கு மேக்கப் போட்டுட்டு கிளம்பிட்டாணுவ!

வெயிலு வேற பட்டயக் கிளப்புது! பசங்களுக்கும் லீவு வுட்டாச்சு!நமக்கும் பொழுது போவனுமுல்ல..! சரி சரி ...அவனுக தோத்ததை எத்தன நாளைக்குத்தான் பேசறது!கோழி குருடா இருந்தாலும்..கதையா, இந்த கோமாளி ஆட்டத்தைப் பாக்க எல்லாரும் ரெடியாயிட்டங்க! 

பாவம்.. பத்து எழுதுறவங்க!  
சமச்சீர் கிறுக்குத்தனத்துல சிக்கி மண்ட காஞ்சிட்டு பரிச்சைக்கு படிக்கிறாங்க..!
நாம அவங்களுக்கு தொந்தரவு கொடுக்காம பக்குவமா நடந்துக்கணும்!

ஏப்ரல்   4 - சென்னை - மும்பை !


* இந்த வருஷம் நாக் அவுட் போட்டிகள்ல, வர்ற வருமானத்த 185 ஆட்டக்காரருக்கு பிரிச்சி கொடுக்கப் போறாங்களாம்! நல்ல காரியம்! நடக்கட்டும்!

* 45 பந்துல 13 சிக்சர் அடிச்சு தென்ஆப்ரிக்க வீரர் ரிச்சர்ட் லேவி, மும்பைக்கு விளையாடுகிறார்!

* ஆஸ்திரேலிய குழுத்தலைவர் மைக்கேல் கிளார்க், புனா அணியில்!


* வேகப்பந்து விச்சாளர் மிட்சல் ஜான்சன் மும்பை அணியில் இணைந்தார்!


* போர்க்குதிரை மேற்கிந்திய ஆண்ட்ரே  ரஸ்ஸல் டில்லியில்!


* சுழல் சுனில் நாரயன் கொல்கத்தாஅணியில்: நல்லவிலை கொடுத்துள்ளனர்!


*  சிங்கள சாண்டிமால் ராஜஸ்தான் அணியில்!

* சென்னை மைதான ஆடுகளம் மந்தமாகி வருகிறதாம்! ஓவருக்கு சராசரியாக 7 . 86   ஓட்டங்கள் தான வருகிறதாம்!

* சென்னையின் வீச்சு பலம், மும்பையை விட மிகவும் பின்தங்கி உள்ளது!

* சென்னையின் மட்டை பலமும்,மும்பையின் பலத்தை விட மட்டம்தான்!

* மும்பைக்கு வெற்றி வாய்ப்பு 55  சதம் இருக்குமாம்!


* அதிக விலை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட ஜடேஜா சொதப்புவதில் மன்னன் !
*  நம்ம அஸ்வினுக்கு மிகவும் பிடித்த உணவு "தயிர் சாதமாம்"! வெளிநாட்டு பிரயாணங்களின் போது, சிலசமயம் அவரே தயிர்சாதம் செய்வாராம்!


* மண்டை காய்ஞ்சு போன இந்திய ரசிகர்களை மகிழ்விக்க வந்த போட்டிஎன வர்ணனையாளர் கருத்து!


* டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் தொலைக்காட்சியில் பார்ப்பதே மேல்!


* டிக்கெட் விலை ரூ 1200 முதல் ரூ 8000  வரையாம்! அம்மாடியோவ்!


ஐபிஎல் 2012

புகைப்படம் : நன்றி..இந்திய கிரிக்கெட் வாரியம் வலைப்பக்கம்!

http://www.iplt20.com/ச்செடுலே

* மும்பை அணி டாஸில் வென்று சென்னை யை மட்டை வீச பணித்துள்ளது!


* தமிழ்நாடெங்கும் மின் தடையும், பற்றாக்குறையும் தலை விரித்து ஆடும்போது, இவ்வளவு விளக்குகளை எரிய விட்டுக் கூத்தடிப்பது அராஜகமாகத் தோன்றினாலும், அந்த எரிச்சலை மறக்கவாவது மேட்ச்
பாக்கணும்!

* மலிங்கா லங்கா அணிக்கு பந்து வீசுவதை விட மும்பை அணிக்கு மிகவும் உண்மையாக, மிகதீரத்துடன் விவேகமாக பந்து வீசுகிறார்!

* முரளி விஜய்க்கு ரன் அவுட்டுன்னா மிகப்பிரியம் போல ! டுப்ளேவை அவுட்டாக்கிட்டாரு!

* 200 ஓட்டங்களுக்குக் குறைந்தால் மும்பைக்கு எளிய இலக்காகிவிடும்!

* இது போன்ற கூத்துகளுக்கு எதிராக ஆவேச அமைப்புகள் ஏன் ஆர்ப்பாட்டமோ,போராட்டமோ நடத்துவதில்லை?

* 12  ஓவர்குள்ள எடுக்கல்லைன்னா..மும்பைகார் ! நீங்கல்லாம் ஒரு சுப்பர் டீமா?

* தோனிய சநீஸ்வர் ரொம்ப தொந்தரவு பண்றார் போல! அல்லாம் சொதப்புது!

10 comments:

 1. இது முன்னுரை என நினைக்கிறேன்
  தொடர்ந்து விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 2. ஆக மொத்ததுல இரண்டு முறை Champion வாங்குன Chennai தோற்றுவிடும்-ன்னு சொல்றீங்களே

  ReplyDelete
 3. நண்பா இப்போதான் Score பார்த்தேன்

  சென்னை ஜெயிக்கிறமாதிரி தெரியல

  ReplyDelete
 4. ரமணி சார்!

  விரைவான வருகைக்கும் நக்கீரக் கருத்துக்கும் நன்றி! அப்டேட் செய்துள்ளேன்..மீண்டும் வரவும்!

  ReplyDelete
 5. Sathish !

  வாங்க சதீஷ்! டீம் பலம் வெச்சு சொன்னேன்..கரக்டாத்தான் வரும் போலத் தெரியுது!

  ReplyDelete
 6. நடக்கட்டும் நடக்கட்டும்......

  ReplyDelete
 7. Good. thank you. keep going in Kovai Slang. wishes.

  ReplyDelete
 8. Good and enjoyed your Kovai slang. keep going. best wishes

  ReplyDelete
 9. வருவதற்கு ரொம்பவே பிந்திட்டனோ... இருந்தாலும் இன்னும் ஐபில் சூடு பிடிக்கல தானே நன்றி நன்றி...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

  ReplyDelete
 10. கிரிக்கெட்:-(

  ReplyDelete