Tuesday, February 19, 2013

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !

பொத்தி பொத்தி ..தாயாரால் மராட்டிய சிவாஜி போல் வளர்க்கப் பட்டான் .அவன் ! காரணம்  பலகாலம் பேறு இன்றி..தவமிருந்து பிறந்தவன் என்பதால்..அதீத கவனம் !


தெரு விளையாட்டில் பங்கேற்க அனுமதி இல்லை..! காயம் பட்டுவிடுவான் என்பதற்காக..!
உறவினர் வீடுகளுக்கு விடுமுறையில் பெற்றோர் கூடவே சென்று..தங்கி திரும்ப வேணும் !

அதீத கட்டுப்பாடும்..கண்காணிப்பும்..விரும்பியவண்ணம் பெறாமை, ஏமாற்றத்தை தந்து..வளர்த்தெடுத்தது..அவனுள் கோபத்தை !

கண்காணிப்பு படிப்படியாக..குறைந்து..படித்து, வருவாய் ஈட்ட ஆரம்பித்தவுடன், அனைத்து குடும்ப பொறுப்புகளையும், அவன் மீது சுமத்தி விட்டு...அவன் வழிகாட்டுதலை விரும்பத் தொடங்கி விட்டது..குடும்பம் !

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !

இவ்வளவு நாளாக...சிறுகனலாக அவனுள் இருந்த..கோபம்..இப்போது வெடித்து அகம்/புறமெங்கும்..பரவத் தொடங்கிவிட்டது !

தொழிற்சாலையில், உறவு /நட்பு வகையறாக்களில் அவனது கோபம் ..பிரசித்தம்  !

இவனது பலமும்..பலவீனமும் கோபமே என்றாகி விட்டது..!
பலத்துக்கு காரணம் அவனது  நேர்மையும்..தொழில்பக்தியும்..!
பலவீனத்திற்கு காரணம்...இடம்பொருள் அறியா கோபம் !

திருமணமாகியும்..கோபம் குறையவில்லை..கூடவே சண்டைகளும் வந்துவிட்டது..காரணம் வந்த மகாராணி அம்மா..இவனை விட..கோபக்காரி !



இப்போதெல்லாம்..அவன் கோபப்பட்டால்..மகன் மட்டுமே பயப்படுகிறான்..அல்லது பயப்படுவதைப் போல நடிக்கிறான்..!
பெற்றோர் கண்டுகொள்வதில்லை..! மகளோ..நீ ஒரு டம்மி பீஸ்ஸுப்பா'' என்கிறாள்.. கோபப்பட்டால் காமெடியா இருக்குன்னு  சொல்றாள் !


சக ஊழியர்கள் / நட்புகள் / உறவுகள்....கோபம் உங்களுக்கு சூட்'டாகலை என்கிறார்கள்..எப்படின்னா..  திருப்பி பேசுவதில்லை ! அவனும் எத்தனை நேரம் தான் கத்துவான் ! சாந்தமாகிட்டான் !

இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுன்னு கேக்கறீங்களா?
அவனுக்கு வயசாகிட்டே வருது !
வீட்டுக்காரம்மா..குழந்தைகளின் பலம் கொண்டுவிட்டதால்..சிரித்துக் கொண்டே கேட்கிறார்..

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !







Friday, February 15, 2013

கடவுள் எந்த மதமய்யா?

கேட்டுட்டானே ..அந்தக் கேள்வியெ !
கேட்கும்போதே குழப்பம் தீரலே !

பளீரென்ற கேள்வி.!.இடுப்புக்கச்சையில் கைவைத்து நிறுத்தி முகத்தை நிமிர்த்தி..கண்ணோடு கண் நோக்கி ..பதிலை தராமல் செல்லமுடியாத நிலையில் ...பளீரென்ற பிரகாசத்துடன் ..கேட்கப்பட்டக் கேள்வி !


கடவுள் எந்த மதமய்யா?

என்ன பதில் சொல்லுவாய்..எப்படிச் சொல்லுவாய்?
கேள்வியே தவறா...இல்லை கேட்டதா?



உன்னைக் கேள்வி கேட்டதில் என்ன தப்பு?

முப்பத்துமுக்கோடி என்கிறாய்..முப்பெருந்தேவியர் என்கிறாய்..! ஆதித்தொழில் செய்யும் அவர்தம்  கணவர்களைக் கடவுள் என்கிறாய் ! 
திகம்பரம் வேறு..சரணம் ..கச்சாமி வேறு என்கிறாய்!
ஆப்ரகாமிய தேவதூதர்களை வணங்குகிறாய்..!

புரியாத மொழியில் மந்திரம் போட்டும்
பூ போட்டும்..
சாம்பிராணி, வத்தி,பத்தி,விளக்கு எரிவிக்கிறாய்!
பாவப்பட்ட சிற்றுயிர் பிராணிகளை பலி இட்டு மகிழ்கிறாய்..!

இது போக உலகெங்கும் குல,குடும்ப சாமிகள் வேறு..கோடிக்கணக்கில்!

சாமி உண்டென்றால்..அது  ஒன்றென்றால்
அகில லோகம் பூரா ஒரே ரூ(அரூ)பமாகத்தானே இருக்கணும்?
எதுக்கு இத்தினி கோலம்..
ஊருக்கு ஒரு வேஷம்?

இதுல எந்த சாமி 
பெருசு..சிறுசுன்னு பலம் காமிச்சுக்க 
வெட்டிக்கிறீங்க..
குண்டு வெச்சுக்கிறீங்க...
குடியை எல்லாம் கெடுக்கிறீங்க..?

கடவுள் எந்த மதமய்யா?

சரி..இப்ப சொல்லு ..எல்லாம் வல்லவன்..எந்த மதம்?

திடீரன்று மடக்கப்பட்டவன்..நிதானித்து பதில் சொல்ல ஆரம்பித்தான்!
"படைத்தவனை யாரும் பார்த்ததில்லை...ஆனால் 
இப்படித்தான் இருப்பான் என்று..
நாங்களே அவனைப் படைச்சோம்..தேவதூதன்னு
சொல்லி வந்தவங்க..எங்க பெரியவங்க உதவியோடு !
காரணம் ..நாங்க பஞ்சபூதங்களையும்..காலத்தையும்
பார்த்து ..ரொம்ப ஆச்சரிய்ப்பட்டோம்..! 
இயற்கைன்னு சொல்லுவீங்களே ..அதைதான் !

அடையாளம் வேணுமில்ல..நாங்க படைச்சதுக்கு..பேரு வெச்சோம்..
பொறவு நடந்ததுதான் ..எல்லாருக்கும் தெரியுமே..!

சண்டை எதுக்குன்னு கேக்கறீங்க...பாருங்க
எங்களுக்கு வேற வேலை இல்லை..உலக்மே சுபிட்சமா இருக்கு!
பொழுது போகணுமில்ல..அதான் நீயா..நானா'ன்னு 
கேட்டுக்கிட்டு இருக்கோம்..அடிச்சுபுடிச்சு..அடிதடி பண்ணிட்டு !

கடவுள் எந்த மதமய்யான்னு...
இப்ப நீ கேக்குற..தெளிவாச் சொல்றேன்..சூதானமா கேட்டுக்கோ..!

கடவுள் எங்க மதம்..!

இங்க இருக்கிற எல்லாரையும் கேட்டுக்கொ ...யாரும் மாத்திச் சொல்லமாட்டாங்க..!

ஏன்னா..அதுதான் உண்மை !




Tuesday, February 12, 2013

உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!

  வாதம்..உடலில் ஒருமுறை வந்தால் வீடுபேறு அடையும் வரை விட்டுப் போகாது ! வாயால் வாதம்...செய்தால் ஏதாவது ஒரு இடத்திலாவது..நெஞ்சாகட்டும்..மூஞ்சியாகட்டும் ரணமாக்காமல் போகாது !

ஆக..வாதம் என்றாலே பாதிப்பு என்று தானே அர்த்தம்..?


 வாதத்திற்குக் காரணம் ..தடை..அல்லது அடைப்பு..மேலும் எதிர்ப்பு ! சீராக ஓடுவது/கிடைப்பது ஏதாவது ஒரு காரணத்தால் தடுக்கப்பட்டால் அல்லது திருப்பப்பட்டால்..ஏற்படும் !



தனக்கு இயல்பான, இஷ்டப்பட்ட செயல்..மாறுபடும் போது வாதம் பிறக்கிறது..!

ஏமாற்றம் வாதாடத் தூண்டுகிறது..! வாய்வாதம் ..மிதவாதம் ..எனப்படுகிறது ! சிலசமயம் வைத்தியம் பார்க்கப்பட்டு..ஓரளவு அதோடு மேலும் பரவாமல் நிறுத்திவிடலாம்..! இதுதான் பொதுவாக ..நடப்பது..! பொங்கிவிட்டு ..வலிதீர்ந்ததும்..காலம் எனும் மருந்திட்டு கோணல்களை..சற்று நேராக்கலாம்!



அடுத்து அறுவை சிகிச்சை..அது தான் "தீவிர வாதம்" !
அப்படிப்பட்ட ஒருவனைத் தான் இன்று ஒரு மலையோர பயணத்தில் சந்தித்தேன் !

தடாலடியாக முன்னே வந்து நின்றான்..அவன் ! அவன் கண்களில் ..தீர்க்கம்..ஏதோ அடைய வேண்டும் என்ற வெறியுடன் !அவன் பின்னே ஒரு பெண்..சற்று வயதான தோற்றம்..கவலையும்..கோபமும் அவள் கண்களில்..!

அவனாக வரவில்லை..எங்கள் முன் ஏறக்குறைய இழுத்து..தள்ளப்பட்ட நிலையில் ! பெரும்பாலும் ..கிராம இளைஞர்களே தீவிரவாததால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!


என் நண்பனுக்கு ..அந்தப் பையன் ஏதோ தூரத்து உறவு போல! வயதான பெண்மணி அவனின் தாயாராம் ! மிகுந்த பதட்டத்தில் இருந்தார் அந்த அம்மணி! 

எந்த நேரத்தில்..எங்கிருந்து ஆபத்து வருமோ என்று பரபர ப்புடன் காணப்பட்டார்..அப்பெண்மணி!"இவன்கிட்ட எப்படியாவது எடுத்துச் சொல்லி..அங்கெ இருந்து விடுவிச்சு..நீதான் காப்பாத்தணும்..நீ சொன்னாத்தான் இவன் கொஞ்சமாவது கேப்பான்" என்று நண்பனிடம் சொன்னார் அந்தத் தாய்! 

இன்னும் பதினஞ்சு நாளில் இவனுக்கு கல்யாணம்..அவனோ ஒரே பிடிவாதமா அங்கேயே இருக்கான் ! எப்படி கல்யாணம் செய்யறது..ஒரே பையன் வேற..! வெளியில தெரிஞ்சா அசிங்கமாயிடும் ! குடும்ப கவுரவம் போயிடும்..! நீதான் ஏதாச்சு செய்யணும் ! பொண்ணு வீடு வேற பெரிய இடம்..ஆனாலும் ரொம்ப கோவக்காரங்க..ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போவுது !' என்றார்.!

என்னாசும்மா'ன்னு நாங்க கேக்கவும்..சட்டைய கழட்டுடா'ன்னு..பையன் கிட்ட சொல்ல ..உடம்பு பூரா கீறல்கள்..பிளேடால் கீறி ஆறியும்..ஆறாமயும் ! சட்டப் பாக்கெட்க்கு நேர் பின்னாடி.. " ஜெனிதா"ன்னு..டாட்டூ..முஞ்சிலடிச்ச மாதிரி தெரிஞ்சது !

  உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!
அம்மா செல்லம்..மாசம் முப்பதாயிரம் சம்பளம்..ஒரு பைசா விட்டுக்கு கொடுக்கிறதில்ல..முக்காவாசி சம்பளத்தையும் அந்த பொண்ணுக்கே செலவு செஞ்சிருக்கான் ! போதலைன்னா..அம்மாக்கரி கிட்டயும் வாங்கிட்டுப் போயிருக்கான்!
பொண்ணு ரொம்ப லட்சணமாம்..பையன் தீவிரவாதி ஆகிட்டான்! மூணு வருஷ லவ்வாம்! இவன் தான் "டாட்டு" குத்தி இருக்கான்.அவளோ"பிரெண்டாத்தான் நெனைச்சேன்'னு வசனம் பேசிட்டு நாமத்தையும் போட்டுட்டு..அமெரிக்கா போயிட்டா ! இவனால மறக்க முடியலை !

 இப்போ பிரச்சனை என்னன்னா .."டாட்டூ" வை அழிக்கணும்..கல்யாணத்துக்கு முன்னாடி..காயத்தையும் ஆத்தணும் ! எந்த டாக்டர் கிட்ட போறதுன்னு நாங்க பேசிட்டு இருந்தப்போ..அதுவரைக்கும் பேசாம ..நின்னுட்டு இருந்த அந்த தீவிரகாதல்வாதி" ராஸ்கல் கேட்டானே.ஒரு கேள்வி !

"அண்ணோவ்..இந்த பேர் அப்படியே நெஞ்சுல இருக்கட்டும்..மேல வேணும்னா ஒரு பூ மாதிரி போட்டு மறைச்சிட்டா என்ன'ன்னு !"

நெஞ்சுக்குள்ள அவளை எழுதி வெச்சேன் ...! அவன் !
காதல் ஒருவழிப்பாதை பயணம்..! நாங்கோ !

அனைவருக்கும் அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள்!
 

Monday, February 11, 2013

இது தங்கம், வெள்ளி வாங்கும் நேரமா?

 கண்களை சுட்டி இழுக்கும்..ஆனால் ஆடம்பர உலோகங்கள் அல்ல அவை ! முதலீடு செய்தால்..வருவாயை அள்ளித் தருபவை ! அவசரத்துக்கு ஆபத்துக்கு "நண்பன்" போல கைகொடுப்பவை !


பத்து வருடங்களில் சுமார் ஐந்து மடங்கு ..அதாவது 500 சதம் வருவாயை கொடுத்திருக்கின்றன ! இனி எங்கே செல்லும் ?

30 வருட ஏறுமுகக் காலத்தில் ..காளைசந்தையில் இவ்விரு உலோகங்களும் ஏறுநடை போடுகின்றன ! இனியும் 5 முதல் 7 வருட காலத்திற்கு இது தொடரும் என கணிக்கிறார்கள் வல்லுஞர்கள்!


பங்கு சந்தையும்..உலோக சந்தையும் உலகளாவை ஆகிவிட்டன ! நியூயார்க்..லண்டன் உலோகச் சந்தைகள் முக்கியமானவை ! ஐரோப்பிய, அமெரிக்கப் பொரு ளாதாரமும் முக்கியமானது..விலைகளை நிர்ணயிப்பதில் ! உலோகச்சந்தை வலுவாக வேண்டுமெனில் அமெரிக்க டாலருக்கு எதிராக "யூரோ" வலுவாக வேண்டும்!

சீன..இந்தியப் பொருளாதார மந்தமும்..ஆபரண உலோகவிலை உயர்வை தடுத்து வைத்திருக்கிறது ! காரணம்..இந்தியாவில் தங்க இறக்குமதி வரி ..சன்னமாக உயர்த்தி வருகிறார்கள்! மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு நிலையிலாமல் ஏறி இறங்குவதால்..நகைத்தொழில்..ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது !


இது தங்கம், வெள்ளி வாங்கும் நேரமா?


வேகமாக மேலே வந்து கொண்டிருந்த தங்கவிலை சற்றே..இளைப்பாறி வருகிறது என்றே சொல்லலாம்..அடுத்த பாய்ச்சலுக்கு முன் ! இந்த வருடம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்..! அதற்கு முன்னர் இன்றைய விலையிலிருந்து 5 முதல் 15 சதம் வரை இந்திய விலைகளில் வீழ்ச்சி இருக்கும் என்றும்..பயப்பட வேண்டியதில்லை..அது ஒரு வாங்கும் வாய்ப்பாக அமையும் என்றும் வல்லுஞர்கள் உரைக்கிறார்கள்!

எதிர்வரும் மத்திய பட்ஜெட்டின் தாக்கம் இந்திய பங்கு மார்க்கெட்டிலும்..தொடர்ச்சியாக இந்தியரூபாயின் மதிப்பிலும் கணிசமாக இருக்கும் ! பங்கு மார்க்கெட் உயர்ந்தால்..ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 10 சதம் அளவில் குறைய வாய்ப்பிருக்கிறதாம்! இதெல்லாம் மத்திய கால அளவில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்..! ஒரே நாளிலோ..ஒரே வாரத்திலோ நடக்காது!

நியூயார்க் சந்தையில் தங்க விலை டாலரில் + டாலருக்கு இந்தியரூபாய்..இரண்டும் சேர்ந்தே ..இந்தியாவில் விலையை நிர்ணயம் செய்கின்றன..! நொடிக்கு நொடி ஏறி ..இறங்குகிறது !


எல்லா விலையிலும் வாங்கணும்..கீழே இறங்கினால் கொஞ்சம் சேர்த்து வாங்கலாம் ! காசுகளாகவும்,,கோல்ட் ஈ.டி.பண்டிலும் வாங்கலாம்! வேண்டும் போது நகைகளாகவோ..பணமாகவோ மாற்றிக் கொள்ளலாம்!

மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பாகம் தங்கம்,வெள்ளியில் போடலாம் !

Disclaimer : சந்தையில் நிலவும் சூழலைப் பொறுத்து.அவ்வப்போது வரும் வல்லஞர்களின் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பே இது..! என்னுடைய கருத்துகள் ஏதுமில்லை..!இந்த கட்டுரை வியாபாரம் செய்வதற்க்காக அல்ல..! வியாபாரமும்,விளைவுகளும் வியாபாரிகள் பொறுப்பு.! எனக்கும் விளைவுகளுக்கும் இஞ்சித்தும் சம்பந்தமில்லை..சந்தை நிலவரத்தை அவரவர்களே கணித்து வியாபாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது !

கனகமும்..ஸ்வர்ணமும் ஐஸ்வர்யங்கள்!