Thursday, October 11, 2012

வயசானா இல்ல..விவரம் இருந்தாதான் இனி வாத்தி!


நம்ம தலைவருக்கு திரைப்பட " வாத்தியார' கொஞ்சம் கூட பிடிக்காது..சென்ம விரோதி.! ஆனாக்க..பள்ளிக்கூட வாத்தியாருகன்னா அம்புட்டு பிரியம்!

அதே மாதிரி நம்ம செனத்துக்கும்...மிலிட்டரி வேலைக்குப் போகறத விட கவுர்மிண்ட் வாத்தியார் வேலைக்குப் போறதுல உசிரு! சரி..மிலிட்டரிக்கு வேண்டாம்..போலீசாகிறயா..வாத்தி ஆகிறயான்னா..என்ன சொல்லுவோமுனு எல்லாருக்கும் நல்லாத் தெரியும்!

கலக்டர் போஸ்ட விட பிரியமானது..அரசு வாத்தியார் வேலதான்! ஏன்னு கேட்டா..அது அப்பிடித்தான்..வெளக்கம் வேணும்னா உங்க புள்ளைகள..கவுர்மிண்ட் பள்ளிக்கூடத்துல சேத்து படிக்க வையுங்க..நீங்களே தெரிஞ்சுக்குவீங்க!


இன்னும் புரியலையா..போட்டி போட்டுட்டு எல்லா கவுர்மிண்டும் அள்ளிக் கொடுக்கறத..கேட்டு தெரிஞ்சுக்கோங்க! இப்பக்கூட ஏழு பெர்செண்ட் பஞ்சப்படி ஏத்தியிருக்காங்க! அதெல்லாம் ஆட்டாமேடிக்!

பெரைவேட் கம்பெனிகளும் கவுர்மிண்ட் வாத்திகளுக்கு சலுக கொடுக்குது! கார் வெலையில பத்தாயிரம் கம்மியாம்!

வயசானா இல்ல..விவரம் இருந்தாதான் இனி வாத்தி!


உறவுக்கார டீச்சர் ஆத்தா ஒண்ணு..நான் வாங்குன கடசி மாச சம்பளத்த வுட இப்ப வாங்குற மாச பின்சின் ஜாஸ்தின்னு..சொல்லிட்டு,,மனசாட்சி கொஞ்சம் உறுத்துதுன்னும் சொல்லிட்டு போச்சு!கவுர்மிண்ட்/ பெரைவேட்ன்னு இல்லாம, எந்த ஒரு இடத்துல இருக்குற உத்யோகஸ்தனையும், நெனச்சு..நெனச்சு பொறாமப் பட வெக்கிற..ஒரே உத்யோகம்..கவுர்மிண்ட் வாத்தியார் உத்யோகம்தான்!

அதுவும் கவுர்மிண்ட் வாத்தியாருக மேல இந்த பெரைவேட் பள்ளிக்கூட வாத்திகளுக்கு இருக்குற வவுத்தெரிச்சல் இருக்கே..சொல்லிக்கவே முடியாது...கொஞ்ச நஞ்சமல்ல..அம்புட்டுத் தேறும்!

அவிக வவுத்தெரிச்சல் எல்லாம் சாபமா மாறி ஒண்ணு சேர்ந்து, பெரிய இடியா வந்து இறங்கிடுச்சு! கரஸ்'ல பெரிய படிப்புக படிச்சாலும் சேரி, சந்தைக்கு பின்னால இருக்குற வாத்தியார் ட்ரெய்னிஙில படிச்சலும் சேரி...வேலவாய்ப்பு ஆபீஸ்ல பதியிறது தான் ரொம்ப முக்கியமா இருந்தது! 

அடுத்த முக்கியம்..முன்னால பொறந்து இருக்குற வேண்டியது!ஒப்பற்ற "அப்பாயிஸ"க் கொள்கதான் இதுவரைக்கும்..வாத்தியார்களை முன்னேத்தி இருக்குது! அதென்னுன்னு கேப்பீக..சொல்றேன்!

'முன்னால் பிறந்தவன் அண்ணன்..பின்னால் பிறந்தவன் தம்பி!' இதாங்க அது!

இப்போ அதுக்கு வேட்டு வந்திருச்சு!
வயசெல்லாம் இனி வேகாதாம்..வரிசப்படி இனி ஆர்டர் வராதாம்!
என்ட்ரன்ஸ் எழுதணுமாம்! அதுல கிடைக்குற ரேங்க் தான் முக்கியமாம்! 

அதுலயும் பாருங்க..புதுசா அடுத்த இடி.."வெயிட்டேஜ்" வேணுமாம்.! என்னாய்யா ..வேல வேணும்னா யார வெயிட்டா கவனிக்கனுமினு நீங்க கேப்பீங்க..! அதில்லைங்..உங்க இளங்கலை..முதுகலை மார்க்க வெச்சு,,ஏத்துவாங்களாம்..உங்களுக்கு வெயிட்!
ஏனுங்..இப்படி உங்க முகமெல்லாம் வெளிறிப் போச்சு!

காலேசுக்குப் போணோம்..கன்னிகளைப் பாத்து கவித வரஞ்சோம்..அரசியல் பேசுணோம்..சினிமா போணோம்..ஸ்ட்ரைக் செஞ்சோம்..லேடியோப் பெட்டியில கரஸ் செஞ்சோம், ஜஸ்ட் பாஸ் பண்ணா போதும்னு நெனச்சோம்..இப்ப அப்பத்திய   காலேசு மார்க்கும் வேணும்னா எப்படி?
மார்க்கு வாங்குனவனுக்குத் தான் அறிவும் ..விவரமும் ரொம்பத் தெரியமான்னு ..நீங்க கேக்குறது நியாயமாத்தான் தெரியுது!

என்ன பன்றது..அம்மாவத் திட்டி என்ன பிரயோச்சனம்..மத்திய அரசோட கட்டாயாமாம் இது!

புலம்பி ஆவறது ஒண்ணுமில்லே! ஒரு ரோசனை வேணும்னா சொல்ரேன்..கேட்டுக்கோங்! இன்னம் போய் படிக்கிறதெல்லாம்..சும்மா தமாசு!
ஏதாவது ஒரு கட்சியில சேர்ந்து..மபி ஆகிடுங்க..அதாங்க மக்கள் பிரதி"நிதி"!
நம்ம தமாசுக் கவுண்டமணி சொல்றாப்புல..அந்தக் கருமத்துக்கு அதெல்லாம் தேவையில்லையப்பா!

கவுர்மின்ட் பள்ளிக்கூடத்துல...வயசுக்கு மட்டுமே வேலை இடமில்லைன்னு இப்ப வந்திருக்கு! 

அரசு காலேசுக்கு அட்மிசன் அடிதடி நடக்குற மாதிரி..அரசு பள்ளி வாசல்களிலும் "மாணாக்கர்கள் அட்மிஷன் முடிந்துவிட்டது..இனி அடுத்த வருடம் தான்" அப்படிங்கிற போர்ட் மாட்டப்படும் காலம் வரணும்! கண்டிப்பா அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்!

வாய்மையே வெல்லும்! 

4 comments:

 1. "வெயிட்டேஜ்" வரட்டும்... விரைவில் வரட்டும்...

  புலம்புவர்களுக்கு :- உங்களின் 'ரோசனை'

  ReplyDelete
 2. வரவேற்க வேண்டிய விஷயம் இனியாது குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைக்கட்டும் உங்கள் எழுத்து எதார்த்தமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல நடை...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. புதுசா என்ன செய்தாலும் அதில் எப்படி கோல்மால் செய்யறதுன்னு யோசிக்கிற நம் சமூகம் இன்னேரம் வெயிட்டேஜ் வாங்குவது எப்படின்னு சில பல வழிகளை கண்டுபிடிச்சிருப்பாங்க.

  ReplyDelete