Thursday, July 17, 2014

பேச்சு... பேச்சாகத்தான் இருக்கணும்!


பேச்சு... பேச்சாகத்தான் இருக்கணும்!
பேசி முடிச்ச பின்னாடியும்!

பேசறதுக்கு முன்னாடி பல வகை பிரயோகங்கள் முனைப்புகள்  இருக்கலாம்..
இல்லாமலும் இருக்கலாம்..ஆனா பேச ஆரம்பிச்சுட்டா..பேச்சோடு மட்டுமே முடிக்கணும்!
நாளைக்கு மறுபடியும்  பேசிக்கிறது போல ...நம்ம பேச்சின் போக்கு அமையணும், அமைச்சுக்கணும்!
அந்த பக்குவம் நமக்கு இல்லைன்னா...பேசறதுக்கே உட்காரக் கூடாது!


விவாதம்னு ஏதாவது வந்தால்...முதல்லே விவாதம் செய்ய வந்த ஆளைப் பாருங்க...அவங்களோட தீவிரத்தன்மையை முதல்ல கணிச்சு வெச்சுக்கங்க! வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசுங்க! கோபம் வரும்..வந்தா வார்த்தைகள் சிதறும்! கோபத்தைக் கட்டி மேய்க்கிறதுல தான் நம்ம வெற்றி அடங்கி இருக்கு!

 
வட இந்தியர்கள் பொதுவாக வணிகர்கள்..பேச்சே சத்தமாக, சண்டைக்கு வருவது போல இருக்கும்! ஆனா...மணிக்கணக்கா பேசினாலும், பேச்சோடு முடிந்து போகும்! அதுக்கு மேல சேதாரம் இருக்காது!

ஆனா..நம்மாளுக பேசிக்கிட்டா காயத்தோடு தான் (மனசு...சிலசமயம் உடம்பும்) எழுந்திருக்காங்க! பக்குவம் வரணும்!

ஒரு கட்டதுக்குள் எல்லைக்குள் இருந்து பேசறவங்க கிட்ட..நீங்க என்ன தான் அன்பாக பணிவாக பேசினாலும் எடுபடாது!

பேச்சு... பேச்சாகத்தான் இருக்கணும்!

பேச்சு ஏன் தோல்வி அடையுதுன்னா...நாம நெனைக்கிறது பேசறது மட்டுமே சரின்னு, ஒரு தரப்போ இல்லை ரெண்டு மூணு தரப்பிலும் நெனச்சிட்டா போதும்!

என்ன பிரச்சனை ஆனாலும் கடைசியா முடிக்கப்படறது பேச்சு வார்த்தைகளில் தான்! சோ...அந்த பேச்சு வார்த்தையே பிரச்சனை ஆகிவிடக் கூடாது!பேசறவங்க எல்லோரும் எல்லா நேரத்துலயும் ஒரெ மாதிரி பேசறது இல்லே! பேச்சு திசை மாறிடுச்சுன்னா...பேச்சை முறிச்சுக்கக் கூடாது! நேரங்காலம் தள்ளிப் போட்டு , இடத்தை மாற்றி பேசலாம்!

இல்லை .ஆசையை கோபத்தை நம்ம ஆதங்கத்தை, இழப்பை,எரிச்சலை வடிகாலாக்கியேத் தீரணும்னால்...நேரடியா முகத்துக்கு எதிராக பேசறதை தவிர்க்கணும்! கவுண்டமணிஅண்ணன் நாட்டாமைலே சொல்ற மாதிரி..செல்போன் வழியாக பேசிக்கறது கொட்டறது நல்லது!

கடைசியாக ஒன்று! அக்கம்பக்கம் பார்த்து ஆளைப் பார்த்து நேரங்காலம் வசதிகளைப் பார்த்து ...பேசறது நல்லது! அதே மாதிரி நம்மளை பாதிக்காத விஷயத்துக்கு, பேச்சை வளர்ப்பது சரியல்ல!

ஆத்திரம் கொண்டவனிடம் அமைதியாகவே பேச வேண்டும்! 
முட்டாளை பேச விட்டுவிட வேண்டும்!
அறிவாளிகளை பேச வைக்க வேண்டும்!


எப்பங்க பேசலாம்?
Like