Friday, November 16, 2012

பராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டுமா?


  ஜனங்க நாளுக்கு நாள் ரொம்ப தொட்டாசிணுங்கியா மாறிட்டு வர்றாங்க..!இதுதான் பரிணாம வளர்ச்சியான்னு கேக்கணும்னு தோணுது..! ஆனா பாருங்க இந்த வார்த்தை தான் கைஇடுக்கிலெ  சிக்கிட்டு..எழுத வரமாட்டீங்குது !

மதம்.., சாதி..,மொழி ..அபிமானம் ரொம்பவே ஜாஸ்தி ஆயிட்டு! பெட்ரோல் குண்டுல வந்து நிக்குது..! ஒத்த சினிமாவ உருப்படியா உடமாட்டிங்குது! பதிவு..கீச்சுல திட்டிக்கிறாங்க..குழாயடி சண்டை வேற..ஜெயிலுக்கு அனுப்பிச்சு பவரக் காட்றாங்க..!

இஷ்டத்துக்கு பேசுறாங்க..எழுதுறாங்க..சினிமா காட்றாங்க..! அது சுதந்திரம்..பேச்சுரிமைனு சொல்லிக்கிறாங்க..! உடனே எதிர் கோஷ்டி..க்ருப்பா வந்து பொரண்டு உருண்டு ரகளை செஞ்சு..அவங்களோட போராட்ட உரிமையை டெமான்ஸ்ட்ரேட்' செஞ்சுக் காமிக்கிறாங்க!

பலமான க்ரூப் அப்போதைக்கு ஜெயிக்குது..!அடிவாங்குனவங்க காயத்தையே உத்து உத்து பாத்து கிட்டு வெறியேத்திக்கிறாங்க..! சந்தர்ப்பம் வர்ற வரைக்கும் கருவிட்டு இருக்காங்க!

காரணம் நம்ம தேசத்தோட பல வண்ணக் (வர்ணாசிரம) கலாச்சாரம் தானுங்க!

பராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டுமா?


இனிமே இங்க பொதுவா கூட ஒரு நியாயத்தை ..யோ'சிக்காம சொல்லமுடியாது போல!

கதையிலே..பாட்டுலே..படத்துலே பேரு வைக்கிறதுக்கு எல்லாம் சண்டைக்கு வர்றாங்க! நாகப்பா..நாகலிங்கம்..மாரினு நம்பியார் எத்தனை தடவ கூப்பிட்டு இருப்பாரு!

கதாப்பாத்திரத்துக்கு பேரு வைக்கிறதை கண்காணிக்க தனியா சென்ஸார் போர்டு அதிகாரிகளைப் போடணும்..!

திரைக்கதை மொதல்லயே எழுதிட்டு ஒரு ஆயிரம் காப்பி எடுத்து..எல்லா மத..சாதி..கட்சி..,மொழி..இனம்..,சங்கம்..அரசு ஆபீஸ்களுக்கு கூரியர் செஞ்சு "என்னோசி" வாங்கிட்டுத்தான் வேலையத் தொடங்கணும்..அதுக்குள்ள உனக்கு வயசாயிடுமா!..உருப்படியா  பொழைக்கணுமா .வேணாமா?

தேனிகய்னா ரெடி..தெலுகு படத்துனால..அந்த ஊர் பிராமணர் கொதிச்சுப் போய் போராட்டம் எல்லாம் செஞ்சிருக்காங்க..இங்க துப்பாக்கி பட்ற பாடு எல்லாத்துக்கும் தெரியும்!


இன்னொரு அரங்கேற்றமோ ..சாவித்திரியோ... பாரதி கண்ணம்மாவோ, அலைகள் ஓய்வதில்லையோ..தட்டத்தின் மறையத்து வோ..இனி எடுக்கப்படும் சமீப சாத்தியம் ஒரு கேள்விக்குறியே!

 கொடூர..மோசமான கேரக்டர்களுக்கு இனி எந்தப் பெயர் வைத்தாலும் எதிர்ப்பார்கள்..! காண்பிக்கப்படும் சம்பவங்கள், தோரணைகள், பழக்கவழக்கங்களில் எந்த மத..சாதி சாயல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் திரைத் துறையினரும்..கதாசிரியரும்!

ஜெயம் படத்தில் மோசம் போகும் பெண்பாத்திரத்திற்கு " அலங்காரம்"னும்..கலகலப்பில் மொக்கை வில்லனுக்கு ' வெட்டுப்புலி"னும்  பேரு வெச்சமாதிரி..புயலுக்கு ஆப்பிரிக்க பேரு வெக்கறமாதிரி ரோசணை செஞ்சுத்தான் வைக்கணும்!

வைக்கப்புல்லு..மண்ணாங்கட்டி, திருகாணி,,தலைகாணி..,திருவாத்தான்..,வரிப்புலி..,வண்டுருட்டி..,மாதிரி பேரு வெச்சிங்க..தப்பிச்சீங்க!


திரைப்படங்கள்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினால் நியமிக்கப்படும் தணிக்கைத்துறை சான்று பெற்று வரும்போதே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!
மறுபடியும் ..உணர்வுகளின் அடிப்படையில் மாற்றம் கோருவதோ..நீக்கக் கோருவதோ..கல்ச்சுரல் போலீஸிங்..என ஆகிவிடுமே!


 இந்நிலை தொடர்ந்தால்..வேறு வழியில்லை..எல்லாக் கோட்டையும் அழிங்க..முதல்ல இருந்தே நான் 50 பரோட்டா சாப்பிடறேன் கதையாக...பராசக்தியில் இருந்துதான் ஆரம்பிக்கணும்! அந்தப்படத்தில் வரும் மத சம்பந்தமான வசனங்களை  நீக்குவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் ..சுத்தப்படுத்தலை!

என்னவோ போங்க..! ஆனா ஜாலியா எடுத்துக் கோங்க..!

8 comments:

 1. நீங்கள் சொல்வது சரி
  ஆட்டத்தை ஆரம்பத்திலிருந்துதான் ஆரம்பிக்கணும்
  நெருப்பின் சூட்டை அருமையாக
  சுடு நீராக மாற்றிக் கொடுத்துள்ளீர்கள்
  சொன்ன விதமும் சொன்ன கருத்தும் மிகச் சரி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கலையில் கலர் (வர்ணம்) பார்ப்பது..கேலிக்கூத்தே!
   சிலநேரங்களில் சில மனிதர்கள்!

   உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி...ரமணி சார்!

   Delete
 2. //திரைப்படங்கள்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினால் நியமிக்கப்படும் தணிக்கைத்துறை சான்று பெற்று வரும்போதே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!//
  பாய்ண்டு.. சார் நீங்க வக்கீல் எண்டு தெரியாம போச்சே.

  //நாகப்பா..நாகலிங்கம்..மாரினு நம்பியார் எத்தனை தடவ கூப்பிட்டு இருப்பாரு!//

  //வைக்கப்புல்லு..மண்ணாங்கட்டி, திருகாணி,,தலைகாணி..,திருவாத்தான்..,வரிப்புலி..,வண்டுருட்டி..,மாதிரி பேரு வெச்சிங்க..தப்பிச்சீங்க!//

  ஹா..ஹா..ஹா...சார் முடியல :) :) :0)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மகிழ்ச்சி எனது பாக்கியம்!

   உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி...கலாகுமரன் சார்!

   Delete
 3. என்ன செய்வது மக்கள் ரொம்பவே உணர்ச்சி வசப்பட ஆரம்பித்து விட்டார்கள்! கதைக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? அல்லது தூண்டி விடப்படுகிறார்களா தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு எளிதில் அழிந்து விடாது...சாதியும்,மதமும்!

   வருகைக்கு நன்றி சுரேஷ் சார்!

   Delete
 4. குற்றம் கண்டுபிடித்தால்
  செய்துகொண்டே இருக்கலாம்....
  சமூகத்துக்கு எது நல்லது
  எதைச் செய்தால் இச்சமூகம் உருப்படும்
  முன்னேறும் என்பதை சிந்தித்தாலே போதும்....

  நீங்கள் சொன்னதுபோல குற்றம் என்று வந்துவிட்டால்
  அதை முளையிலே கிள்ளி எறியவேண்டும் அல்லவா....
  ஆரம்பத்தில் இருந்து வரவேண்டும்...

  நாசூக்காக நீங்கள் சொன்ன விதம் மிக அருமை நண்பரே..

  ReplyDelete
 5. செய்யும் வினைகள் தானே ..ஒருவர் சார்ந்த அமைப்புகளுக்கு விமர்சனத்தை எடுத்து வருகின்றன! வினைகள் செய்ய பயப்படாத, தடுக்கத் துணியாத நாம் ..விமர்சனங்களுக்கு எரிச்சலடைவது ஏன்?
  சிறுபிள்ளைத்தனமாக யோசிக்காமல்..புறந்தள்ளிச் செல்ல வேண்டும்!

  வருகைக்கும் ..கருத்துக்கும் மிக்க நன்றி.மகேந்திரன் சார்!

  ReplyDelete