Wednesday, January 2, 2013

அமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை !

 கோவைக்கே தனிப் பெருமை உண்டு ! யாராலும் எளிதில் நினைக்க..நிகழ்த்த முடியா காரியங்களை 'ஜஸ்ட் லைக் தட்'  டாக செய்து முடிப்பது !


பாசிட்டிவா சொல்லனும்னா 'பார்முலா 1 கார் பந்தய வீரரை உருவாக்கியது ; அரசாங்க ஆதரவு அதிகமில்லாமலேயே பஞ்சு மற்றும் இயந்திர தொழிலில் முன்னேறியது என பலப்பல !


 எங்க  ஊர் ஆளுங்க மூளையை..எக்சிபிஷன்ல வைக்கலாம்..! அப்படி நெளிவா ..சுளிவா கோளாறா எந்த காரியமும்  செய்வாங்க !
ஜி.டி.நாயுடு பத்தி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை !


செஞ்ச வேலையின் தகுதிக்கு   ஏற்றமாதிரி...பாராட்டும் கிடைக்கும் ..!
சிலசமயம் ஜென்மாந்திர ஜெயிலும் கிடைக்கும் !

அரசுக்குப் போட்டியாக ரூபாய் நோட்டு அடிச்சு மாட்டிக்கிட்ட பெரும்புள்ளிக எல்லாம் வசிச்ச ஊர் கோவை ! கவுண்டமணி கூட ஒரு படத்துல ,செந்திலைப் பார்த்து " ஏண்டா..கோயமுத்துர்ல பொறந்துட்டு அம்பது பைசாவா அடிக்கிறது ..ஊரு பேரக் கெடுக்காதிங்க-ன்னு ' அலப்பரை பண்ணுவாரு !

சுமார் முப்பது நாப்பது வருஷமா ..கோயமுத்தூர் காரங்களை ..மத்த ஊர்காரங்க கிண்டல் பண்றதுக்கு 'நோட்டு அடிக்கிற பசங்க' ன்னு தான் சொல்றது ..! ஏதோ சிலர் செஞ்சதுக்கு உரே பழி சுமந்தது !

அந்த தீராப் பழியை எளிதில் துடைத்தெறிந்து விட்டனர்..கோவை மக்கள் சிலர் ! அப்படி என்ன காரியம்னா ..அமெரிக்காவுக்கே கடன் கொடுத்திருக்காங்க ! அதுவும் எவ்வளவு ? ஒன்றல்ல ..நூறல்ல ..பல்லாயிரம் கோடி .!

.ரூ 28 ஆயிரம் கோடி !

அமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை !அமெரிக்காவுக்கு பொருளாதாரப்பசி ! மசாலா கபே ' படத்துல வர்ற சிவா சொல்ற மாதிரி .."யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்குவாங்க ..கடனா "!

நம்ம பக்கத்து நாடு சீனா இருக்குது தானே !  அமெரிக்காவுல அந்த நாட்டு அரசாங்கம் வெளியிடும் கடன் பாண்டு பத்திரங்களை ..சீனா மிச்சமிருக்கும் அந்நிய செலவாணி பணத்தை வெச்சு ..வாங்கிப போடும் ..வருஷம் கொஞ்சமா ! இப்போதைக்கு சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொறுமான அளவிற்கு அமெரீக்காவுக்கு சீனா கடன் கொடுத்திருக்கு !


 இதைக் கண்டு கேட்டு ..மனம் பொறுக்காத கோவை பங்குச்சந்தை அன்பர் ஒருவர் ..இந்தியாவின் மனம் காக்க ,சென்னை தனியார் வங்கி மூலம் ..பணம் அனுப்பி அமெரிக்க கருவூல .கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளார் !
(US treasury Bonds)

 http://tamil.oneindia.in/news/2013/01/02/tamilnadu-5-bn-us-bonds-seized-from-tn-stock-broker-167205.html

கோவை இவ்வளவு நாளாக சுமந்து வந்த "கள்ள நோட்டுப் பழி ' துடைக்கப்பட்டு ' குபேரபுரி ' எனும் புதுப்பட்டம் வந்து சேர்ந்தது மிகவும் 
மகிழ்ச்சியாகவும் ..பெருமையாகவும் இருக்கிறது !


ஃபாலோ- அப் !  

06/01/2013

$5-bn US bonds seized from TN stock broker


http://www.indianexpress.com/news/-5bn-us-bonds-seized-from-tn--stock-broker/1053200/

முதலில் வந்த செய்திகள் கொடுத்த பெருமையின் ஆயுள்..விட்டில் பூச்சி போல சிலநாட்கள் தான் போலும் ! மேற்கொண்டு வரும் தகவல்கள்..அந்தப்பத்திரங்கள் போலியாக இருக்குனென்ற கருத்தைச் சார்ந்து வருகின்றன. போலி என்று நிரூபணமானால்..குபேரபுரி" எனும் பெருமை தகர்ந்து..ப்ராடுபுரி" என்பதே நிலைத்து விடும் வாய்ப்பு உள்ளது!
34 comments:

 1. //கோவைக்கே தனிப் பெருமை உண்டு ! யாராலும் எளிதில் நினைக்க..நிகழ்த்த முடியா காரியங்களை 'ஜஸ்ட் லைக் தட்' டாக செய்து முடிப்பது !//

  வாங்க ரம்மி சார்.... புத்தாண்டில் உங்கள் வருகை நல்வரவாகட்டும்

  நீங்க கோவையில் வசிப்பது தனிப் பெருமை. நீங்க பல்வேறு பதிவுகளை ஜஸ்ட் லைக் தட்டாக போட்டு பட்டையே கிளப்புறீங்களே அதுவே போதும் இந்த வரிக்கு விளக்கம் சொல்ல... என்ன நான் சொல்றது சரிதானே..?

  ReplyDelete
  Replies
  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் அட்வகேட் சார் ! தன்யனானேன் !

   Delete
 2. //சுமார் முப்பது நாப்பது வருஷமா ..கோயமுத்தூர் காரங்களை ..மத்த ஊர்காரங்க கிண்டல் பண்றதுக்கு 'நோட்டு அடிக்கிற பசங்க' ன்னு தான் சொல்றது ..! ஏதோ சிலர் செஞ்சதுக்கு உரே பழி சுமந்தது !//

  சார் .. இது உண்மையிலேயே தெரியாத விஷயம் சார்..

  ReplyDelete
 3. //அந்த தீராப் பழியை எளிதில் துடைத்தெறிந்து விட்டனர்..கோவை மக்கள் சிலர் ! அப்படி என்ன காரியம்னா ..அமெரிக்காவுக்கே கடன் கொடுத்திருக்காங்க ! அதுவும் எவ்வளவு ? ஒன்றல்ல ..நூறல்ல ..பல்லாயிரம் கோடி .!//

  இது நல்ல விசயம் சார்... ஆனா வக்கீலுக்கே உரிய சந்தேகம் நிறைய இருக்கு சார்..

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 4. //கோவை இவ்வளவு நாளாக சுமந்து வந்த "கள்ள நோட்டுப் பழி ' துடைக்கப்பட்டு ' குபேரபுரி ' எனும் புதுப்பட்டம் வந்து சேர்ந்தது மிகவும்
  மகிழ்ச்சியாகவும் ..பெருமையாகவும் இருக்கிறது !//

  ரொம்ப சந்தோசம் சார்... எப்படியோ புத்தாண்டிலே பழி போன சரிதான்.. வாழ்க !!

  ReplyDelete
 5. குபேரனின் படம் ஒரு புது உற்சாகத்தை தந்திருக்கு சார்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ! தாங்கள் ஆராய்வதற்கு இது ஒரு சுவாரஸ்யம் மிக்க செய்தி எனில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சார் !

   Delete
 6. இதையும் சேர்த்துக்குங்க...கார்களின் தரமான ரிப்பேரை கோவையின் சாதாரண மெக்கானிக் கூட சிறப்பாக சரி செய்வதில் கில்லாடிகள். அப்புரம் மோட்டார் மெக்கானிக். நீண்ட காலம் மக்கர் பன்னாம உழைக்கும் கிரைண்டர்கள்...இப்படி பல

  ஆச்ச்சர்யமான தகவலுக்கு நன்றி!


  ReplyDelete
  Replies
  1. ஒன்றா.இரண்டா . பெருமைகள்..! சிறுமைகளுக்கும் குறைவில்லை !

   கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி ! கலாகுமரன் சார் !

   Delete
 7. அவ்வளவும் கள்ள பணமாக இருக்கவ்ண்டும். பின் அதை அரசு பறிமுதல் செய்த பின் பின் எப்படி குபேரபுரி. அது ஓட்டாண்டி புரி

  ReplyDelete
  Replies
  1. குபேரபுரியில் இது ஒரு சாம்பிள் தான் ! அள்ளினாலும் குறையாது !

   Delete
 8. பெருமைப் பட வேண்டிய செய்திதான் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும்..கருத்தும் உவகை அளித்தது..மகேந்திரன் சார்! நன்றி !

   Delete
 9. Replies
  1. வருகைக்கும்..கருத்துக்கும் மிக்க நன்றி..சுரேஷ் சார்!

   Delete
 10. சார் நான் பக்கத்து நாட்டுல தான் இருக்கிறேன் தொலைவில்ல வெரும் 30 கிலோ மீட்டர்தான்..
  எனக்கு கோடிக் கனக்கிலெல்லாம் வேணாம் ஏதோ உங்க சிபாரிசுல கொஞ்சப் பணத்தை அந்தப் பயலிட்ட சொல்லி வாங்கித் தந்தா புண்ணியமாப் போயிடும்...

  என்னமா கடன் கொடுக்கிறானுகள் :P

  ReplyDelete
  Replies
  1. விசாரிச்சிட்டு பாரதியார் ரோடு பங்களாவுக்கு வந்திடுவாரு..போய் பார்த்து வாங்கிக்கலாம்..கவலைய விடுங்க ! நன்றி !

   Delete
 11. தலைப்பும் பதிவின் தகவலும்
  சொல்லிச் சென்ற விதமும் வெகு வெகு சுவாரஸ்யம்
  மிக மிக அருமை
  தொடர் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரமணி சாரின் வருகையும் பாராட்டும்..மகிழ்வை அளித்தன ! நன்றி !

   Delete
 12. //
  குபேரபுரியில் இது ஒரு சாம்பிள் தான் ! அள்ளினாலும் குறையாது !
  //
  Athane, evlo venumo avlo print panniga porranga...:) (just for joke)

  ReplyDelete
 13. மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்..கருத்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 14. உலக அளவில் டெக்னாலஜி டேலண்ட் இருக்கும் இடமாகவும் (கோவை ,நாக்பூர்),இந்தியாவின் அந்நிய செலாவணி அதிகரிக்கும் இடங்களில் இரண்டாவதாகவும் இருப்பது பெருமை. நீங்கள் கூறிய செய்தியும் அருமையான செய்தி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்..கருத்துக்கும் மிக்க நன்றி !ezhil Madam!

   Delete
 15. ரம்மி சார்... திருப்பூர்லே (தாராபுரம்) நடந்த ஒரு விசயம் இங்கிலீஷ் சேனல் வரை தெரியுது... கவனிச்சிங்களா? இதுவும் அதுவும் ஒன்றா?

  ReplyDelete
  Replies
  1. அதேதான் சார் !..முதல்ல கோவை பங்கு புரோக்கர்னு தான் ரிப்போர்ட் வந்தது ..! முழுவிவரம் இன்னும் தெரியலை சார் !

   Delete
 16. நா அப்போவே சொன்னேனல்லோ ... மேட்டர் எங்கியோ இடிக்குதுன்னு ...!

  ReplyDelete
  Replies
  1. சார்..எல்லா மீடியா செய்திகளும்..விசாரணை ஏஜென்சிகள் கசிய விடுவது தானே! அவங்க எப்படி சொல்றாங்களோ..அப்படி !

   Delete
 17. கத கந்தலாயிடுச்சு போல...

  ReplyDelete
  Replies
  1. முழுவிபரம் வந்தவுடன் கந்தலான கதை கன்ஃபர்ம் ! :-(

   Delete
 18. என்னங்க நீங்க பதிவு போட்டீங்க.அந்த சந்தோசம் தீருவதற்குள் இப்ப இன்னொரு கிருஷ்ணன் தான் உருவாகியிருப்பார் போல

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊரு மானத்தை கப்பலேத்தாம..விடமாட்டாங்க !

   Delete