Saturday, January 5, 2013

சங்கரமடம் அவ்வளவு இளக்காரமா ஆகிடுச்சா..மிஸ்டர் நல்லதம்பி !


முதல்ல அப்பா சொன்னாரு..அப்புறம் புதுவாரிசு ஆனந்தவிகடன்ல பதில் போட்டாரு..ஏமாந்து எரிச்சலான முதல் வாரிசு பேப்பர்காராளுக்கு அறிக்கை கொடுக்குறாரு!

என்னென்னு?

எங்க கட்சி ஆபீசு சங்கர மடமா' ந்னு?


ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆங்கிள்லே சொல்றாங்கொ..ஆனா பாருங்க ..ஒரே வாக்கியமா சொல்றாங்கோ! இதைத்தான் " ப்ளட் இஸ் திக்கர் தென் வாட்டர்' நு சொல்றதா?

தானாடாவிட்டாலும் தன் நாவாடும்' என்பதும் இதே தானோ?


குதுரை ஆதீனத்தை விடுங்க..சொருணகிரி தான் கடைசி ஆதீனமா இருக்க ட்ரை பண்றார்..கூடிய சீக்கிரம் அறநிலையத்துறை நாட்டுக்கு அர்ப்பணிச்சிடும் !

 மத்த ஆதீனமாகட்டும்..மடமாகட்டும்..சர்ச்..மசூதி எங்க பார்த்தாலும்..அடுத்த பட்டம் பெரும்பாலும் பழைய பட்டத்தின் வாசமே இல்லாத இடத்தில் இருந்துதான் வர்றாங்க..!

அதுவும் இன்னார் தான் அடுத்த வாரிசுன்னு தெளிவா..சொல்லிடுவாங்க! அப்படியே சொல்லாம போய்ட்டாலும்..அடுத்த பட்டம் கட்றதுல பெரிய கலாட்டா எல்லாம் இருக்காது !


அப்படி ஏந்தான் கூட்டமா சேர்ந்து அப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களோ?

சரி..சங்கர மடம் இல்லை ..உங்க கட்சி...வேறென்ன?

வேறென்ன..பிரவேட் லிமிடெட் கம்பெனியா..இல்லை பார்ட்னர்ஷிப் கம்பெனியா?

பப்ளிக் லிமிடெட் கம்பெனின்னு சொல்லமுடியாது! லிமிடெட் பப்ளிக்கை தானே உள்வட்டத்தில் அனுமதிக்கிறீங்க?தேவே கவுடா, முலயாம் சிங் யாதவ், காஷ்மீர் அப்துல்லா..குடும்பத்துல இப்படியா பப்ளிக்கா வெட்டு குத்து நடக்குது..கமுக்கமா முடிச்சுக்கல்ல! 

எம்ஜிஆரு தெளிவா செங்கோலைக் கொடுத்து காமிச்சாரே..யார் வாரிசுன்னு! அந்தத் தெளிவு இத்தனை நாள் கழிச்சாவது உங்க கட்சிக்கு வந்ததேன்னு சந்தோஷப்பட்டா..வாரிசு இல்ல..சங்கர மடமான்னு கேள்வி வேற கேக்கிறீங்க !


உங்க சண்டைக்கு சங்கரமடத்தை எதுக்கு இழுக்கிறீங்க? 


சரி..சங்கர மடம் இல்லைன்னு நாங்க..அதாவது மாக்களாகிய தமிழ் மக்கள் சொல்லணும்னா..அண்ணனும் வேண்டாம்..தம்பியும் வேண்டாம்...ஒரிஜினல்திராவிட  போராட்ட வாரிசு வைகோ இருக்காருல்ல ..அவரைக் கூப்பிட்டு ஒப்படைச்சிடுங்க ! 17 comments:

 1. நியாயமான கேள்விகள், பகுத்தறிவு இயக்கதை மழுங்கடித்த மக்குக் கூட்டம் அது.. மதங்கள் நஞ்சு என்றால், இந்த போலி பகுத்தறிவுக் கூட்டம் நஞ்சினை விட நஞ்சு. :(

  ReplyDelete
  Replies
  1. வருகையால் மகிழ்ந்தேன் செல்வன் !

   கருத்து காரமானாலும் மிக நன்று..வாழ்த்துக்கள்!

   Delete
 2. உங்களோட யோசனையா? சரியா இருக்குமா?

  ReplyDelete
  Replies
  1. அது அவர் செய்ய வேண்டிய ,,பிராயச்சித்தம்! அண்ணாதுரைக்கும்.தமிழக மக்களுக்கும் !

   நன்றி நண்பரே!

   Delete
 3. மெயின் மேட்டரே தொடமெ... கௌதம் மேனன் மாதிரி காட்சிப் படுத்தியிருக்கீங்க ....

  ReplyDelete
  Replies
  1. சார்..எல்லாம் உங்க ஆசீர்வாதம் !

   Delete
 4. "அண்ணனும் வேண்டாம்..தம்பியும் வேண்டாம்...ஒரிஜினல் திராவிட போராட்ட வாரிசு வைகோ இருக்காருல்ல ..அவரைக் கூப்பிட்டு ஒப்படைச்சிடுங்க"

  ReplyDelete
 5. செய்தி சூடாகத் தான் இருக்கு !

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்கநன்றி நண்பரே!

   Delete
 6. இவங்க அடிச்சுக்கற கூத்துக்கு ஊருக்கு இளைத்த சங்கரமடம்தான் கிடைக்கிறது போலிருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்கநன்றி நண்பரே!

   Delete
 7. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலை. சங்கர மடம் ....... சங்கர மடம் ....... என்று இவனுங்க எதுக்கு கூவிக்கிட்டு இருக்கானுங்கன்னே தெரியலை. சொல்லப் போனால் சங்கர மடத்தின் அடுத்த மடாதிபதி நிச்சயம் முன்னவரின் மகனாக எப்போதும் இருந்ததில்லை. இங்க மகனுங்களை அடுத்த வாரிசா போட்டு விட்டு சங்கர மடத்தை இவனுங்க எதுக்கு நையாண்டி செய்யுறானுங்க?

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்கநன்றி நண்பரே!


   அவர்களுக்கென்று சில தர்க்கங்கள்..! ஒரு முறை சொன்னால் பழுதில்லை..பாவமில்லை! தொடர்ந்து சொல்லும்போது தான் ..அவர்கள் அடைந்த எரிச்சலின் அளவு புரிகிறது!

   Delete
 8. இது ஜனநாயக நாடு, வாரிசுகள் கட்சி உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆலோசனை மிகவும் அருமை! ஆனால்..வேட்பாளர் எங்கிருந்து வருகின்றனர் என்பது தான் அடிப்படைப் பிரச்சனையே!

   மிக்க நன்றி..சார் !

   Delete
 9. ஒரு விஷயத்துக்காக கலைஞர் மகிழ்வார். அஞ்ச நெஞ்சனும் சங்கர மடம் குறித்து பேசுகிற அளவுக்கு பகுத்தறிவை வளர்த்து கொண்டதற்கு.

  ReplyDelete
 10. சங்கர மடம் is not a temple..its a caste system headoffice.....i think you may be a "pop" thats why are "pongging" :-)))))

  ReplyDelete