இனிது..இனிது
குளியல் இனிது..!
காக்கையும்
குருவியும்
சொல்லித் தந்தது!
மூன்று மாத கோடையில்
நாடே வெந்தது..!
தவறாமல் பருவமழை
பொழியவே வந்தது..!
உயிருக்குள் நனைக்கும்...குளிரால்
ஸ்பா..ஸ்பா...ஸ்பா !
உலகில் கிடைக்கும் குற்றால
ஸ்பா..ஸ்பா..இயற்கை ஸ்பா..!
ஆனியிலும் ஐப்பசியிலும்
நட்புகளுடனும்
ஆடி கார்த்திகையில்
உறவுகளுடனும்
கூடி குதூகலிக்க
குற்றாலமே..
கொண்டாட்டமே !
இதற்கிடையே
குரங்கு அருவியும்
ஒகேனக்கல்லும்
இடை இடையே !
மலைஅருவிகளின்
குளுமை..புத்துணர்ச்சி
ஆற்றருவிகளில் இல்லை!
அழைப்பு விடுக்க...மாருதி ஏறி பயணித்தோம்!
காலைப் பயணம் மாலை குற்றாலம் சேர்த்தது!
அதிகக் கூட்டம்
ஓடினோம் தேடினோம்
சத்திரம் கிடைக்காமல்
அல்லாடினோம்!
அறை வாடகைகள்
அருவியின் உயரம் பெற்று
ஆயாசம் தந்தது!
ஐந்தருவி செல்லும் வழியில்
புத்தம்புது குடியிருப்பு ஒன்றில்
பேரம் படிந்தது..!
வழக்கம்போல முன்னிரவு நேரம்
பழையகுற்றால அருவியில் கழிந்தது..!
பத்தரை மணிக்கும் பார்டர் கடையில்
கம்பிகேட் தாண்டி கூட்டம் வழிந்தது..!
காலையில் தென்காசி ராஜ்மெஸ்ஸின்
அருமையான டிபன்கள்
முடிச்சிட்டு வாகனத்தில் அமர்ந்தது...!
பயணித்து அறைக்குள் சென்று
காலிவயிறுகளில் அடைந்தது..!
எந்த அருவியில் இன்று என்று கூடிப் பேசினோம்..
உள்ளூர் காளை ஒன்று பொதுக்குளியல் வேண்டாம்..
ஏகாந்தக் குளியல் தான் ஆனந்தம் என்றது..!
பிரானூர் மாப்பிள்ளை ராஜாபாய்
எஸ்டேட் அருவிகளுக்கு செல்லுங்கள்
என ஆணையிட்டார்...
குண்டாறு அணைக்கு கைநீட்டி!
அவர்கடையிலே சுடச்சுட பிரியாணிகள்..
அன்று முதல் போணி..நம் நால்வர் கூட்டணி!
செங்கோட்டையில் இடதுபுறம்
ஐந்துகல் தொலைவில்
குண்டாறு அணை...!
சொந்த வாகனங்கள் அதோடு நிறுத்தம்!
மலை மேல் கரடுமுரடான பாதையில்
ஜீப் கார் பயணம்..!
முதல் அருவி அரசு அருவி..இலவசக் குளியல்!
அதுவரை நடந்தும் வரலாம்..பெண்களும் கூட!
அதற்கு மேலாக பாதையில்
ஆடி உலுக்கிச் சென்றால்..
அரைமணி நேரம் இரண்டுகல் தூரம்
அடுத்து அடுத்து இரண்டு அருவிகள்..
ஆர்ப்பாட்டமில்லா அருவிகள்..
ஏகாந்தமாக..
ஒரு சமயத்தில் ஒரு குழு மட்டுமே!
கொண்டாடத் தடை ஏதுமில்லை!
மலையில் இருக்கும் எஸ்டேட்களுக்கு சொந்தமானவை..!
கூட்டத்தைக் குறைக்க வேண்டி
அனுமதியும் வெகுமதியும் தேவை!
வண்டிக்கும் குளியலுக்கும்
இரண்டாயிரம் வரை தேவை..!
ஒரு குழுவிற்கு..!
சுமார் எட்டுநபர் வரை!
அல்லது ஒரு வாகனத்தில் வருபவர்க்கு!
இல்லை எனினும்
பிரமிப்பூட்டும் அனுபவம் நிச்சயம்..!
முடிந்தால் சென்று வாருங்கள்..!
குழுவாகச் செல்வது நல்லது..!
அருவியில் குளித்து வந்ததை அருமையாய் அருவியாய் கொட்டி தீர்த்து மற்றவர்களையும் போய்வர ஏக்கம் கொள்ள செய்துவிட்டீர்கள். நன்றி
ReplyDeleteஅருவியில் நனையும் இதம்
Deleteஇருக்கிறதே...ஆஹா..அல்புதம்!
சென்று வாருங்கள் ..
அண்ணே..உடனே !
எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு தனி சுகம்...
ReplyDeleteஏறக்குறைய திரிசங்கு சொர்க்கானுபவம் தருமே..எண்ணெய்க்குளியல்! குளித்து..எடுப்பு எடுத்தால், எழுந்திருக்க நாலு மணிநேரம் ஆயிடும்!
Delete
ReplyDeleteபாட்டாவே பாடிட்டீங்களா?
//
ஆனியிலும் ஐப்பசியிலும்
நட்புகளுடனும்
ஆடி கார்த்திகையில்
உறவுகளுட//
"நல்லா" அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல..
ஆனந்த'ம்..அமோகம் !
ReplyDeleteஇல்லை ஆரவாரம் !
அருவி அனுபவம் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்களின் கருத்து எனக்கு மகிழ்வு! நன்றி சார்!
Deleteமீண்டும் ஒருமுறை குற்றாலத்தில் குளித்த சுகமும்
ReplyDeleteஉங்களுடன் இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட இனிய நினைவும்
இப்பதிவு படிக்க வர மனம் அதிகம் குளிர்ந்து போனது
படங்களுடன் பகிர்ந்த விதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் ஒரு பைசா செலவழிக்க விடாது
இரண்டாவது முறையும் அழைத்துச் சென்று
குற்றாலத்தை மிகச் சரியாக அனுபவிக்கச் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தங்களோடான இலக்கிய உரையாடல்..அருவிக் குளியலோடு இனிமை சேர்த்தது...தொடரவேண்டும் நெடுங்காலம்!
Deleteபாட்டாவே படிச்சுட்டீங்களா?!
ReplyDeleteஎன்னுள்ளே என்னுள்ளே
Deleteபல எண்ணம் எழுந்ததே!
பாட்டு பிறந்ததே..!
நன்றி மேடம் !
பிரானூரில் தான் என் அலுவலகம். எந்த “ராஜாபாய்” ? ..... ஹாஜாபாய் தெரியும்.... வருஷம் முழுவதும் இங்கிருக்கும் எங்களுக்கு சீசனின் அருமை அவ்வளவாக தெரிவதில்லை. நீச்சல் தெரிந்தால் குண்டாறு அணையிலேயே குளிக்கலாம்..
ReplyDeleteகாலை டிபன் மேலகரம் விநாயகாவில் முடிச்சிருக்கலாமே ! !
குற்றாலம் பாண்டியன் லாட்ஜ் அசைவ உணவகமும் பிரபலம்
பார்டர் கடையில்! ஏனைய உணவகங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி நண்பரே ! அடுத்தமுறை வரும் போது, தங்களையும் சந்திக்க ஆவல்! மெயில் ஐடி கொடுத்தால் நலம்!
Deleteஅட பயணம் பற்றி கவிதையே வடிச்சுட்டீங்களே....!
ReplyDeleteநீங்க சொல்ற அருவிகள் புதுசா இருக்கே, இனி இந்த முறை போகும்போது ஆபீசரிடம் சொல்லி கூட்டிட்டு போக சொல்லனும்.
வாங்க பங்காளி ...நாங்களே அழைச்சுகிட்டுப் போறோம்!
Deleteகவித...கவித,,,,
ReplyDeleteநன்றி..ஜீவா..நன்றி!
Deleteகவிதையா உங்க சுற்றுலாவை அழகாக சொல்லியிருக்கீங்க..இந்த வருடம் செல்லலாம் என்று நினைத்திருந்தோம்..தவிர்க்க முடியாமல் செல்ல முடியவில்லை...உங்கள் பதிவு பார்த்தவுடன் அந்த ஏக்கம் வலுப்பெற்றது அடுத்த விடுமுறை குற்றாலத்துக்கே.....
ReplyDeleteவருத்தம் விடுங்கள்.. ஆழியார் அருகினில் இருக்கிறது குரங்கருவி..ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் சென்று வாருங்கள்!6 மணிநேரம் போதுமே..சென்று வர !
Deleteஇயற்கையை ரசிப்பவர்கள் மற்றும் அனுபவிப்பவர்கள் குற்றலாத்தின் இயற்க்கையை தங்களின் கவிதை மூலம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வர்ணித்திருப்பது சிறந்த வரவேற்பை பெறும். மேலும் இலஞ்சி குமாரர், திருமலைகோவில், அச்சன் கோவில், மேக்கரை அணை வழியில் திருவாடுதுறை மடத்தின் முன்னூறு வருட பங்களா, மடத்திருக்கு சொந்தமான சிவாலய அருவி (அச்சன்கோவில் செல்லும் வழியில்), மோகன் பங்களா அருவி இவற்றை எல்லாம் தங்களுடைய கவிதை நடையில் வாசிக்க ஆசை. மேலும் செங்கோட்டை மணி அய்யர் ஹோட்டல், தென்காசி கோவில் எதிர்புறம் உள்ளம் பலகார கடை (வடை உள்பட ஒன்று ஒரு ரூபாய், ருசியானது, தரமானது).
ReplyDeleteகுற்றாலம் தன்னுள் நிறைய ரகசியங்களையும், ஸ்வாரஸ்யங்களையும் கொண்டுள்ளது போலும்! உணவுக்கூடங்கள் அடுத்த முறை கண்டிப்பாக சென்று விட வேண்டியதே ! தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!
Deleteஇயற்கையை ரசிப்பவர்கள் மற்றும் அனுபவிப்பவர்கள் குற்றலாத்தின் இயற்க்கையை தங்களின் கவிதை மூலம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வர்ணித்திருப்பது சிறந்த வரவேற்பை பெறும். மேலும் இலஞ்சி குமாரர், திருமலைகோவில், அச்சன் கோவில், மேக்கரை அணை வழியில் திருவாடுதுறை மடத்தின் முன்னூறு வருட பங்களா, மடத்திருக்கு சொந்தமான சிவாலய அருவி (அச்சன்கோவில் செல்லும் வழியில்), மோகன் பங்களா அருவி இவற்றை எல்லாம் தங்களுடைய கவிதை நடையில் வாசிக்க ஆசை. மேலும் செங்கோட்டை மணி அய்யர் ஹோட்டல், தென்காசி கோவில் எதிர்புறம் உள்ளம் பலகார கடை (வடை உள்பட ஒன்று ஒரு ரூபாய், ருசியானது, தரமானது).
ReplyDelete"உங்கள் வருகைக்கு நன்றி" என்று நீங்கள் சொல்ல வேண்டிய நிலை மாறி "பதிவுலகிற்கு மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி" என்று நாங்கள் சொல்ல வேண்டியதாகி விட்டது. பரவாயில்லை பல்வேறு பணியிலும் எங்களை குளிர்விக்க வந்து விட்டீர்கள். ஸ்பா ....!
ReplyDelete.நாலு பக்கமும் திரிவதாலேயே...எழுத்துப்பணி சுணக்கம் ஆகிவிட்டது! தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!
Deleteகுற்றாலத்தில்
ReplyDeleteகுத்தாட்டம்
குளிர் அருவியில்
துள்ளாட்டம்.
பார்டர் கடை
தேனாட்டம்.
பசியாறிய பின்
மயிலாட்டம்.
பதிவு ரமேஷ் என்றாலும்
படங்களில் பதி இல்லை;
மீதி இருந்தால் அதையும்
மிச்சம் வைக்காமல் காட்டுக.
சென்றது ஆடவர் ஆயினும்
Deleteகவர்ச்சி ஓங்கியதால்.....
மற்ற படங்களை
காற்றில் கரைத்து விட்டோம்!
தண் பொதிகை மலைமேல் சிற்றாறாக ஓடிப் பெருக்கெடுத்து, மலை உச்சியிலிருந்து பொங்குமாக்கடலில் விழுந்தெழுந்து பொங்கிக் கீழே பேரருவியாக விழுவதே திருக்குற்றாலம்.
ReplyDeleteபொங்குமாக்கடலைப் பற்றிக் குறிப்பிடவே இல்லையே கவிதையில். மற்றப்படி ஊற்றெடுத்த உணர்வுகள் அருமையோ அருமை.
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பாருங்கள்http://blogintamil.blogspot.com/2013/09/6.html?showComment=1379804682537#c2030230268890817041
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பாருங்கள்http://blogintamil.blogspot.com/2013/09/6.html?showComment=1379804682537#c2030230268890817041
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-