Friday, April 12, 2013

தங்கம்..வெள்ளி தள்ளாட்டம் எப்போ முடியும் ?

 தங்கம் மேலிருந்து சுமார் 15 சதமும், வெள்ளி சமீபத்திய உயரத்திலிருந்து
30 சதமும் குறைந்து உள்ளது..இது குறித்து என்னுடைய பழைய பதிவைப் பார்க்கவும் !

http://rammy-rammys.blogspot.com/2013/02/blog-post.html

இது தங்கம், வெள்ளி வாங்கும் நேரமா?


தங்கம்..வெள்ளி இன்னும் சரியுமா..இல்லை வாங்க ஆரம்பிக்கலாமா..என்று கேட்போருக்கு, மீண்டும் சொல்லிக் கொள்ளுகிறேன்...S.I.P (Systematic Investment Plan) முறையில் அனைத்து விலைகளிலும்..சிறிது சிறிதாக நமது வருமானத்திற்கு ஏற்ற அளவில் வாங்கலாம்..

நீண்ட கால சப்போர்ட் நிலையை..இரண்டு உலோகங்களும் உடைத்து கீழே இறங்குகின்றன..புதிய சப்போர்ட் நிலை எங்கே..என்பது பெரிய கேள்விக்குறியே !

இந்திய மதிப்பில் ..இன்னும் 10 சத அளவிற்கு விலைகள் குறையலாம்..என உலோகசந்தை வல்லுஞர்கள் சொல்லுகிறார்கள்! ஃபிஸிகல், கோல்ட் ஈடிஃப்..இரண்டு முறைகளில் நீண்டகால் முதலீடு செய்யலாம் ! எம்ஸிஎக்ஸ் டெரிவேடிவில் விளையாட அனுபவம் வேண்டும்...நமக்கெல்லாம் அது ஒத்துவராது..! தில்லும், பணமும் உள்ளவர்கள் விளையாட்டு அது! அதன் பக்கம் செல்லாமல் இருப்பது மன/பண ஆரோக்கியம் !
 
தங்கம்..வெள்ளி தள்ளாட்டம் எப்போ முடியும் ? 

இந்த ஏப்ரல் முடிய கீழ்முகத்திலேயே இருக்கும் என சொல்லுகிறார்கள். அமெரிக்க மதிப்பில் தங்கம் சப்போர்ட் 1470, 1410, 1340..அதிகபட்சம் 1240 டாலர்கள்/ஒரு அவுன்ஸுக்கு, என எதிர்பார்க்கிறார்கள் ! வெள்ளி அதிகபட்சம் 22 அமெரிக்க டாலர்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கிறார்கள் ! 

பார்க்கலாம்..என்ன நடக்கிறது என்று !

Disclaimer : சந்தையில் நிலவும் சூழலைப் பொறுத்து.அவ்வப்போது வரும் வல்லஞர்களின் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பே இது..! என்னுடைய கருத்துகள் ஏதுமில்லை..!இந்த கட்டுரை வியாபாரம் செய்வதற்க்காக அல்ல..! வியாபாரமும்,விளைவுகளும் வியாபாரிகள் பொறுப்பு.! எனக்கும் விளைவுகளுக்கும் இஞ்சித்தும் சம்பந்தமில்லை..சந்தை நிலவரத்தை அவரவர்களே கணித்து வியாபாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது !

கனகமும்..ஸ்வர்ணமும் ஐஸ்வர்யங்கள்

5 comments:

  1. வீங்கிப்போன தங்கமும் வெள்ளியும் இப்பத்தான் வீக்கம் வத்திக்கிட்டு வருது உங்களுக்கு அது பொருக்கலையா?

    ReplyDelete
  2. எச்சர்க்கையூட்டும் பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல தகவல் பகிர்வு! நன்றி! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    ReplyDelete