Friday, July 12, 2013

ஆந்திராவை மூணா உடைச்சா..அடுத்த கோரிக்கை தமிழ்நாடு ?

அவ்வப்போது அடக்குமுறை தண்ணீர் ஊற்றி 
அணைத்தாலும் ,
தெலுங்கானா தீக்கங்கு முழுதும் அடங்காது 
உள்ளே எரிந்து கொண்டே 
இருக்கிறது..
எரிமலை போல !

ஏன் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை எழுந்தது 
என்பது எல்லாம்  பழங்கதை ! 
இரண்டாகப் பிரிக்கலாமா என கமிஷன் போட்டு ,
ஆராய்ந்த போது ,மூன்றாகப் பிரிக்கலாம் 
என ஆலோசனை சொல்லப்பட்டு 
செம ரகளை தான் போங்கோ !

ஹைதரபாத் தலையாக தெலுங்கானா ...
விஜயவாடா தலைஊராக சர்க்கார்..
கடப்பா தலைநகரமாக ராயலசீமா .. 

இந்தி பேசும் வடமாநிலங்களை எளிதில் பிரித்தனர் !
ஆந்திரா விஷயத்தில் தடுமாறுகின்றனர் ..!

செய்திகள் வரும் போக்கைப் பார்த்தால் ஆந்திரமாநிலப் 
பிரிவினை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதைப் போல் 
தோன்றுகிறது ! எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம் !

ஆந்திர மாநிலப் பிரிவினை செய்தி உறுதி ஆனாலும் ,
செயல்படுத்த சிலபல ஆண்டுகள் ஒதுக்குவார்கள் என 
நம்பப்படுகிறது !

ஆந்திரா பிரிவினை உறுதி என்றால் 
அடுத்து மேலும் சில மாநிலங்கள் வரிசையில் உள்ளன !

முதலாவது ...மராட்டியம் 
பிறகு குஜராத் ....ம்ம்ம் நம்ம ஆளுக 
சும்மா இருப்பாங்களா ..சேர்த்திகுவோம் !

குஜராத்தில் சௌராட்டிரம் மற்றும் மராட்டியத்தில் விதர்பா 
என ஏற்கனவே பேச்சு ஓடிட்டு இருக்கிறது !
இங்கேயும் சிலபல கட்சித்தலைங்க்க வடக்கு தெற்கா 
பிரிக்கணும் னாங்க ! கொங்குநாடு வேணும் னாங்க !

ஆந்திராவை மூணா உடைச்சா..அடுத்த கோரிக்கை தமிழ்நாடு ?

அவங்களுக்கு எல்லாம் உடனே அவசர வேலை வந்திடும் !
இருக்கவே இருக்கு காரணங்கள் :

1. எங்கள் பகுதி முன்னேறவில்லை !
2. எங்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் 
    பங்கு கிடைப்பதில்லை !
3. இரண்டாக வேண்டாம் ..முன்றாக பிரி !

போராட இங்கு விஷயமா இல்லை ..!

இது எல்லாம் நடந்திடும் னு  சொல்லலை !
நடக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்ல முடியலை !

அப்படி இங்கே பிரச்சனை ..கோரிக்கை எழுந்தால் 
எவ்வாறு விஷயங்கள் ஓடும் என சில கற்பனைகள் !

1. சக ட்விட்டர் சொன்னது : 
   காவிரிக்கு வடக்கு, தெற்காக பிரிப்பது !
2. சேர ,சோழா , பாண்டிய , பல்லவ நாடுகள் !
3. வன்னிய,கொங்கு , பாண்டிய நாடுகள் !

அனுமானங்கள் சிலசமயம் உண்மையாக 
நடந்திடில் ரசனை மிக்கதாய் மாறிடும் வாய்ப்பு !

பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன தான் ஆகும் என்று !

ஆடி மாத வாழ்த்துக்கள் !
எதுக்கா..? 
இது கடா விருந்து மாசமன்றோ ..அசைவர்களுக்கு!
விரத மாதமன்றோ ...பெண்டிருக்கும், ஆன்மீகருக்கும் !



எனக்குப் பிடித்த பாடல் அது உமக்கும் பிடிக்குமே !


17 comments:

  1. எல்லாரையும் பிரிச்சிடலாம்னு ஒரு முடிவோட ஐடியா கொடுத்திருக்கீங்க...(என்னவோ இப்ப ரொம்ப ஒற்றுமையா இருக்கற மாதிரி)

    ReplyDelete
  2. கோடங்கி & தெனாலி ராமன் வேலை !
    நடந்தாலும் ஆச்சரியமில்லை !

    ReplyDelete
  3. நடந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. கருத்திற்கு நன்றி..சுரேஷ் சார் !

    ReplyDelete
  5. என்ன சார் இந்த பிரி... பிரி... பிரிக்கிறீங்க...! கொஞ்சம் பயமாதான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. பிரியக் கூடாது என்பது தான் நம் எண்ணம்!

      Delete
  6. Replies
    1. தங்கள் கருத்திற்கு மகிழ்ந்தேன்.நன்றி!

      Delete
  7. ரெண்டை மூணாக்றதுதுதான் ராஜ தந்திரமா? சும்மா இருக்க மாட்டாங்க போல இருக்கு

    ReplyDelete
    Replies
    1. சுயநலம் ஓங்கிய தேசத்தில் ..எந்த கேடும் சாத்தியமே !

      Delete
  8. தங்கள் தீர்க்க தரிசனத்திற்கே
    அதிக வாய்ப்பிருக்கிறது
    முன்பு தமிழக ஆந்திரா பிரிவுக்குக்குகூட
    ஆந்திராதான் முன் அடி எடுத்துக் கொடுத்தது
    என் நினைக்கிறேன்
    உடைப்பட்து கிழிப்பது வெட்டுவது என்றால்
    நம் தலைவர்களுக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரிதானே
    பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. அதிகார பகிர்வு தான் ...இதற்கெல்லாம் அடிப்படை ! கருத்திற்கு மிக்க நன்றி !

      Delete
  9. "பிரியக் கூடாது என்பது தான் நம் எண்ணம்!"

    appadi theriyalaiye

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் தான் தெரியலை...அனானி ஐயா ! :-)
      ஏற்கனவே தலைவருக அரசல் புரசலா சொன்னதை,
      இங்கே கொடுத்திருக்கேன்..அவ்வளவுதானுங்கோ!

      Delete
  10. பிரிவுகள் எதற்கு என்பதைப்பொறுத்துத்தாணே விஷயத்தின் அடிப்படை முழுமைகொள்கிறது இங்கு/

    ReplyDelete
  11. தொடர்பதிவு :

    http://nigalkalam.blogspot.in/2013/07/blog-post_29.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. உருப்படுறதுக்கு வழி பாக்காத அரசியல்வாதிங்க..அவங்க உருப்பட்டுக்கறதுக்கு வழி தேடிட்டு இருக்காங்கே...

    ReplyDelete