Saturday, October 29, 2011

ஹனிமூனுக்கு சிறந்த இடம் எது?

நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வந்தனம்!

சமுதாயத்தின் எந்த மூலையில் நாமிருந்தாலும் பெரும்பாலோனோருக்கு தவிர்க்கமுடியா, விரும்பும் , மீண்டும் கிடைக்கா ஒரே தருணம் "ஹனிமூன் " என அழைக்கப்படும் "தேன் நிலவு"தான்!

தேன் நிலவு என்பது புது மணமக்கள் பெரியவர்களின் ஆசியோடு எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயணிக்கும் முதல் இன்பச்சுற்றுலா!இரு உள்ளங்களை  இறுக்க சேர்க்கும் கனவுசுற்றுலா!

மணநாள் முடித்து ஆசிகளைப் பெற்று தூக்கம் தொலைத்து அவசர அறிமுகம் முடித்து தெய்வங்களை வணங்கி விருந்துகளை விழுங்கி ...

உடலும் மனமும் களைத்து விடும் முதல் வாரக் கடைசியில் , உறவுகளும் நட்புகளும் , கடமைகளும் கண்/ கைக்கு எட்டா தூரத்தில் இருவர் மட்டும் தனியே ...

ஏறக்குறைய ஓடிப் போவதுதான்  தேன் நிலவு!..

இடம் எப்படி இருக்க வேண்டும்?

கண் முதலில் சுகப்பட வேண்டும்!
கண் வழியே மனதிற்கு சேதி செல்ல வேண்டும்!
மனம் சாந்தியடைய வேண்டும்!
இயற்கையின் பிரமாண்டமும் நர்த்தனமும் 
மனதை லேசாக்கும்!
அப்போது குளிரூட்டப்பட்ட காற்றும் 
மஞ்சுப் பொதிகளும் மெல்ல உடலைத் 
தாக்க வேண்டும்!
கை ஜோடிகள் தானே கோர்த்துக் 
கொண்டுவிடும்!
மனங்களை கொள்ளை கொண்டுவிடும்!

ஆயுசு முழுதும் இணை பிரியா பந்தம் உறுதிப்படும்!


அனைத்து வர்க்கத்தினருக்கும் ஏற்ற சிறந்த இடம், நமது 

கொடைக்கானல் !

கூட்டம் இல்லா நாட்களில் அங்கு சென்று பாருங்கள்! சொர்க்கம் !
செப்டம்பர் முதல் மார்ச் வரை அபாரம்! மழைக் காலம் தவிர!
வார நாட்களையே தேர்ந்தெடுக்கவும்!

இருவழிகள் உள்ளன! கொடைரோடு-வத்தலக்குண்டு வழியாகவும், பழனியிலிருந்து புதுவழியாகவும் செல்லலாம்!மலையேற பஸ்பயணம் தான் புதுசுகளுக்கு இதம்! பைக் பயணம் தான் சிறப்பு எனினும் கவனம் சிதற வாய்ப்பு அதிகம்! கார் எனில் இருவர் மட்டும்! கடைகள் இருக்கும் இடம் தவிர வேறெங்கும் இடை நிற்க வேண்டாம்!

தங்குவதற்கும் உணவிற்கும் பர்ஸுக்கு ஏற்றார்ப்போல கிடைக்கும்!

கடமைகள்!

பொழுதுபோக்கைத்தவிர இங்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள்:

1  அரைநாள் ஊர் உலா - வேன்களில் குழுவாக!
2  போட்டா எடுத்தல்
3  ஏரியில் படகோட்டம் 
4  ஏரியைச் சுற்றி உலா அல்லது மிதிவண்டி 

குறைந்த பட்சம் 3 நாட்கள் தங்குவது நலம்!

கொடைக்கானலில் இருந்து பார்த்தால் நிலவு அருகில் இருப்பது போலத் தெரியும்!

அதெப்படி மணநாள் முடிந்ததும் நிலவு வரும்? வளர் பிறையில் தானே பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுகின்றன! கூட்டி கழிச்சு பாருங்க...கணக்கு கரக்டா வரும்!

இதுவரை பரிந்துரை செய்து கொடைக்கானல் சென்று வந்த யாவரும் எனக்கு மிகுந்த நன்றியுடன் உள்ளனர்!

புதுசுகள் தான் செல்ல வேண்டுமா? இல்லை ! ஊடலுக்குப்பின் சமாதானத்திற்கு ஏற்ற சிறந்த இடமும் இதுதான்!பழசுகளும் செல்லலாம் ..ஆனால் இருவராக மட்டும்!


குறிப்பு: செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் - அக்டோபர் 2011 ! 19 comments:

 1. நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு
  படங்கள் அருமை
  செல் போனில் என்பது கூடுதல் ஆச்சரியம்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 2. இந்த பதிவை இரண்டு வருடம் முன்பே போட்டிருக்கலாமே!!!!! போங்க நண்பா நீங்க ரொம்ப லேட்

  ReplyDelete
 3. ரமணி சார்!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நோக்கியா X6 - ல் எடுத்தது!

  ReplyDelete
 4. ஸ்பார்க் கார்த்தி !

  இப்போதும் ஒரு வழி இருக்கு! உங்க மாமனார் வீட்டைப் பத்தி உங்க வீட்டில கமெண்ட் அடிங்க! வினையை நேர்படுத்த ஜோடியா கொடை போயிட்டு வாங்க!

  ReplyDelete
 5. உங்கள் நண்பன் !

  Thank you very much!

  ReplyDelete
 6. வெக்கேசனுக்கு கிளம்பலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். மழையைப்பார்த்து பயந்துட்டே யோசிச்சேன். உங்க போஸ்ட் பார்த்ததும் கிளம்ப முடிவே பண்ணிட்டேன்.

  ReplyDelete
 7. கடம்பவன குயில்!

  மேகப் பொதிகள் கொடையைப் போல எங்கும் காணக்கிடைக்கா! லேசான மழைக்காலம் அட்டகாசம்! பெருமழை காலத்தில் பழனிவழி மட்டும் அடிக்கடி தடைபடும்! குறிஞ்சி ஆண்டவர் கோவில் செல்லும்வழியில் நிறைய காட்டேஜ்கள் உள்ளன!

  கொடைக்கானலுக்கு சற்று முன் பெருமாள் மலை - வெள்ளிஅருவி வரை பாதை, புலிசோலை எனும், அடர்ந்த காட்டின் வழி செல்லும்!

  ReplyDelete
 8. போன வருஷம் செப்டம்பர்ல போனேன் நண்பர்களோடு.நீங்க சொன்ன மாதிரி அற்புத அனுபவம்.மேகத்திலேயே மிதந்த அனுபவம்.இரண்டு நாட்கள் அடடா!திரும்பவே மனமில்லாமல் வந்தோம்!

  ReplyDelete
 9. கோகுல்!

  அக்டொபர் மத்தியில் சென்று வந்தேன்! காலை ஏரியை சுற்றி நடை பயிற்சி!சுமார் 5.25 கி.மி! ஒரு மணிநேரம்! இருபது பேர் கூட இல்லை! சுத்தமான ஓஸோன் மூக்கில் ஏறுவது திண்ணம்!

  ReplyDelete
 10. மாப்ள பகிர்வு அருமை நன்றி!

  ReplyDelete
 11. அருமை ...

  Going to Kodai next month...

  ReplyDelete
 12. ரம்மி சார்... பத்து ஓட்டு வாங்கறதே பெருசா இருக்கு... அதெப்படி நீங்க மட்டும் 174 ஓட்டு வாங்கி இருக்கீங்க?
  யு ஆர் கிரேட் சார்.... நீங்க 'பதிவுலக மன்னன்' சார்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 13. அட்வகேட் சார்! போகும்போது நீங்கள் இருவர் மட்டும் செல்லவும்! டிசம்பர் 20க்கு முன், ஜனவரி 5 - 13, ஜனவரி 28க்கு பின்!
  வோட்டெல்லாம் நண்பர்களின் அன்புதான்!

  ReplyDelete
 14. தோழரே வணக்கம். ஒரே ஹனிமூனை பற்றியே நினைக்கதீன்கள். கொஞ்சம் மக்கள் பிரச்சனையை எழுதுங்கள். நல்லா இருக்கு உங்கள் பதிவு. வாழ்த்துக்கள். கீழ்க்கண்ட இந்த பதிவ படியுங்கள். உங்கள் விவாதங்கள் வரவேற்க்கப்படுகிறது. குற்றம் சொல்லி பெயர் வாங்கும் புலவர் அல்லவா நீங்கள். வாருங்கள் நண்பா! இருகரம் சேர்த்து தமிழர் என்று சொல்வோம்.

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
  http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html

  ReplyDelete
 15. நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழரே!

  கவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.

  ReplyDelete
 16. படங்கள் மனதை அள்ளுகின்றன!
  நன்று.

  ReplyDelete
 17. வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
  இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.
  அருமையான படங்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே!
  தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 16 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:
  நம்ம தளத்தில்:
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

  ReplyDelete