Sunday, October 23, 2011

தீபாவளிக்கு திருப்பதியா..மதுரையா?

நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வந்தனம்!

பண்டிகை எனில் முன்பெல்லாம் புதுத்துணியும் பலகராமும் தான் பிரதானம்!
தீபாவளி எனில் பட்டாசும் சேர்ந்துவிடும்!சுமார் 20 வருடம் முன்வரை பண்டிகை கொண்டாட்டங்களில் பெரியவர்,சிறியவர் வித்தியாசம் பெரியதாக இல்லை!

பெரியவர்கள் சிலர் திரைகொட்டகையில் இடம் கிடைக்க போராடுவர்! வீட்டுப்பெண்கள் பாவம்! அடுப்படியே கதியென்று கிடப்பர்!

பிறகு மெல்ல தொலைக்காட்சி வீட்டில் நுழைந்து பண்டிகை நாளின் பெரும்பகுதியை தம் வசம் உடும்பு போல பிடித்துக் கொண்டது ! பெண்களும், சிறுவரும் டி.வி யே கதியென கிடக்க, ஆண்கள் மெல்ல வீட்டை விட்டு வெளியேறத் துவங்கினர்!

எதற்கு?

நண்பர்களோடு கலக்கத்தான் ! காலையில் சிறிது நேரம் போக்கு காட்டி விட்டு நழுவி நட்புடன் கூடி மெய்   மறந்து கொண்டாடி சிறப்பிக்கின்றனர் !

மாலையில் பொழுதுபோக்குத் தளங்களிலும், உணவுக் கூடங்களும் குடும்பங்களாக வழியும் !

இதெல்லாம் உள்ளூர் வாசிகளின் கொண்டாட்டங்கள்!
பிழைப்பிற்காக ஊரை விட்டு அசலூரில் வசிக்கும் குடும்பங்கள் பண்டிகை வந்தால் படும் அவஸ்தை சொல்லி மாளாது!



பொதுவாக தென், கிழக்கு மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் தொழிற் நகரங்களுக்கு சென்று தங்கி வேலை செய்வோர் பெரும்பாலானோர் பண்டிகைகளை எப்பாடு பட்டாலும் தமது ஊர் சென்று சொந்தங்களோடு கலந்து மகிழவே விரும்புகின்றனர்!

திருச்சி, மதுரை - இரண்டுமே தவிர்க்க முடியா ஊர்கள்! பண்டிகைகளுக்கு முன்பும பிறகும் இந்த இரண்டு ஊர்களும் மிகவும் பரபரப்பாக இருக்கும்!

பண்டிகை பொழுதில் ஏன் குழந்தைகளோடும் மூட்டைமுடிச்சுகளோடும் பெரும்பணம் செலவழித்து அலைகிறார்களே என்று பார்ப்பவர் சஞ்சல மடைந்தாலும், பின்னால் ஒரு துயரம் ஒளிந்திருக்கிறது !

மற்ற நாட்களில் ஊர் செல்ல நேரும்போது அங்கே  பேச, உறவாட நட்புகளும் சொந்தங்களும் காணக் கிடைக்கா! பிழைப்புக்காக வெளியேறி சூன்யமாகவே நிலவும்!

பகலில் எங்கோ சுற்றிவிட்டு இரவில் ஒரே மரத்தில் அடையும் பறவைகள் போன்றதே பண்டிகைகளுக்கு தவறாமல் ஊரை நோக்கிச்செல்லும் மனிதர்களும் ! இத்தகைய பயணங்கள் மிக அசௌகரியமாக திகழ்வதால் குடுமபத்துடன் இரு சக்கர வாகனத்தில் அபாயகரமாக பயணிக்கின்றனர்!அதை தவிருங்கள் தயவு செய்து!

விடுமுறை எப்போது விடுவார்கள் .. எங்கு செல்லலாம் என்று ஒரு குழுவினர் காத்துக் கொண்டுள்ளனர் ! இவர்கள் யார் எனில் தொழிற் நகரங்களில் வசிப்போர்! இயந்திரமாகி விட்ட இவர்களது வாழ்க்கையில் தேசிய / பண்டிகை விடுமுறைகள் இவர்களுக்கு விடுதலை நாட்கள் !

இவ்வகையினர் தீபாவளி அன்று பெரும்பாலும் கோவில்களையே நாடுகின்றனர்! தீபாவளி சமயத்தில் அங்கு கூட்டம் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும் ! இதை அனுசரித்து ஒரு சிலர் தீபாவளி சமயத்தில் திருமலை மலையப்பனை தரிசித்து வந்தனர் ! தற்போது அந்த தகவல் பரவி திபாவளியன்று மக்கள் அலை மோதுவதாக செய்திகள்!

கொண்டாட்டங்கள் திசை மாறிவிட்டன!




 

4 comments:

  1. தென் மாவட்டங்களிலிருந்து வந்து சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் அனைவர் சார்பாக சொல்லியுள்ளீர்கள் அருமை,, மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம், . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. படமும் பதிவும் மிக மிக அருமை
    படத்தை மிகச் சரியாக உற்றுப் பார்க்கவேண்டியிருக்கிறது
    இல்லையெனில் அதுவும் குப்பை வண்டிபோல்தான் உள்ளது
    பண்டிகைகள் திசை மாற்றப்பட்டு விட்டன
    யதார்த்தம் சொல்லிப் போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  3. மாப்ள அருமையான பதிவு....இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!

    ReplyDelete
  4. நினைவுகளை நல்ல ரசனையுடன் பகிர்ந்துகொண்டிருக்கிரீர்கள் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete