நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம்!
பழையன கழிதலும் புதியன புகுதலும் அன்றாடம் நம்மிலும் நம்மைச் சுற்றியும் நிகழ்ந்து கொண்டேதான் வருகிறது!
நுகர்வோர் பொருளாதாரத்தில் மாற்றங்கள் அடிப்படையானது! சந்தைப்படுத்த, சந்தையைத் தக்கவைக்க மாற்றங்கள் தேவையாகிறது!
பழையன கழிதலும் புதியன புகுதலும் அன்றாடம் நம்மிலும் நம்மைச் சுற்றியும் நிகழ்ந்து கொண்டேதான் வருகிறது!
நுகர்வோர் பொருளாதாரத்தில் மாற்றங்கள் அடிப்படையானது! சந்தைப்படுத்த, சந்தையைத் தக்கவைக்க மாற்றங்கள் தேவையாகிறது!
கடந்த சில மாதங்களாக சிறிதும் பெரிதுமாக கார்கள் நம் சந்தைக்கு வந்துள்ளன!
ஹோண்டா ப்ரியோ! விலை ரு 4 .70 லட்சம் முதல்! பெட்ரோல் விலை ஏற்றத்தின் காரணமாக விற்பனை சரிவினால் அவதிப்பட்ட ஹோண்டா நிறுவனம் , தன சந்தையை சரி செய்துக் கொள்ள இறக்கியுள்ள துருப்புச்சீட்டு இது !
1200 சிசி திறன், 18 கிமி நெடுஞ்சாலை தூரம்/ 1 லிட்டருக்கு. தரமான எஞ்சின், தேய்மான செலவு குறைவு, ஏற்றது !
நிஸ்ஸான் சன்னி! செடான் வகையை சார்ந்தது! விலை ரூ 7 லட்சம் முதல்!
பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் வரவிருக்கிறது!
டீலர் நெட்வொர்க் குறை! 1500 சிசி, 17 கிமி / 1 லி ,சற்று நீளமான கார்!
மகிந்திரா XUV500. ஜப்பானிய, மேற்கத்திய தயாரிப்புகளுக்கு சவால் விடும் வகையில் உள்நாட்டில் தயாரானது! விலை ரூ 11 .70 லட்சம் முதல்!
2200 சிசி, 15 கிமி / லி ,டீசல் , உறுதியான வண்டி !
பிரிமியர் ரியோ ! முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பு ! அதிகம் விளம்பரமில்லை !
விலை ரூ 5 .60 லட்சம் முதல்!
1500 சிசி , 16 கிமி/ லி , நிறுவனத்திற்கு நற்பெயர் இல்லை !
ஹுண்டாய் இ ஆன்! விலை ரு 2 . 75 லட்சம் முதல் ! இது ஒரு மக்கள் கார் !
800 சிசி , பெட்ரோல் ,21 கிமி/லி
தங்கள் தேவையின் அடிப்படையில் மட்டுமே வாகனங்கள் வாங்க வேண்டும்!
அதிகம் பயணிப்போர் டீசல் கார்களை வாங்கலாம்!
பொதுவாக பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் உறுதியானவை, அதிக மைலேஜ் , அதிக உழைப்பு ! ஆனால் விலை அதிகம் !
தேவையானவற்றைத் தேர்ந்தெடுப்போம் ! மகிழ்ந்திருப்போம் !
மிக நல்ல தகவல். எப்படியாவது கார் கூட இலவசம் என்று ஒரு தேர்தல் அறிக்கை கூட வராதா என்ன..? ஹ. ஹா . தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteஉங்கள் நண்பன்!
ReplyDeleteவருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள்!