Wednesday, January 8, 2014

ஆடையின்றி பிறந்தோமே...!


தொல்லையின்றி பிறந்தோமா...?!

பிறக்கையில், வளர்கையில் தாய்க்கு தொல்லை தந்தோம்!

கல்விக்கு தந்தையையும்,
கலவிக்கு துணையையும்,
வளமாய் வாழ உடன்பிறப்புகளையும்,
வெளியே உறவுகளையும்,
வயோதிகத்தில் பிள்ளைகளையும்...
நோகடித்து விடுகிறோம்!


மழையின்றி சபிக்கப்பட்ட தமிழ்நாடு!

ஆயிற்று இரண்டு வருடம்...மழைப் பொழிவைக் கண்டு! அவ்வப்போது சிறு தூறல்கள் வந்து ஆவலைக் கிளப்ப முயன்று தோற்று விட்டன!
விவசாயி விட்டு விட்டான்....நம்பிக்கையை அல்ல! விவசாயத்தை!
30ல்..20 மாவட்டங்களில் தை மாசியிலேயே தண்ணீர் பஞ்சம் வந்துவிடும் போலிருக்கு!
வாழ்க எல் -நினோ ! இயற்கையின் சித்து விளையாட்டு!

 ஆடையின்றி பிறந்தோமே...!

 ஆயாசப்படுத்துகிறது கூட்டணி அனுமானங்கள் !

தேர்தல் வருடம்...! மீண்டும் அதே முகங்கள்..அதே ஆசைகளுடன்..ஆனால் முகமூடிகளை வேஷங்களை கோஷங்களை சற்று மாற்றி போட்டு !
அதிகார வெறி... பணவெறி இரண்டும் கூட்டணி அமைத்து, சாதி/மத வெறியாக பரிணமித்து உள்ளது!

எவன் எவனோட சேர்ந்தா ...நமக்கென்ன!
எவன் கிட்ட இருந்து எவ்வளவு ஓட்டுலஞ்சம் கிடைக்கும்...இலவசம் எவ்வளவு கிடைக்கும்..இது தாண்டா மக்கள்!

புகை விலகியதாம்...இளைஞர்களை விட்டு!

33 லிருந்து, 23 சதமாகக் குறைந்துள்ளதாம்..இந்த பத்தாண்டில்..இளைஞர்களிடையே புகைக்கும் பழக்கம் ! வாழ்த்துக்கள்...ஒருவேளை பெண்சிநேகம் கிடைப்பது எளிதாகிப் போனதால், இது நடந்தேறி இருக்குமோ? எதுவானால் என்ன..நல்லது நடந்தால் சரி!

ஆம் ஆத்மி..

இந்திப் பெயரில் ஒரு இயக்கம்! அவசரத்தில் பிறந்து..அதிரடியாக வளர்ந்து வருகிறது இதுவரை விசில் அடிச்சான் குஞ்சுகளுக்காக அதிரடி பேட்டிங் செய்துவரும் கேஜரிவால், அடங்குவாரா இல்லை அடக்கப்படுவாரா..இல்லை விஸ்வரூபம் எடுப்பாரா?

எதாவது ஒரு மாற்றுசக்தி வேண்டும்...நிதானித்து நீண்ட கால திட்டங்கள் அடிப்படையில் முயற்சிப்பது நலம்! கூடவே பிரகாஷ் காரத்தையும் இணைத்துக் கொள்ளலாம்..அவர் சீன அபிமானத்தை விட்டு வந்தால்!

நடிகனுகளுக்காக சண்டை!

ஓயல..ஓயல..ஓயாது! அஜித்/விஜய் படங்கள்..டீசர்கள்..டிரெயிலர்கள்..தியேட்டர்கள் என அடிச்சிக்கிறானுகோ..! 70 அடிக்கு கட் அவுட், பாலாபிஷெகம்..அட ராமசாமி..எங்கேப்பா இருக்குறே!

எந்த ஆக்டரு படத்துக்கு, பிளாக்லே அதிக விலைக்கு டிக்கெட் விக்குதுனு எல்லாம் பேசிக்கிறானுவோ...கெரகம் பிடிச்சவனுக!

நாய்க்கு பட்டுக்குஞ்சம்னு பேராம்!

கொடூரன் ராஜபட்சிக்கு..பாலஸ்தீனத்தில் பாராட்டு, விருது, வீதிக்கு அவனோட பேரு! இதுவரைக்கும் இஸ்ரேல் தான் இலங்கைக்கு உதவுது..அப்படிங்கிற அவப்பெயரை துடைக்க, தமிழ் மக்களைக் கொன்னது சரிதான்னு, முஸ்லீம் நாடும் கிளம்பிடுச்சு!

பாலஸ்தீனத்துக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம்...இதுலா இலங்கைக்கு சப்போர்ட்டு வேற! நல்ல இருங்கடா?!

ராகுலை பிரபலப்படுத்த காங்.திட்டம்!

கோடி கோடியா செலவு செய்யப் போறாங்களாம்! தங்கச்சியம்மா பிரியங்காளுக்கு வேற சலங்கை கட்டி, மேடையில இறக்கிவிட்டு இருக்காங்க! 

பையனை பிரபலப் படுத்தொணும்னா ஒரே வழி..டெய்லி ஷேவிங் செய்யச் சொல்லுங்க...ஒரு கண்ணாலத்தை செஞ்சு வெச்சீங்கண்ணா..பக்குவம் வந்துடும்! அஞ்சு வருஷம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் வாங்க! பை பை..கலாய்ச்சி பை!

வைகோ அண்ணாச்சி!

அவரும் எத்தனை நாள் ..நடந்து கிட்டே இருப்பாரு!? பாஜகவோட நின்னு ஜெயிக்கணும்! மத்திய மந்திரி ஆகணும்! இலங்கையை மிரட்டணும்! கனவு காண்றதில் தப்பில்லை ..அது எங்க இஷ்டம்! கல்லைக் கீழே போடுங்க!


சர்க்கரைப் பொங்கல் செய்யும் முறை ..பாரம்பரிய முறையில் !


பொங்கல் பரிசு!

அடுத்த வருஷமாவது..குடும்பத் தலைவருக்கு குஷிப்படுத்த ஒரு குவாட்டரும், குடும்பக் குழந்தைகளுக்கு சத்து கூட்ட ஒரு கோழியும் கொடுத்தா  நல்லா இருக்கும்! 
அதிகாரம் கவனிக்குமா?


எத்தனை நாள் தான் ஒரே ஸ்டைல்லே எழுதறது?

மாற்றம் தேவை..அதனால் ஒரு கன்னி முயற்சி !
நல்ல கருத்தா சொன்னீங்கனா...சந்தோசம்,மகிழ்ச்சி!







11 comments:

  1. வருங்காலத்தில் பொங்கல் பரிசு நடந்தாலும் நடக்கலாம்...

    'ஸ்டைல்' தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. அன்பர் தினாதனா ! சந்தோஷம் .. மகிழ்ச்சி ! நன்றி! வாழ்த்துக்கள் !

      Delete
  2. வெற்றியரசன்January 8, 2014 at 8:46 PM

    கன்னி முயற்சியிலே தண்ணியை பற்றி நல்லா சொன்னீங்க , நீங்க சீக்கிரம் முன்னேறிவிடுவீங்க , முன்னேத்திடுவீங்க கோழி கேக்குதா கோழி, எந்த கோழி, நாட்டுக்கோழியா?,நகரத்து கோழியா? பார்த்து சொய்ங்க, நரகத்துக்கு போரவழியை தேடாதிங்க1

    ReplyDelete
    Replies
    1. உத்தரவு மகாராஜா! தங்கள் ஆணைப்படி ..இனி இந்த உருப்படி! மிக்க நன்றி !

      Delete
  3. கன்னி முயற்சியென சொல்லித்தான் தெரிகிறது
    வித்தியாசமான நடை அட்டகாசம்
    தொடர வாழ்த்துக்கள்
    செய்திகளும் சொல்லிச் சென்றவிதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. செய்திகள் என் பார்வையில் ..என ஒரு புதிய முயற்சி ! மிக்க நன்றி ..சார்!

      Delete
  4. நல்ல பதிவு.. தண்ணீர் போல் வழிகிறது வார்த்தைகள்!!

    ReplyDelete
  5. புதிய நடை அருமை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அருமையான எழுத்து நடை
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரர்
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete