Tuesday, February 12, 2013

உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!

  வாதம்..உடலில் ஒருமுறை வந்தால் வீடுபேறு அடையும் வரை விட்டுப் போகாது ! வாயால் வாதம்...செய்தால் ஏதாவது ஒரு இடத்திலாவது..நெஞ்சாகட்டும்..மூஞ்சியாகட்டும் ரணமாக்காமல் போகாது !

ஆக..வாதம் என்றாலே பாதிப்பு என்று தானே அர்த்தம்..?


 வாதத்திற்குக் காரணம் ..தடை..அல்லது அடைப்பு..மேலும் எதிர்ப்பு ! சீராக ஓடுவது/கிடைப்பது ஏதாவது ஒரு காரணத்தால் தடுக்கப்பட்டால் அல்லது திருப்பப்பட்டால்..ஏற்படும் !தனக்கு இயல்பான, இஷ்டப்பட்ட செயல்..மாறுபடும் போது வாதம் பிறக்கிறது..!

ஏமாற்றம் வாதாடத் தூண்டுகிறது..! வாய்வாதம் ..மிதவாதம் ..எனப்படுகிறது ! சிலசமயம் வைத்தியம் பார்க்கப்பட்டு..ஓரளவு அதோடு மேலும் பரவாமல் நிறுத்திவிடலாம்..! இதுதான் பொதுவாக ..நடப்பது..! பொங்கிவிட்டு ..வலிதீர்ந்ததும்..காலம் எனும் மருந்திட்டு கோணல்களை..சற்று நேராக்கலாம்!அடுத்து அறுவை சிகிச்சை..அது தான் "தீவிர வாதம்" !
அப்படிப்பட்ட ஒருவனைத் தான் இன்று ஒரு மலையோர பயணத்தில் சந்தித்தேன் !

தடாலடியாக முன்னே வந்து நின்றான்..அவன் ! அவன் கண்களில் ..தீர்க்கம்..ஏதோ அடைய வேண்டும் என்ற வெறியுடன் !அவன் பின்னே ஒரு பெண்..சற்று வயதான தோற்றம்..கவலையும்..கோபமும் அவள் கண்களில்..!

அவனாக வரவில்லை..எங்கள் முன் ஏறக்குறைய இழுத்து..தள்ளப்பட்ட நிலையில் ! பெரும்பாலும் ..கிராம இளைஞர்களே தீவிரவாததால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!


என் நண்பனுக்கு ..அந்தப் பையன் ஏதோ தூரத்து உறவு போல! வயதான பெண்மணி அவனின் தாயாராம் ! மிகுந்த பதட்டத்தில் இருந்தார் அந்த அம்மணி! 

எந்த நேரத்தில்..எங்கிருந்து ஆபத்து வருமோ என்று பரபர ப்புடன் காணப்பட்டார்..அப்பெண்மணி!"இவன்கிட்ட எப்படியாவது எடுத்துச் சொல்லி..அங்கெ இருந்து விடுவிச்சு..நீதான் காப்பாத்தணும்..நீ சொன்னாத்தான் இவன் கொஞ்சமாவது கேப்பான்" என்று நண்பனிடம் சொன்னார் அந்தத் தாய்! 

இன்னும் பதினஞ்சு நாளில் இவனுக்கு கல்யாணம்..அவனோ ஒரே பிடிவாதமா அங்கேயே இருக்கான் ! எப்படி கல்யாணம் செய்யறது..ஒரே பையன் வேற..! வெளியில தெரிஞ்சா அசிங்கமாயிடும் ! குடும்ப கவுரவம் போயிடும்..! நீதான் ஏதாச்சு செய்யணும் ! பொண்ணு வீடு வேற பெரிய இடம்..ஆனாலும் ரொம்ப கோவக்காரங்க..ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போவுது !' என்றார்.!

என்னாசும்மா'ன்னு நாங்க கேக்கவும்..சட்டைய கழட்டுடா'ன்னு..பையன் கிட்ட சொல்ல ..உடம்பு பூரா கீறல்கள்..பிளேடால் கீறி ஆறியும்..ஆறாமயும் ! சட்டப் பாக்கெட்க்கு நேர் பின்னாடி.. " ஜெனிதா"ன்னு..டாட்டூ..முஞ்சிலடிச்ச மாதிரி தெரிஞ்சது !

 உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!
அம்மா செல்லம்..மாசம் முப்பதாயிரம் சம்பளம்..ஒரு பைசா விட்டுக்கு கொடுக்கிறதில்ல..முக்காவாசி சம்பளத்தையும் அந்த பொண்ணுக்கே செலவு செஞ்சிருக்கான் ! போதலைன்னா..அம்மாக்கரி கிட்டயும் வாங்கிட்டுப் போயிருக்கான்!
பொண்ணு ரொம்ப லட்சணமாம்..பையன் தீவிரவாதி ஆகிட்டான்! மூணு வருஷ லவ்வாம்! இவன் தான் "டாட்டு" குத்தி இருக்கான்.அவளோ"பிரெண்டாத்தான் நெனைச்சேன்'னு வசனம் பேசிட்டு நாமத்தையும் போட்டுட்டு..அமெரிக்கா போயிட்டா ! இவனால மறக்க முடியலை !

 இப்போ பிரச்சனை என்னன்னா .."டாட்டூ" வை அழிக்கணும்..கல்யாணத்துக்கு முன்னாடி..காயத்தையும் ஆத்தணும் ! எந்த டாக்டர் கிட்ட போறதுன்னு நாங்க பேசிட்டு இருந்தப்போ..அதுவரைக்கும் பேசாம ..நின்னுட்டு இருந்த அந்த தீவிரகாதல்வாதி" ராஸ்கல் கேட்டானே.ஒரு கேள்வி !

"அண்ணோவ்..இந்த பேர் அப்படியே நெஞ்சுல இருக்கட்டும்..மேல வேணும்னா ஒரு பூ மாதிரி போட்டு மறைச்சிட்டா என்ன'ன்னு !"

நெஞ்சுக்குள்ள அவளை எழுதி வெச்சேன் ...! அவன் !
காதல் ஒருவழிப்பாதை பயணம்..! நாங்கோ !

அனைவருக்கும் அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள்!
 

13 comments:

 1. Replies
  1. தெய்வீக சிரிப்பு தந்த பங்காளிக்கு நன்றி!

   Delete
 2. சார்.... தலைப்பை பாத்தவுடன் கொஞ்சம் பயந்துட்டேன்....

  ReplyDelete
  Replies
  1. டம்மி பீஸ் சார்..நானு ! டீ விக்கிற வாதியை..பார்த்திருக்கிறேன்!

   Delete
 3. //"அண்ணோவ்..இந்த பேர் அப்படியே நெஞ்சுல இருக்கட்டும்..மேல வேணும்னா ஒரு பூ மாதிரி போட்டு மறைச்சிட்டா என்ன'ன்னு !"//

  சார்... இதுக்கு பேருதான் ரணகளமென்கிறது .

  "காதல் காயம் நேரும் போது
  தூக்கம் இங்கு ஏது ...?
  ஓஹோ... ஒரே ஞாபகம்
  உந்தன் ஞாபகம்"

  என்ன சார் சரிதானே...?

  ReplyDelete
  Replies
  1. எல்லா காதலும் பலிப்பதில்லை...காதல் போயின்..இன்னொரு காதல்! அது தான் மறக்கும் வழி..மனதை மாற்றும் வழி !

   Delete
 4. மொத்தத்தில் உங்கள் வாத-பிரதிவாதங்கள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. சாரே! உங்க டீம்லே ஜூனியரா எப்போ சேர்த்துக்குவீங்க ?

   Delete
 5. Replies
  1. உள்ளர்த்தமான சிரிப்பு தந்த நண்பருக்கு ..நன்றி!

   Delete
 6. தீவிர வாதத்தையும் ஒரு கட்டத்தில் திருத்தலாம். ஆனால் இந்த விதண்டாவாதம் இருக்கே...!!!

  ReplyDelete
 7. நல்ல தீவிரவாதிதான் போங்கோ!

  ReplyDelete
 8. டாட்டூ குத்தினது அவனா? அவளா? போட்டோல வேற மாதிரி தெரியுதே!! ஹிஹி

  ReplyDelete