Sunday, March 11, 2012

கோச்சை சேவலும் இட்லியும் பின்னே நானும்!

ஒரு கவிதையோ,திரைப் பாடலோ, கலைஞ்ரோ ,தலைவரோ பிரபல்ய மாகவேண்டுமெனில் அனைவரையும் கவர்வதாக அமையவேண்டும் !


கால வெள்ளத்தில் புதிது புதிதாக பல நவீனங்கள் நமக்கு அறிமுகமாகும்!
உலகமயமாக்கல் காரணமாக கலாச்சார பரிமாற்றங்கள் தற்போது வேகமாக நடந்தேறி வருகிறது! அவற்றில் ஒரு கலாச்சாரத்தின் உணவுகளும்,உடைகளும் பெரும்பங்கு வகிக்கின்றன!


ஏகோபித்த ஆதரவை அறிமுகமாகும் இடத்தில் பெற்றாலன்றி நவீனங்கள் எரி நட்சத்ரம் போல பொலிவிழந்து விடும் !


நவீனங்கள் வந்து பிரபல்யமானாலும், மனம் ஒருகாலையில் சலிப்படைந்து, தன கூட்டுக்கே திரும்பி வந்துவிடுகிறது! என்னதான் ஜீன்ஸ்,சுடி அணிந்தாலும் வேட்டி,சேலை அழகு வருமா? புரோட்டா,பிஸா,பிரியாணி,சில்லி என்றாலும் 


"தயிர்சாதம், இட்லி, சாம்பார், நாட்டுக் கோழி குழம்பிற்கு "இணை நமக்கு உண்டோ?


மதுரை முருகன் இட்லிக்கடையில் முகப்பில் இருக்கும் வாசகம்..


இட்லி ஒரு உன்னதமான உணவு ! - திருவாசகம் ..


எந்த நாட்டினருக்கும்,வயதினருக்கும் உகந்த உணவு! இட்லியின் அண்ணன் 
"தயிர்சாதம் "! சமைக்க,சாப்பிட,ஜீரணிக்க எளியவை!
பெரும்பாலான மத்திய வயது ஆண்கள் மெல்ல சமையலறையில் புகுந்துவிடுகின்றனர்! முதலில் ஆலோசனை..பிறகு தள்ளு .உனக்கு ஒண்ணுமே தெரியல ..என்று அடுப்பை! குடும்பஸ்திரிகளும் விட்டது சனி என்று மகிழ்வுடன்! 
ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவம் சமைக்கும் வீடுகளில் பெரும்பாலும் ஆண்கள் கைவண்ணம் தான்! எண்ணெய்,நெய் தாராளம் என்பதால் ருசி கூடி குழந்தைகள் ஆதரவு வேறு!


http://www.arusuvai.com/ இருக்கும் போது என்னகவலை ?

கொலச்ட்ரால் அதிகம் என்பதால் ஆட்டுக்கறி நிறுத்தியாகி விட்டது ! டேம் மீன்கள் வருடம் 4 மாதம் மட்டுமே கிடைக்கும்! எனவே கோழி மட்டுமே கதியாகி விட்டது! ப்ராய்லர் சலிப்பு! இறுதியில் சரண் நாட்டுக்கோழி தான் !
நாட்டுக் கோழி நல்ல ருசி என்றபோதிலும், சதையை விட எலும்பே அதிகம்!
அப்போது தான்,கடைக்காரர் எனக்கு "கோச்சை சேவல்" அறிமுகம் செய்தார்!
ஆட்டுக்கறி தோற்றது போங்கள்! நல்ல சதைப்பற்றும் கூடவே ருசியும்!


கோச்சை சேவல் என்பது சண்டைக்கு வளர்க்கும் சேவல்!தானியங்களைப் போட்டு செழு செழு என வளர்ந்து நிற்கும்!உரித்த பின்னும் 3 - 5  கிலோ எடை இருக்கும்! தேவையான அளவு வெட்டிக் கொடுப்பார்கள்!


எளிய முறை கோச்சை சேவல் சுக்கா குழம்பு!
* அரைக் கிலோ கறியை குழாய் தண்ணிரில் பலமுறை நன்கு அலசி வடிகட்டவும்.
* எட்டு பல் பூண்டு, இஞ்ச் நீள இஞ்சி பேஸ்ட்
* பொடிக்க: சீரகம், மிளகு தலா ஒரு தேக்கரண்டி,பட்டை மூணு துண்டு, ரோஜா மொக்கு ரெண்டு,கிராம்பு ரெண்டு!
* குக்கரில் நாற்பது மில்லி நல்லெண்ணெய், பத்து சொட்டு விளக்கெண்ணை ஊற்றி சூடாக்கி, பேஸ்ட் போட்டு வதக்கவும்! ஒரு நிமிடம் கழித்து கறியைக் கொட்டி பிரட்டவும்! உப்பு,அரைத்த பொடி, மிளகாய் தூல் ஒரு தேக்கரண்டி கலந்து பிரட்டி, ஒரு கிளாஸ் தண்ணீர் விடவும்!
* மூடி குண்டு போட்டு நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
*ஆவி அடங்கும்வரை காத்திருந்து தாளித்துக் கொட்டி,சிறிது வெண்ணை சேர்த்து ஏழு நிமிடம் சிம்மில் வைக்கவும் .
* சுக்கா தயார்!


சைவர்களுக்கு எளிய கோவை அன்னபுர்ணா தேங்காய் சட்னி!


* அரைமூடி உடைத்து, பின் தோல் சீவிய தேங்காய் துண்டுகள், ரெண்டு பச்சை மிளகாய் ,உப்பு மட்டும் போட்டு தண்ணீர் விடாமல் மை போல் அரைத்து,தாளிப்பு சேர்க்கவும்.  


இப்போதெல்லாம் அதிகம் வெளியே சென்று அசைவம் சாப்பிடுவதில்லை ..
ஆர்வமுடன் செய்து பாருங்கள் ..நண்பர்களே ..
நம் கைப் பக்குவம் ..வயிற்றுக்கும் ..வாழ்க்கைக்கும் நல்லது!
வீட்டம்மணிகளும் வாய்திறக்க முடியாது!


ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!
(ஏற்கெனவே கோச்சையின் மகத்துவத்தை நண்பர் ஒருவர் பதிவிட்டிருந்தாலும் , என்னுடைய அனுபவத்தையும் வலையேற்ற ஆசை கொண்டேன்!..)9 comments:

 1. அசைவ உணவுக்காரர்களுக்கு அருமையான டிப்ஸ்
  சொல்லிச் சென்றவிதம் செய்யத் தூண்டுவது போல இருப்பதே
  பதிவின் சிறப்பு.இன்று ஞாயிறு ஜமாயுங்கள்

  ReplyDelete
 2. Ramani sir!

  நான் ரசித்தவற்றை நண்பர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் ஆர்வம்தான்!

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ரமணி சார்!

  ReplyDelete
 3. பக்குவத்தினை பக்குவமாக
  உரைத்தமை அழகு நண்பரே...

  ReplyDelete
 4. "தயிர்சாதம், இட்லி, சாம்பார், நாட்டுக் கோழி குழம்பிற்கு "இணை நமக்கு உண்டோ?

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....அருமையான டிப்ஸ்...

  ReplyDelete
 5. மாப்ள டிப்ஸ் ஜூப்பரு...இங்கன நான் செஞ்சி பாக்குறேன்...சிக்கன் ஆச்சே!

  ReplyDelete
 6. எங்களைப் போல சமையல் கத்துகுட்டிகளுக்கு நல்ல டிப்ஸ் .

  ReplyDelete
 7. Padathai paarthavudan
  Pasi vayitrai killukirathu....

  ReplyDelete
 8. படங்களை பார்த்தவுடன் வாயில் எச்சிலூறுதே. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete