Thursday, February 23, 2012

நானும் எனது சொந்த ஊரும்!! (தொடர்பதிவு)

ஒரு தூரக்குடி காத்து இந்த மேகாத்தை கதை அதுவும் மூலக்கதை சொல்ல அழைக்குது!வசந்த மண்டபத்துல இருக்குற மகேந்திர ராசா இந்த நாடோடியின் கதைய சொல்லக் கேக்கனும்னு அன்புக் கட்டளை போட்டுட்டாரு!


அப்பனும் ஆத்தாளும் ஒரே ஊர்தாணுங்க! ஆனா சொந்தம்னு சொல்லிக்க ஒரு சதுர அடிகூட இல்லாத அவங்க பொறந்த ஊரு திருப்பூர் பக்கத்துல ஒரு கிராமம்!மேக்க கரிசலு..கிழக்க செம்மண்ணு! ஒரு பக்கம் பருத்தி..அடுத்த பக்கம் தக்காளி! மேக்காலையும் மேடு..கிழக்காலையும் மேடு..சின்னதா சரியும்.அதுல ஊரு! ஊரை சுத்தி வாய்க்கால் நல்ல ஆழத்துல ரெண்டு மாசம் தண்ணி ஓடும்..நிலத்துக்கு பாயாது..கிணத்து தண்ணிய மேல கொண்டந்துடும்!
லீவுக்கு மட்டும் போறதால பெருசா ஒட்டல!ஆளுங்களும் ஊரும்..!


பொழைக்கரதுக்கு ஊருக்குள்ள பெருசா வழியில்லாததால திலுப்பூருக்கொ
கோவைக்கோ இளவட்டங்கள் செட்லாய்ட்றாங்க..ஊருக்குள்ள பெருசுங்க நடமாட்டம் தான்!

சோசியத்துல சகட யோகம்னு சொல்றாங்க பாத்தீங்களா..என்ற அப்பாவுக்கு பொறவு எனக்கும் ரொம்ப பொருத்தமுங்க! அப்பா அரசாங்கத்ல சோலி பாத்ததால சக்கரம் கட்டிட்டு ரொம்ப ஊரு பாத்துட்டாரு!கூடவே நாங்களும்!

பொறந்துல இருந்து மேட்டூர்...நல்ல தண்ணி இறால் ..கோடை நோவுகள் அனைத்தும் வரிசையாக!  உயர்ந்த மனிதன், உலகம் சுற்றும் வாலிபன்..டார்ஜான் !

பொறவு பட்டுக்கோட்டையில ..குளத்துல நண்டு புடிச்சது.. நைட்டெலாம் கரண்டே இருக்காது ..ஆத்தாக்காரி அடிக்கடி எந்திரிச்சு விசிறி வீசிட்டு இருக்கும்! நாடியம்மன் கோவில் பண்டிகை,,டி.எம்.எஸ் கச்சேரி..கெளரவம்!


ஆறாப்பு கொமாரபாளயத்ல..மறக்கமுடியாத ஆத்மநாபன் வாத்தியாரு..பண்டிகைங்க .கலை நிகழ்ச்சிங்க .வண்டியில டான்ஸ் .காவிரி ஆத்ல கபடி ஆடனது . சைக்கிள் கத்துகிட்டது .பண்ணி மேச்சு அப்பாட்ட பெல்ட்ல அடிவாங்கினது  .வாழ்க்கையில முதலும் கடைசியுமா பொண்ணுகள கேலி செஞ்சது..அதுவும் ஒரு கண்டிப்பான வாத்தியார் பொண்ண! அவர் வேறொன்னும் கேக்கல..ஏண்டா ..நீயா  அப்டின்னாரு!
அவர் அப்படி கேட்டது ஆயுசுக்கும் மறக்காது! அன்னியில இருந்து அம்மணிக ஏதாவது கேட்டா தான் பேசுவேன்..நானா அவிக பக்கம் தலைய திருப்பறது கூட இல்ல! பாபி ..ஷோலே ..அன்னக்கிளி ..அவன்தான் மனிதன் ..!

ஒருவருசம் சிங்கார சென்னை அமிஞ்சிக்கரை வாசம்!நல்லா கிரிகெட் வெளையாடி பழகினது அங்கதான்!திரு.வி.க பள்ளி !முள்ளு இல்லாத மீனு ..
மாசம் ரெண்டு சினிமா ..பீச் ..கோயில்னு ஒருவருசம் சீக்கிரம் ஓடிருச்சு! 16 வயதினிலே ..எக்சார்சிஸ்ட் ! ஆனாக்க இந்த காலத்ல சென்னைய சுத்தி பாக்குறோமுனு ஊர்ல இருந்து மாத்தி மாத்தி உரம்பரைங்க வந்தாங்க!ஆரம்பத்ல பெருமை.. அப்புறம் ஒரே இடஞ்ச்சலா போச்சுது! பாத்தாரு எங்க நைனா ..சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிட்டாரு!


அங்க போன அல்லாரும் விரோதமாவே நடந்துட்டாங்க ஒரு மாசம் ..மெட்ராஸ் காரனுட்டு !விளையாட்லயும் படிப்புலயும் முதல் வந்ததால பொறவு ஏத்துகிட்டாங்க! கிராமத்து லைப்ரரில முக்கால்வாசி புக் படிச்சு இலக்கிய பித்து ஏறித் திரிஞ்சேன் கொஞ்ச நாளு..சுஜாதா ..பாக்கியம் ராமசாமி ..சோவியத் ..சாவி ..சாண்டில்யன் ..நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்!


பொறியியல் பட்டயப் படிப்பு படிச்ச பொள்ளாச்சி ..மாலையில் சைக்கிள் உலா ..
முரட்டுக்காளை ரஜினி சந்திப்பு, காலேஜ் சேர்மன், தங்க மெடல்,..
ஒருதலை ராகம்.. அலைகள் ஓய்வதில்லை ..வாழ்வே மாயம் ! கடைசி பத்து நாள் மனசு சஞ்சலப் பட்டது! மோத(க ) வந்த ஆபத்து ..தானே விலகிடுச்சு..நம்ம தைரியத்தைப் பாத்து!


ஒருவழியா வீடொன்னு காட்டி செட்லாணோம் கோவை புளமேட்ல..அட்ரஸ் கிடைச்சதே அப்பத்தான்! பட்டம், மேல்பட்டம் வாங்கினது ..யமஹா வாங்கினது ..வாலிபத்ல கத்துகிட்ட சில பழக்கங்கள் ..வாரம் ரெண்டு சினிமா, பைக்ல ஊட்டி,கேரளான்னு ஜாலியா போயிட்ருந்தது! மாப்ள எப்படியும் மாட்டுவான்னு ஜோட்டளிங்க சவால் உட்டானுங்க! நமக்கு கொஞ்சம் ஈகோ ஜாஸ்தி! ஏர்கெநவே வாத்தியார் வேற மனச திடம் பண்ணி வெச்சிருந்தாரா..எந்த பொண்ணுகிட்டையும் பேச்சே வெச்சுக்கல!

அப்பா என்ன வேலைக்கு போனது போதும் ..பிசினெஸ் செய்யுனாறு ..மறுபடியும் சட்டி தூக்கீட்டு திலுப்பூர்! கல்யாணம்,குழந்தைக, வீடுன்னு இங்கே 
தான் இப்ப இருக்கேன்! அப்படியும் பாருங்க 5 வருசமா துங்குறது மட்டும்தான் திலுப்புர்ல..பிசினெஸ் கோவைல!


 எப்படி நம்ம நாடோடி ஜிந்தகி?


என் வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில்தான்! எந்தவித வசதியும் இல்லாமல் உலக அளவில் சுயம்புவாக ,உழைப்பினால் உயர்ந்து நிற்கும் எங்கள் பகுதி!

எங்களை சோர்வடைய செய்யாமல் உற்சாகப்படுத்துவது, சித்திரையில் சீர்புட்டி, வைகாசியில் சாரலடித்து, ஆடியில் ஆர்ப்பாட்டம் செய்து,புரட்டாசியில் புரண்டு போகும் " மேக்கத்துக் காத்து" தான்!
எங்கள் தொழிலுக்கு வேண்டிய மின்சாரத்தையும் காத்தாடி வாயிலாக 
அள்ளித்தரும் இந்தக் காத்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக வரும் 
"கோவைக் காற்று"!


பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை! எங்கள் பகுதி அறிவு,தொழில், கிளைமேட், மனிதர்கள், ..இவற்றைஎல்லாம் அனைவரும் அறிவர்! பம்பாய்,சென்னைக்கு செல்ல பயப்படும் அன்பர்களை ஆவலுடன் வரவேற்கும்
எங்கள் கொங்கு மண்டலம்!


என்னைப் பின்தொடரும் எல்லோரும் இந்தத் தொடர்பதிவை எழுதுமாறு அன்புடன் அழைக்கிறேன்! 


வாருங்கள்! தாருங்கள்!
12 comments:

 1. அன்புத் தோழரே,
  வணக்கமுங்க.
  என் அழைப்பை ஏற்று அழகு கொஞ்சும்
  கிராமியத் தமிழால் சிறப்பானதொரு
  தொடர்பதிவை அளித்தமைக்கு நன்றிகள்.
  வாத்தியாருன்னு சொன்னதுமே தானாக மனதில்
  ஒரு மதிப்பு வந்து உட்கார்ந்துருச்சு.
  மிகவும் ரசித்தேன் நண்பரே.

  ReplyDelete
 2. அன்பு மகேந்திரன் sir!


  விரைந்து வந்து வாழ்த்தியமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 3. சொல்லிப் போனவிதம் அருமை
  சினிமாப் படங்களைக்கொண்டும்
  இலக்கிய நூலகளைக் கொண்டும் எங்களையே
  வருடத்தை ஊகிக்கவைத்ததை மிகவும் ரசித்தேன்
  படித்து முடிக்கையில் ஏனோ யாதும் ஊரே
  யாவரும் கேளிர் என்கிற பாடல் நினைவுக்கு வந்து போனது
  ஒருவேளை பதிவின் அடி நாதம் அதுதானோ
  மனம் கவர்ந்த பதிவு.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. சிறுவாணித்தண்ணீரும் சிலுசிலு காற்றும் கோவையின் சிறப்புகள்

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் sir!

  இப்போது ஊர் பெருத்துவிட்டதால், சிறுவாணித் தண்ணீர் பாதி கோவைக்குத்தான் சப்ளை!மீதி ஏரியா எல்லாம் பில்லூர் தண்ணிதான்! வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 6. Ramani Sir!

  நுணுக்கங்கள் எல்லாம் தாங்கள் அழகனின் சோலையில் அருளியது தான்! தங்கள் அனுமானம் மிக்க சரி! மகிழ்ந்தேன் வருகைக்கும் பொருளுரைக்கும்!

  ReplyDelete
 7. KM.Sekar Sir!

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 8. பாலக்காட்டுக் கணவாய் வழியாக வரும் "கோவைக் காற்று"!

  ஜிந்தகி ஜிந்தாபாத் !

  ReplyDelete
 9. அருமை அருமை. தமிழ் நாட்டில் , கன்யாகுமரி, கோவை நீலகிரியை தவிர எல்லா மாவட்டங்களையும் நன்கு அறிவேன்.நீங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தை சுவைபட நேர்த்தியாக எடுத்து சொன்ன பாங்கு, நானும் உங்கள் கூடவே பயணித்த மாதிரி அனுபவம் பெற்றேன்.நன்றி வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. இராஜராஜேஸ்வரி Madam!

  வருகைகும் கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 11. chinnapiyan Sir!

  முதல் வருகையும் கருத்தும் ஆனந்தம்! உங்கள் வருகையை கொங்கு மண்டலம் ஆவலுடன் எதிர்நோக்கும்!விரைவில் வருக!

  ReplyDelete