Wednesday, February 8, 2012

நமக்கெதுக்கு வம்பு !

 அன்னாடம்   நம்மள நிறைய மனுஷங்க பாதிக்கிறாங்க! தெரிஞ்சி சிலபேரு, தெரியாதவங்க,உறவுங்க .. சோலிககாரங்க..ஜோட்டாளிங்க ..ரோட்ல .செய்தில..நாட்ல ..உலகத்துல.. எத்தனையோ ..அத்தனையையும் சகிச்சுக் கிட்டு தாண்டித்தான் போயிட்டு இருக்கோம்!

அதுல நீங்க பார்த்தது வேற! நம்மோடது வேற! ஆனாக்க பாதிப்பு உண்டு!
சிலது ரசிக்கிற மாதிரி, எரிச்சல் சிலதுன்னு பலரகம்! அதே மாதிரி நம்மனாலேயும் மத்தவங்களுக்கு பாதிப்பு உண்டு! இப்ப நான் உங்கள பிளேடு போடலையா ..அப்படிக்கா !    

நடனப் புசல் தேவப் பிரவு இருக்கார் தானே!அவரோட ஜீன்,குரோமோசோமு எல்லாமே ரிவ்ர்சுல அவரோட அப்பா அந்தரம் கிட்ட போயிடுச்சாம்!என்ன முழிக்கிறீங்க..இது எப்படி சாத்தியுமுனு தானே!தேவப் பிரவு கண்ணாலம் கட்டாமையே நவீன தாடகி யோடு குடும்பம் நடத்துற மாதிரி, அப்பா அந்தரமும்  38  வருஷமா,வெளிய தெரியாம ஒரு அம்மணியோட குடும்பம் நடத்துனார்நும் 
செய்தி! எது முன்னாடி வந்தது? பையனப் பத்தியா..அப்பனைப் பத்தியா?
பையன் தானே பர்ஸ்ட்! அப்பா அவர் ஜீன் தான் பர்ஸ்ட் ..பெஸ்ட்!

நம்ம தமிழ்நாட்டு திரு ,,க் குவளை வாரிசு அரசியலைப் பாத்துட்டு அவனவனுக்கு ஆச கிளம்பிடுச்சு! யாருன்னு கேக்கிரீங்களா?..அதாங்க அந்த மிக்சர் பொட்டல இட்லியம்மாவூட மாப்ளே! பொண்டாட்டி தோள் உசரமே இர்ந்துட்டு பயபுள்ளைக்கு திடீருன்னு ஆச வந்திட்டு!வந்ததே பாருங்க புளியங்காவுக்கு கோவம்! பத்ரகாளி டேன்ஸ் ஆடி ஊட்லே குந்திக்கோ!பந்திக்கு வராதேனு சொல்லிடுச்சு!

நாமதான் அல்லாருக்கும் பேரை மாத்தி வெக்கிறம்னா, பழைய பாட்டாளிt வீல்முருகன் தன்னோட சின்னய்யாவ பொது இடத்துல வெச்சு கொம்பு மணின்னு பட்டப்பேர் வெக்கிறாரு..கவுண்டமணி கணக்கா!

பதிவுலக நாட்டாமைக புதுசா திருநங்கைகள  கோவிலுக்கு பூசாரியா போடலாமேன்னு கேக்கறாங்க! நாமெல்லாம் கோவிலுக்கு போறமா வந்தமானு இருந்தம்னா, சாமிய கும்புடாத அறிஞ்சர்க புதுசு புதுசா கோவில பத்தியே ஆராச்சி பண்ணுறாங்க! ஏன் இவங்களே ஊருக்கு ஒரு கோவிலைக் கட்டி, ஈ.சி.ஆர். காமசாமி சிலைய வெச்சு, யார வேணும்னாலும் பூஜாரியா போட்டுக்கலாமே!

இப்ப நடக்குற அரசை மின் மைனாரிட்டி அரசுன்னு ஏன் சொல்லக்குடாதுனு கலைஞ்சர் இன்னும் ஏன் சொல்லலை?

குறைந்த மின்சாரம் ....நிறைந்த கட்டணம்! இதுவே இனி தாரகை மந்த்ரம்!

2004 க்கு முன்னாடி சுனாமி எப்ப இந்தியாவுக்கு வந்துச்சு? மறுபடியும் சுனாமி வந்தா குறி வெச்சு உலைகள மட்டுமே தாக்குமா? கரையோரம் வீடுகள ஒன்னும் பண்ணாதா?பயமிருக்குன்னா ..தமிழ்நாடு பூரா கடற்கரையோரம் சுமார் 10 கிமிக்கு அல்லாரையும் வீட்ட காலி செஞ்சுட்டு மலைஅடிவாரத்துக்கு குடி போயிடலாமே! சூட்கேஸ் மினி அணு குண்டெல்லாம் வந்தாச்சு!ரஷ்யா உடஞ்சசதுக்கு பொறவு அங்கிருந்து சில ஐட்டங்க எங்கியாவது மத்த பக்கம் போயிருக்க்கலாம்னு பேசிக்கிறாங்க!


விலையில்லா கர்மாக்களை நிறுத்திட்டு கரிய வாங்கி கொடுத்த கரண்ட் கொஞ்சமாவது கிடைக்குமில்ல!


நாம உலைய பிரச்னை பண்ணப்போக அவிக அணைய கிளப்பிட்டங்கன்னு பேச்சு! தீர்ப்பு குளிர்ச்சியா இருந்தா உலை ஸ்டார்ட் ஆகிடுமாமே!


வெளிநாட்டுத் தமிழரை   விட்டு தமிழ்நாட்டுலேயும் பிரச்சனை இருக்கு,அப்படின்னு சொல்லி மைகோ,விருமா, அவங்கள சேந்தவங்கள உசுப்பி விட் சொல்லணும்! 
தமிழ்நாட்டுப் பிரச்சனையைக் கண்டுக்காம ஓட்டு மட்டும் போடமற்றங்கன்னு புலம்பி என்ன பிரயோசனம்?  


என்னவோ போங்க எத்தன பேரு என்ன கும்மி அடிக்கப் போறாங்களோ ?
பயம் ..பயம்!
11 comments:

 1. நீங்கள் நாசூக்கா தொட்டுப் போற விஷயமும்
  சொல்லிப் போறவிதமும் அருமை
  அதுக்கு ஏற்றர்ர்போல படம் அமைத்ததுதான்
  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ரமணி சார்!

  வருகைக்கும் உற்சாகப்படுத்தலுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 3. மாப்ள எதோ எதோ சொல்ரய்யா ஹிஹி...நான் இல்லீங்க்!

  ReplyDelete
 4. மாம்ஸ் ! நீ முன்னாடி போனா.நான்.பின்னாடி வாரேன்! எல்லாம் நீ சொல்லிக் கொடுத்தது தானே!

  ReplyDelete
 5. வயிறெரிஞ்சு எழுதிருக்கீங்க என்பது மட்டும் தெரியுது...

  ReplyDelete
 6. வாங்க அட்வகேட் ஐயா! நீண்ட விடுமுறையில் இருக்கிறீர்கள் போல!

  ReplyDelete
 7. குறைந்த மின்சாரம் ....நிறைந்த கட்டணம்! இதுவே இனி தாரகை மந்த்ரம்!
  >>>
  சுமோ வரப்போகுது. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் sir!

  கொங்குச்சிங்கம் பயப்படாது! எம்மக்களின் வயிற்றெரிச்சலே என் எழுத்துகளில்!

  ReplyDelete
 9. வணக்கம் தலை நலமா? உங்களை மாதிரி நாட்டுக்கு தேவையான பதிவா எழுதுங்கள் என்று சொல்றீங்கள்.. இல்லாட்டி வெறுப்பை உமிழ்வதாக அர்த்தம் என்றும் சொல்வீங்கள். சரி உங்கள் படத்துக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லையே தலை. ஒருபெண் அரை குறை ஆடையோடு, இன்னும் இரண்டு பெண்கள் முழுக்க போத்தி கொண்டு இதில் இருந்து என்ன சொல்ல வருகிறீர்கள் தலை. கொஞ்சம் விளக்கமா சொன்னா எங்களை போன்ற ஆட்களுக்கு விளங்கும் இல்லையா?

  ReplyDelete
 10. PUTHIYATHENRAL!

  வாருங்கள் சிந்திப்போரே! என்ன இனியும் யாரும் கும்ம ஆரம்பிக்கவில்லையே என நினைத்து இருந்தேன்! வந்துவிட்டனர் நாட்டுப்பற்று ஆவேச அணியினர்!அந்தப் படம் பற்றி நானும் சிந்தித்து பார்த்தேன்.விளங்கவில்லை!அதனால் மற்றவர்களின் கருத்துக்கு விட்டுவிட்டேன்!

  ReplyDelete
 11. PUTHIYATHENRAL!

  மெல்லிய நகைச்சுவை வெளிப்படுமாறு எழுத முயற்சித்து வருகிறேன்!எல்லாரும் ஆவேசவயதைக் கடந்து வந்தவர்தான்! வெட்டி ஆவேசத்தால் பயனில்லை என்பதை உணர்ந்து இருப்பதால்,ஆவேச மனிதர்களுக்கு "ப்ரேக்" போடும் விதமாக,வாலண்டியராக வந்து அடிவாங்கி கொண்டிருக்கிறேன்!ஆனால் நீயும் வேண்டுமானால் வெறுப்பைக் கக்கு!நாங்கள் இப்படித்தான்...ஒருதரம் சொன்னால் விளங்காதா என கேலி வேறு! உங்கள் கருத்துகளில் கோபமிருக்கலாம்! ஆனால் சொந்தங்களை வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்!

  ReplyDelete