அன்னா ஹசாரேவை, மேல்தட்டு நடுத்தட்டு மக்களின் பிரதிநிதி! அவர் மாற்று காந்தியல்ல! அவர் மக்கள் ஆதரவைப் பெற்றாலும், அவரை போல நான் மாற விரும்பவில்லை என திருமொழி மலர்ந்துள்ளார்! மேலும் ஹசாரே நடந்து வந்த பாதையில், அவர் நடந்து வந்த விதம் குறித்தும், விமர்சித்து கண்டங்களை எழுப்பியுள்ளார்!
அன்னாவுக்கு தன்னைப்போல, தன் அபிமான இயக்கத்தைப் போல கடைத்தட்டு மக்களின்பிரச்சனைகளின் மேல் அக்கறையில்லை என் குற்றமும் சாட்டியுள்ளார்!
தீவிரப் புரட்சியாளர்களின் மானசீக தலைவியாக மாறியுள்ள அருந்ததி, நாட்டில் எந்த விஷயமானாலும் கீழ்த்தட்டு மக்களுக்கு மட்டுமே போராடும் உரிமை உள்ளது, அதனையும் அவர்கள் சார்பாக போராடுவதற்கு எமது இயக்கத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதைப் போலப் பேசி வருகிறார்!
மாற்றுப் போராளிகளை மட்டம் தட்டுவதும், அவர்தம் செயலில் குற்றம் காண்பதும், அவர்தம் தகுதியை ஏளனம் செய்வதும் - பிரபாகரனின் வீழ்ச்சிக்குப் பிறகும் இவர்கள் புரிந்து கொள்வதில்லை போலும்!
"எங்கோ போன மாரியாத்தா!
என்ற மேல ஏறாத்தா!" எனும் கதையாக மாற்றுப் போராளிகளை பின் தொடரும் மக்களையும், நிறபேதம், வர்க்கபேதம் காட்டி வைதுள்ளார்!
ஒன்றை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்! அன்னா மக்களைத் திரட்டவில்லை! மக்கள் எண்ணம் தான் அன்னாவின் மூலம் வெளிப்பாடாயிருக்கிறது! அதற்குக் காரணம் தொடர்ச்சியாக வெளியான அரசியலர்/அதிகாரிகள்/பெருமதிபர்கள் கூட்டணியினர் நடத்திய உழல்கள், கொள்ளைகள், அபகரிப்புகள் மற்றும் கறுப்புப் பண முதலீடுகள் குறித்த செய்திகளும், அவற்றை அரசாங்கம் மறைக்க எடுத்த முயற்சிகளும்!
மாற்றுப் போராளிகளின் இலக்கும் குறிக்கோளும், நம்மில் இருந்து வேறுபட்டிருப்பதால், அவர்கள் நாம் குறை கூறுவது அறிவார்ந்த செயலும், நன்மையளிக்கும் பயனும் இல்லாதது!
அன்னாவின் போராட்டம் பொதுப் பிரச்சனை அடிப்படையில் அமைந்துவிட்டது! அருந்ததி குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் பிராந்திய அடிப்படையில் அமைந்துள்ளது! பிராந்திய பிரச்சனைகள் அந்த அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே உண்மையான வேகத்தையும், மற்ற மக்களுக்கு அனுதாபத்தை மட்டுமே கொடுத்து வருகிறது! இது ஒரு இயற்கையான நிகழ்வு!
அன்னாவின் போராட்டத்தில் செய்தி ஊடகங்களின் பங்கே, பிரதானமெனினும், மக்களின் ஆதரவின்றி எந்தப் போராட்டத்தையும் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லமுடியாது! இப்போது கூட அருந்ததி ராய்,வெகுஜன/கம்யுனிஸ அபிமான ஊடகமான 'ஹிந்து' வாயிலாக, வெளியிட்டாதாலே, பரவலாக சென்றடைந்தது! எனினும் மக்கள் ஆதரவு இல்லாததால் அன்னாவுக்கு எதிரான, சிறு அலையாக மாறி வலுவிழந்துவிட்டது!
அருந்ததி அபிமான இயக்கங்களின் கொள்கைகள், விரும்பும் மாற்றங்கள் நியாயமானவை என்றாலும், இயக்கவாதிகளின் இயக்கங்கள் உணர்ச்சிமிக்கதாயும்,வன்முறைக்குட்பட்டு இருப்பதாலும், வெகுஜன அபிமானத்தை பெறுவது கடினமாயும் உள்ளது! போராட்டங்கள் குழுக்கள் அடிப்படையில் நடைபெறுவதால், தகுதியான தலைமைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது!
அருந்ததி செய்ய வேண்டியதெல்லாம், தீவிர போராட்ட குழுக்களை ஒருங்கிணத்து, தகுதியான தகுதிகளை கொண்ட தலைமைகளைத் தேர்ந்தெடுத்து, வன்முறை பாதையைத் தவிர்த்தால், வெகுஜன ஆதரவு தானே கிடைக்கும்!
மக்களின் தொடர் ஆதர்வின்றி எந்த இயக்கமும் வெற்றி காண இயலாது!
தமக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதால், மக்களை திட்டிப் பயனில்லை!
தமக்குக் கிடைக்காத மக்கள் ஆதரவு, மாற்றுப் போராளிகளுக்கு கிடைக்கிறதே என்று வயிறு எரிந்தால் மட்டுமே ஜெயமில்லை!
தேவை சுய விமர்சனமும், வன்முறை விலக்கலும், தகுதியான தலைமையும்!
போராளி குழுக்களின் மானசீகத் தலைவியான அருந்ததிக்கு அந்த தகுதி உள்ளது!
செயல் படுத்தினால்,
அருந்ததி
அன்னாவைப் போல்,
அக்கா அருந்ததியாக
உருவெடுக்கலாம்!

மாப்ள இப்படியும் துடுப்பு போடுறாங்களே என்னத்த பண்ண!
ReplyDeleteஅக்காவுக்கு நக்கீரப் பரம்பரைங்கிற நெனப்பு!
ReplyDeleteஅல்லாருக்கும் போலி பட்டம் கொடுக்கிற, இவங்க தாங்க நடமாடும் யூனிவசிடி!
//அருந்ததி செய்ய வேண்டியதெல்லாம், தீவிர போராட்ட குழுக்களை ஒருங்கிணைத்து, தகுதியான தகுதிகளை கொண்ட தலைமைகளைத் தேர்ந்தெடுத்து, வன்முறை பாதையைத் தவிர்த்தால், வெகுஜன ஆதரவு தானே கிடைக்கும்!//
ReplyDeleteஉண்மைதான். வெகுஜன ஆதரவை பெறும் போராட்டங்கள் தான், அனைத்து தரப்பு மக்களின் வெளிப்பாடாக கணிக்கப்படுகிறது.
சரியாச்சொன்னீங்க .
ReplyDeleteபாரத்... பாரதி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நண்டு @நொரண்டு -ஈரோடு!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மக்களின் உணர்வுகளை எதிரொலிக்காத
ReplyDeleteஎந்த தலைவனோ அல்லது இயக்கமோ
வெகு நாள் நீடித்ததில்லை
முன்பெல்லாம் நரி இடம் போனாலும்
வலம் போனாலும் கடிக்காமல் இருந்தால் சரி என்கிற
மனோபாவத்தோடு இருந்த நடுத்தர மக்களிடம்
இப்போது சமூகம் குறித்த அக்கறை அதிகரித்து
வருவதன் விளைவே இந்த எழுச்சியெல்லாம்.
அன்னா கஸாரே ஊழலுக்கு எதிரான
மக்களின் ஏகோபித்த உணர்வுகளுக்கு
நல்ல வடிகாலாக இருக்கிறார்.ஜொலிக்கிறார்
இதை அருந்ததிகள் புரிந்து கொள்ளவேண்டும்
சிந்தனையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரமணி சார்!
ReplyDeleteகுறையில்லா மனிதர் எவர்? அன்னா விதி விலக்கல்ல!ஆனாலும் மக்கள் ஆதரவைப் பெற்றதினாலேயே போராட்டத்தை, முன்னெடுத்து செல்ல முடிந்தது!
அன்னாவை 'போலிப்போராளி" என முத்திரை குத்தும் அருந்ததி, எவ்வாறு தன் இயக்கங்களுக்காக, மக்களைக் கவரப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!