Showing posts with label கூடார வல்லி. Show all posts
Showing posts with label கூடார வல்லி. Show all posts

Thursday, January 10, 2013

கூடார வல்லியன்று பால்சோறு தின்னும் கும்மாளம் !குதூகலம் !



கண்ணனின் அன்பை வேண்டி..மார்கழி மாதம் முதற்கொண்டு அதிகாலை விழித்து,நாட்காலையில் நீராடி ..நெய்யுண்ணோம் ..பாலுண்ணோம்..மலரும் மற்ற மை அலங்காரமும் செய்யோம் ..பொல்லாங்கு பேசமாட்டோம் ..என வைராக்கியம் பூண்டு ..மாயனின் பல்வேறு லீலைகளை சொல்லி பாடி மகிழ்ந்து ..நோன்பிருந்த நம் பாவைகள்..விரதநாட்கள் முடியும் தருவாயில் ..

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ..கொடுத்த பரிசாக எண்ணி ..சூடகமும்..தோள்வளையும் ..தோடும்.செவிப்பூவும்  சூடி அலங்காரமிட்டு புது ஆடைகள் அணிந்து ..



 பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார !

அனைவரும்  கூடி இருந்து கொண்டாடி மகிழும் நாளே .." கூடாரவல்லி " எனும் திருநாள் ! மார்கழி 27ம் நாள்!


இந்த பால்சோறு என்றால் என்ன ..என்று பார்ப்போம் !

இதுவும் ஒருவகை சர்க்கரைப் பொங்கல்தான் !

பாலிலேயே செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் !இதன் இன்னொரு பெயர் " அக்காரவடிசல்" !




எவ்வாறு செய்வது என்பது குறித்த காணொளி ..இங்கு இணைக்கப்பட்டுள்ளது !

இதை செய்து காண்பிப்பவர் ஸ்ரீ ரங்கம்  ராது மாமி ! இணைய உலகில் மிகவும் பிரபலமானது ..இவரது பல படைப்புகள் ! புது மணப்பெண்களுக்கும் ..சமைத்து சாப்பிடும் ஆண்களுக்கும் ..இவரது காணொளிகள் மிகவும் உதவி செய்கிறது ! யூ-ட்யூபில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் !







இரண்டு பகுதிகளாக காணொளிகள் கிடைக்கும்,,கண்டு செய்து உண்டு மகிழுங்கள் ! அற்புதமாக இருக்கும் ! ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் சந்நிதியில் அபூர்வமாகக் கிடைக்கும் !


பார்க்க இயலாதவர்களுக்காக !

தேவையான பொருட்கள் :
1.பச்சரிசி                  -  1 கப் 
2.பாசிப்பருப்பு          -  கால் கப்
3. பால்                       -  1 லிட்டர் 
4.நெய்                       -  150 மில்லி
5.உடைத்த வெல்லம் - 1 கப்
6.அஸ்கா சர்க்கரை - 1 கப்
(தண்ணீர் 2 கப், முந்திரி பருப்பு, ஏலக்காய் போடி, குங்க்குமப்பூ ..!)

செய்முறை:

1.முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும்.
2.வாணலியில் பாதி நெய்+பச்சரிசி+பாசிப்பருப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கணும்.
3.பால் 4கப் +தண்ணீர் 2கப் அதில் சேர்த்து 5நிமிடம் வேகணும்!
4.மொத்தக் கலவையை குக்கருக்கு மாற்றி 5,6 விசில் வரை வேகணும்!
5.மீண்டும் கலவையை வாணலிக்கு மாற்றி மீதி நெய் + பால் 2கப் சேர்த்து கொதிக்கனும். 5-7 நிமி
6. வெல்லம்+சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறணும்.
7.கெட்டியாகும் போது நெய்+முந்திரி +குங்க்குமப்பூ +ஏலக்காய் போடி சேர்த்து இறக்கிவிடலாம் 

8.ஆறினால் கெட்டியாகி விடும் !