Sunday, May 15, 2011

மாண்புமிகு அம்மா அவர்களே!

 மாபெரும் வெற்றியை அடைந்திட்ட, அம்மாவுக்கு வாழ்த்துக்கள்! யாரும் எதிர்பார்க்கவில்லை, இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு இருக்குமென்று! தாங்களும் எதிர்பார்க்கவில்லை என்று, தங்களின் முதல் பேட்டி வாயிலாக உணர்ந்தோம்! தமிழக மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைத்தது என்பதை விட,கடந்த ஆட்சியின்பால், மக்களுக்கு இருந்த வெறுப்புணர்வே, தங்களை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தியுள்ளது!

ஒழுங்கற்ற, செயலற்ற ஆட்சி நடக்கும் போதெல்லாம், அடுத்து வரும் தேர்தலில், மக்களின் கோபம், மிகப் பெரும்பான்மையுடன், ஆண்ட கட்சியைத் தூக்கி எறிந்தது, தமிழகத்தில் கண்கூடான வரலாறு!


ஊழல் மிகுந்த, ஒழுங்கீனமான ஆட்சியின் காரணமாக, தாங்கள் 1996 ஆண்டு, தோற்கடிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டீர்!2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, பழையத் தவறுகள் பெரியதாக நடைபெறவில்லையெனினும், அதிரடி ஆட்சியால், மக்களில் ஒருசாரார் ஆதரித்தாலும், பாதிக்கப்பட்டோரின், எதிர்ப்பால், 2006ல் ஆட்சியைக் கைவிட நேர்ந்தது!
கவர்ச்சி இலவசத் திட்டங்களால், 2006ல் அரியணை ஏறிய, தி.மு.கவினருக்கு, ஆட்சிக்காலத்தை, இலவசப் பொருள் விநியோகத்திற்கும், சொந்தக் குடும்பப் பிணக்குகளை நேர் செய்யவும், மத்தியில் தமது கட்சியினருக்கு, இமாலய உழல் செய்ய ஏதுவாக, பதவிப்போர் செய்தவாறும் கழித்து விட்டனர்!

பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களின் கூப்பாடு, கலைஞரின் காதுகளை சென்றடையவில்லை! இலவச இறுமாப்பு, முதுமை, சகோதர யுத்தம், பொருள் சேர்ப்பு ஆர்வம், சுயநலம், பதவி மோகம்..... இன்னும் சொல்ல நா கூசுகிறது!
அம்மா அவர்களே!

மக்கள் தங்களிடம் எதிர்பார்க்கும் நடவடிக்கைகள், கணக்கிலடங்கா எனினும், உடனடித் தேவைகள் சில இதோ!


1. பாவப்பட்ட மீனவர் கொலைத் தடுப்பு!
2. மின்சார சீரமைப்பு!
3. கடும் விலையேற்றத் தடுப்பு!
4. ஜவுளிப் பிரச்சனை!
5. சமச்சீர் கல்வி கோளாறு!
6. முறைபடுத்தப் பட்ட காப்பீடுகள்!
7. விளை பொருள் லாப விநியோகம்!
8. அண்டை மாநில உறவு மேம்பாடு - தண்ணீருக்காக!
9. உள்ளுர் தொழிற்பாதுகாப்பு!
10.களவாணிகளை ஒடுக்குதல்!
11. கல்விக் கட்டணக் கொள்ளைத் தடுப்பு!
12.இனியேனும் ஈழத்துயர் துடைப்பு!
13.சகோதரிக் குடும்ப ஒதுக்கல்!

விடுபட்டவைகளை தாங்களே அநுமாநித்து, ஆவன செய்யும்படி, வேண்டுகோள் வைக்கப்படுகிறது!


உங்களால் மட்டுமே முடியும் எனும் மக்களின், நம்பிக்கையை உறுதிப் படுத்துங்கள்!
3 comments:

 1. இந்த பெட்ரோல் விலை 5 ரூபாய் ஏறுதாமே.!! ஹி ஹி.. அதுக்கு இவர்கள் என்ன செய்ய முடியும்.? இல்ல செஞ்சால் தான் என்ன.?

  ReplyDelete
 2. மிகச் சரியான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறீர்கள்
  களவாணிிகளுடன் ரவுடிகளையும் சேர்த்துருக்கலாமோ?
  விலைவாசி உயர்வும் ஒருமுக்கியமாக கவனிக்கப் படவேண்டிய ஒன்று
  நல்ல பதிவு தொடர்ந்து வருகிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தம்பி சார்! ரமணிசார்!

  கருத்துகளுக்கு நன்றி!

  ReplyDelete