Saturday, September 8, 2012

மம்முட்டியின் உதவியும்..விமர்சகர்களும்!

மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி எனும் முகமதுகுட்டி, சமீபத்தில் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயம் பட்டோருக்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதற்காக, பல லட்சம் பொறுமான மருந்துகளை, ஒரு மருத்துவ நிறுவனம் மூலம் அளிக்க முன்வந்துள்ளார்!

மனிதாபமிக்க மகத்தான இந்த சேவை..பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது!

பொதுவாழ்வில் இருப்போர்க்கு..அவர்களுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறையை..செயலால் உணர்த்தும்... .. ..மம்முட்டியின் இச்செயல்!


சுனாமியின் போது இந்திநடிகர் விவேக் ஓபராயின் முயற்சியை, ஒப்பிட்டு கூறத்தக்க வகையில் மம்முட்டியின் செய்கை அமைந்துள்ளது! லாபத்தை ஏதும் இவர்கள் கணக்கிடவில்லை..மனிதாபிமானம் ஒன்றே தான் இவர்களின் செயல்களுக்குப் பின்னால்!

மம்முட்டியின் இச்சேவை பெரும்பான்மை பாராட்டு பெற்றிருப்பினும், மக்களின் கோபம் தமிழ்நடிகர்கள் மீதான கடும்விமர்சனமாக உருமாறி வெடிக்கத் துவங்கியுள்ளது!

கும்பகோணம் பள்ளி தீக்கொடுமையின் போது, நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீட்டு, பிறகு அதை செயற்படுத்த முனையாத தமிழ்நடிகர்கள் மீதும், நதிநீர் இணைப்பிற்கு நிதி அளிப்பதாக அளந்த ஸ்டைல்நடிகர் மீதும் மக்களின் கோபக்கணைகள் திரும்பியுள்ளன!


பொதுவாகக் கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்..ஏதாவது வேகத்தில் சொல்லி விடுவார்கள்..பிறகு மறந்துவிடுவார்கள் என்றாலும், தங்களை வாழவைக்கும் அவர்கள் சிறிய அளவிலாவது தொண்டாற்ற வேண்டுமென, மக்கள் எதிர்பார்ப்பு!

சூர்யாவின் அகரம், கமலின் ரத்தசேவை, சசிகுமாரின் கல்விச்சேவை..இவைப்பற்றி கேவலமாக விமர்சீக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்...திரைக்கு முன்னாலும் அவர்கள் நடிகர்களே எனும் பிரச்சாரத்தை..கைவிட வேண்டும்!

 மம்முட்டியின் உதவியும்..விமர்சகர்களும்!
சமீபகாலமாக தலைநிமிர்ந்து வரும், இன உணர்வாளர்கள்..வெறுமென வீம்புக்காக மம்முட்டியின் செயல்களை எதிர்க்காமல்..பெருந்தன்மை நமக்குமிருக்கிறது என காட்டவேண்டிய நேரம்!

தேர்தலுக்கு பலகோடிகள் செலவளிக்கும் அரசியல் சக்திகள்..தங்களின் சேமிப்பின் சிறுபகுதியை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து..வாழ்விழந்த மக்களுக்கு சிறுநம்பிக்கையை ஊட்டலாமே! அதற்கு மம்முட்டியின் இச்செவை ஒரு தூண்டுகோலாக அமையட்டுமே!





கடந்த ஒரு வருட காலமாக, இரு மாநிலத்தவர் இடையே ஏற்பட்டு இருக்கும் மனக்காயங்களுக்கும், மம்முட்டியின் இச்சேவை ஒரு காரணமானால் அது பாராட்டுக்குரியதே!

13 comments:

  1. சேவைகளில் அரசியல் இனம் மொழி கலப்பது ஆபத்து! துவேஷம் காட்டாமல் வறவேற்போம்!

    இன்று என் தளத்தில்
    அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

    சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

    ReplyDelete
  2. அன்புடையீர்.வணக்கம்.
    தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பித் தர இயலுமா?
    வணக்கம்.
    கொச்சின் தேவதாஸ்
    snrmani@rediffmail.com

    ReplyDelete
  3. manidhaneyaththai valarppom nandri
    surendran

    ReplyDelete
  4. /////சுனாமியின் போது இந்திநடிகர் விவேக் ஓபராயின் முயற்சியை, ஒப்பிட்டு கூறத்தக்க வகையில் மம்முட்டியின் செய்கை அமைந்துள்ளது! /////
    எங்கிருந்தோ வந்து தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்து நிவாரணம் அளித்தார் விவேக் ஓபராய்.இந்த செயலை ஒரு முன்மாதிரியாக எடுத்துகொண்டு கோடியில் புரளும் நம்ம நடிகர்கள் சுனாமியால் ஒவ்வொரு ஊரையும் தத்தெடுப்பார்கள் என்று பார்த்தால் நம்ம‌ புரட்சிகலைஞர் அவர்கள் "தமிழகத்தில் ஏகப்பட்ட மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் அவ்வாறிருக்க விவேக் ஓபராய் ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுப்பது என்பது தவறான செயல்" என்று இவ்வாறு விமர்சனம் செய்தார். தானும் செய்ய மாட்டார்கள் அடுத்தவன் செய்தாலும் விமர்சிக்க தவறுவதில்லை நம்ம சில தமிழ் நடிகர்கள்.தமிழன், மலையாளி என்று பாராமல் பாதிக்கப்பட்டது மக்கள் என்பதை உணர்ந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட மம்முட்டியின் இந்த உதவியையும் கொச்சைபடுத்தாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  5. மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம்.கேரளா மண் மம்முட்டி ஐயா அவர்களது மனிதாபிமான உதவிக்கு தமிழகமே வாழ்த்தி வணங்க வேண்டும்! தன்னலம் கருதாமல் செய்த உதவிங்க அது.PARAMES DRIVER - THALAVADY -ERODE Dt.

    ReplyDelete
  6. நடிகர் விவேக் ஓபராய், தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட எந்த பகுதியில் நலநிதி உதவிகளை செய்தார் என்பதை குறிப்பிட இயலுமா…
    …அன்புடன் கலாஷ்னிக்கோவ்

    ReplyDelete
  7. s suresh Sir!

    தங்கள் வரவும் கருத்தும் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. devadass snr Sir!

    தாங்கள் கோரியபடி செய்துள்ளேன்..! தங்கள் வருகை என் உவகை! நன்றி!

    ReplyDelete
  9. surendran Sir!

    தங்கள் கருத்து மிகவும் மேலானது..!நன்றி!

    ReplyDelete
  10. முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் Sir!

    சிறு பொறி போன்றது இத்தகு சேவைகள்..காட்டுத்தீயாய் இப்பழக்கம் பரவி இருக்க வேண்டும்..இதுவரை இல்லை..இனிமேலாவது இடரால் துயுருறும் மக்களுக்கு சேவையாற்றும் வழக்கம் நம்மிடையே உள்ள "செலிபிரிட்டி' களுக்கு வரட்டும்!

    கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  11. Paramesdriver Sir!

    மனிதாபிமானம் வளர்த்தெடுக்க வேண்டும்..மம்முட்டியின் இச்சேவை கொச்சைப் படக்கூடாது என்பதே நமது விருப்பம்!

    மிக்க நன்றி..தங்கள் வருகைக்கும்..கருத்துக்கும்!

    ReplyDelete
  12. kalashnicov Sir!

    கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டிணம்..!

    மிக்க நன்றி..தங்கள் வருகைக்கும்..கருத்துக்கும்!

    ReplyDelete
  13. Nalla pathivu itharkku thdarpudaiya pathivu www.sinthikkavum.net ell vanthulla pathivai padiklavum. Ungal karuthukkal varaverkkappadu kirathu.

    ReplyDelete